நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, July 11, 2012

நெஞ்சில மாஞ்சா இருக்கா

வணக்கம் 


அரசியல்வியாதிகள் 

நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க

பொது கணக்கு

ஏன் நம்பர் எல்லாம் ஒண்ணு ரெண்டுன்னு இருக்கு?  அப்படின்னு என்னைக்காவது தோணுச்சா.. 


1 அப்படின்னா ஒண்ணு, 2  அப்படின்னா இரண்டு, இதுக்கு ஏதாவது காரணம் இருக்கணுமே.... இருக்கு எல்லாமே கோணங்களை  அடிப்படையாக கொண்டு,, எத்தனை கோணம்  இருக்கோ அதை பொறுத்தே, 
எப்பூடி 
1 க்கு ஒரு கோணம் 
2 க்கு  இரண்டு கோணங்கள் 
3 க்கு மூன்று கோணங்கள்  
பாருங்கள் இந்த படத்தை:



வணிக கணக்கு 

 

ஆண்  : தேவையான  ஒரு பொருளுக்கு ரூ 2 கொடுத்து வாங்குவான்.

பெண் : தேவையில்லாத இரு பொருள்களை  ரூ 2 கொடுத்து வாங்குவாள்.


அலுவலக கணக்கு

புத்திசாலி  முதலாளி + புத்திசாலி ஊழியர் = இலாபம்

புத்திசாலி முதலாளி + மொக்க  ஊழியர் = உற்பத்தி

மொக்க  முதலாளி + புத்திசாலி ஊழியர் = பதவி உயர்வு




மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

நெஞ்சில மாஞ்சா இருந்தா புட்றா பாப்போம்....   

Monday, July 9, 2012

எளங்குட்டி....மூடுக்கு பாமாயிட்டேன்

வணக்கம் 


இந்த பதிவில் விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு,

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல - எல்லாம் கலந்த கலவையாக 

இரவில் படுக்கையில் தூக்கம்  வராமல் புரளுகையில் ஏதேதோ நினைத்துக்கொண்டு...ஒரு எண்ணம்  முளைத்தது அதை படாத பாடு பட்டு அடக்கி கொண்டேன். (அந்த மிருகம் அடங்க வில்லை பாக்கலாம் பாக்கலாம் எம்புட்டு நேரத்து அடக்கி வைக்கிறாய் என்று)

 எப்பவும் போல் அன்றும் விடிந்தது காலை உணவுக்கு பின் எந்த வேலையும் இல்ல (ஆணிக்கு விடுமுறை) என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் போது தனிமை கொடுமையானது  பொசுக்குன்னு ஒரு எண்ணம்  (அதான் அந்த மிருகம் விழித்துக்கொண்டது) மனதுள் வந்தது வந்த எண்ணமோ  நேரம் ஆக ஆக கூடியதே தவிர குறைந்த பாடில்லை சரி ஆசை பட்டுட்டோம் அனுபவித்து விட வேண்டியதுதான் இருந்தாலும், அம்மணிகிட்ட ஒரு வார்த்தை கேட்ருவோமே என உள்ளம் சொல்ல ச்சே இதை எல்லாம் எவனாவது போய் கேட்பானா தேவை இல்லை என மனமும் மூளையும் ஒரே போராட்டம் கடைசியில்  மனசாட்சி வென்றது -(எதையும் மறைப்பதில்லை.. நம்ம பாலிசி) 

அம்மணிக்கு போனை போட்டேன் (அம்மணி அருகில் இல்லை, இருந்தால் இந்த ஆசையே வந்து இருக்காது) திடீர் எண்ணத்தை  மெதுவா சொன்னேன்.

அம்மணி : நீங்க என்ன லூசா ஏன் உடம்பை கெடுத்துக்க...போறீங்களா???? அடங்க ........................? கொ.............? டை..................?..........................?...........................???
ஆசையாம் ஆசை.....ஏகப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறி (காரியம் ஆவணும்னா) முடிவில் என்னமோ பண்ணி தொலையுங்கள்.

ஷ்..யபா..அப்புறம் என்ன,.. அம்மணியை  சமாதானம் பண்ணியாச்சி...(நினைப்புதான்)  ஒக்கே சொன்ன பிறகு, அடங்குவானா இன்னும் கூடுதலாக  எண்ணம்  வெறியானது.


க்ளோஸ் நண்பர்களுக்கு தொலை பேசியில் தகவல் சொன்னதும்.........தல, மாப்ளே,,,இதை இதை தான் எதிர்பார்த்தோம் காஞ்சி போய் இருக்கோம் ஒக்கே ஒக்கே.

எம்புட்டு சந்தோசம் பய புள்ளைங்களுக்கு...ம்    சரி ரெடி பண்ணிட்டு கூப்டறேன்..


எனது நெருங்கிய (உங்க பாசையில் அல்லக்கை)  நண்பனை (அவன் என்னை சார் என்று தான் அழைப்பான்) அழைத்தேன் விடயம் சொன்னேன் - உடனே புறப்பட்டு வருவதாக  சொன்னான்.(பயபுள்ள அவனும் ஏங்கித்தான் கிடக்காம் போல)    சரி...

அவன்  வருவதால் என் காருக்கு வேலை  இல்லையே என்று ரெண்டு லார்ஜ் போட்டு மூடுக்கு பாமாயிட்டேன்...( சரக்கை தொட்ட கைகளினால் கார் ஸ்டீரிங் தொட மாட்டேன்....)

இனி நண்பனது வண்டியில்:


சார் எங்கே போகணும்? இளங்குட்டியா  இருக்கணும்  அப்பத்தான்  நல்லா   இருக்கும்  எங்கே இருக்கோ  அங்கே போ.. எங்கோ யாருக்கோ போனை போட்டான்....ஒக்கே ஒக்கே இரண்டு  இடங்களில் விசாரித்து முடிவில் இருக்கும் இடம் தெரிந்து,.... இளசுதான்....ம்  குட்டி கிடைத்து விட்டது. 

சார் எங்கே போகணும்? நேர வீட்டுக்கு போ - வரும் வழியில்  ஏதோ  ஞாபகம் வர....செல்லம் முக்கியமான ஒரு ஐட்டம்   இல்ல அது வேணும்...

கண்டிப்பா வேணுமா சார் - ஆமா அது இருந்தான் ரொம்ப நல்லா  இருக்கும், எனக்கு அது இல்லாம முடியாது. எதை பண்ணுனாலும் தெளிவா முறையா பண்ணனும்.

மீண்டும் கார் அது இருக்கும் இடம்   நோக்கி பயணித்தது பல கடைகளில் கேட்டும் அது  இல்லை வெறுத்துட்டேன் (என்ன சோதனை) முடிவில் பழைய ஞாபகம் வர சரி... நேர அங்கே போ என்று கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் பயணம் செய்து..... வாங்கி கொண்டு வீடு வந்து......யப்பா போதும்டா சாமி இப்பூடி ஆசை படுவானேன்  இபூடி அலைவானேன்.... இதுக்கு பேசாம....!?%#. ச்சே என்ன வாழ்க்கைடா..


அம்மணியிடம் இருந்து அழைப்பு, என்ன முடிஞ்சுடுச்சா? சந்தோசமா ஆசை அடங்கிடுச்சா??

இல்லைடா செல்லம் கேப் விட்டு போச்சா  அதான்   கொஞ்சம்   பயமா  இருந்துச்சி ஆனா ஹி ஹி நல்லா...ஹி ஹி.

ஏது  கேப் விட்டு போச்சா, இந்த விசயத்தில்,... உங்களுக்கு தான் கைவந்த கலையாச்சே..சரி சரி போதும் இந்த மாதிரி அடிகடி பண்ணி உடம்பை கெடுத்துக வேணாம்    என்னை கூப்பிட்டு அனுமதி கேட்டதால் இன்னைக்கு மட்டும்  மாப்பு... (மவராசி நீ நல்லா இருக்கோணும்) அப்பாடா...



அப்புறம் என்ன, எல்லாம் முடிச்சிட்டு...!!!!! நண்பர்களை அழைத்தேன் வந்தார்கள் ரெண்டை வீசினார்கள் முறையா சுவைத்தார்கள் ரொம்ப நாளாச்சி தல இந்த மாதிரி பிரியாணி சாப்பிட்டு மனதார வாழ்த்தி சென்றார்கள்.

டிஸ்கி : இளங்குட்டி   வெள்ளாடு  - அலைந்து வாங்கிய ஐட்டம் மல்லி இலை.. பொதுவாக கடைகளில் நான்வெஜ்  சாப்பிடுவது இல்லை அத்துடன் கடந்த ஒரு வருடமாக மட்டன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். எல்லாமே எதுனாலும்  சொந்த சமையல் தான்.


இந்த பதிவில் இருக்கும் படங்கள் சும்மா கலர் புல்லா இருக்குமேன்னு ஹி ஹி ஹி நன்றி கூகிள்.

Wednesday, July 4, 2012

ரசிக்க.. சிரிக்க.... சிந்திக்க - 18+

வணக்கம்


இந்த பதிவு முழுக்க முழுக்க வீடியோ கிளிப்கள் ஒரு மாறுதலுக்காக



யானை மசாஜ் செய்ய ஆசையா? தாய்லாந்தில் இது எல்லாம் சகஜம்

பாருங்கள் வீடியோ:





இந்த ஆட்டத்தை நேரில் பாக்க ஆசையா? ஆப்பிரிக்கா தான் போகணும் இல்லைனா ஆப்பிரிக்கா பப் உள்ள ஹோட்டலுக்கு போகணும்.

ஏதோ இப்படியாவது பாப்போமே..

பாடல் அரபி மொழியில் ஆடலோ ஆப்பிரிக்கா வழியில்:

பாருங்களேன்:




இந்த வீடியோ கிளிப் நீங்க தான் கருத்து சொல்லணும்

மனசாட்சி மிரண்டு போச்சி.... எப்பூடீ இப்பூடி??




மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

வாழ்ந்தா இப்படி வாழனும் - சிந்திக்கவும்  பாருங்க:



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

எம்புட்டு நாளைக்கு புகை படங்காட்றது ஒரு மாறுதலுக்கு படம் காட்டுவோமே எச்சரிக்கை 18 + (மன்னிச்)




Tuesday, July 3, 2012

அந்த பதிவுக்கு எதிர் பதிவு அல்ல

வணக்கம்


எலி பிடிப்பது எப்பூடின்னு மாப்ளே ஜீவா (கோவை நேரம்) ஒரு பதிவு போட்டாருங்க எலிய புடிச்சி காக்காவுக்கு போடணுமாம் சின்ன்ன புள்ள தனமாலே இருக்கு,          மாப்ளேயே, எலி வேட்டை ன்னு ஒரு பதிவ தேத்தும் போது  நாங்கெல்லாம்  யாரு  விடுவோமா  தேத்திடோம்ல ஒரு பதிவ ஹி ஹி ஹி.,

எலிய  புடிச்சி பயபுள்ள என்ன பண்ணுது வாங்க பாக்கலாமா:

இதயம் பலகீனம் உள்ளவர்கள்  நேரடியாக,..

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல பகுதிக்கு செல்லவும்


(வழக்கம் போல் படங்களை பெரிது பண்ணி  பார்க்கவும்)





புடிச்சாச்.....


கிழிச்சாச்

யப்பா... சுத்தம் செய்தாச்

குச்சியில் சொறுகியாச் அதான்  கப்பாப்  கப்பாப்...

சுட்டாச்...... அப்பறமென்ன ஹி ஹி ஹி


இப்பூடி  சுட்டு  மக்காள்,  சைனாக்காரன் சாப்புடுறான்.












மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


உங்களை நேசிக்கும் ஒருவர் தான் நித்தம் உங்களுடன் சண்டை போடுவார் எந்த காரணமும் இல்லாமலே,..

ஆனால்,

எப்ப எல்லாம் நீங்கள் கவலையுடன் சோர்வுற்று இருப்பிர்களோ

அப்போதெல்லாம் உங்களை நேசிப்பவர் உலகத்துடன் போராடி உங்களின் கவலையை போக்குவார்.

அதுக்கு பெயர் தான் உண்மையான நேசிப்பு



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

எலி பதிவுல என் படமா மனசாட்சியே இது முறையா???

விழியே  விழியே உனக்கிந்த கோபம்

விருந்துக்கு வாரீய்யா எலிக்கறி சாதம் 




டிஸ்கி : விரைவில் உங்கள் மனசாட்சி வெளியீடும் பதிவுகள்  


காமம் காதல்  சிறப்பு பதிவு.

போதை சரக்கு  ஆய்வு பதிவு.


Saturday, June 30, 2012

அழகா சிலை மாதிரி இருக்கே, இந்த பொண்ணு டாப்பு மத்ததெல்லாம் டூப்பு


வணக்கம்

இம்புட்டு அழகா சிலை மாதிரி இருக்கே இந்த குதிரை (யோவ் நான் குதிரையை சொன்னேன்) சிலையா? நிஜமா?

 நிஜம் தான் தங்கம் முலாம் பூசியது போல எம்புட்டு பளபளப்பா இருக்குதே இதன் விலை இந்திய மதிப்பில் ரெண்டு கோடியாம் (குதிரைக்கு மட்டுமே அதன் பராமரிக்கும் அப்பெண்கள் சேர்க்காமல் ஹி ஹி ஹி அதுக்கு தனி சார்ஜாம்)

 என்ன சொல்ல வாரேன்னா நண்பர்  சங்கவியின் பதிவை இங்கே படிக்க நேர்ந்தது..அவர் ஊரில் உள்ள குதிரை சந்தை இங்கே அட அட  நீங்களும்   போய்   பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


நண்பேண்டா...... நட்புன்னா இது நட்பு மத்தது எல்லாம் மப்பு






  என்னா  அழகு.. அழகை பாரேன்,...
முகத்தை மூடிகிட்டு எப்பூடி பாக்குறது... ஹி ஹி 
 மருதாணி அழகை  பாரேன்.



மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உங்களை நீங்களே கட்டி தழுவ முடியாது

நீங்கள் உங்கள் சொந்த தோளில்  சாய்ந்து  அழ முடியாது

வாழ்க்கை முழுவதும் நாம்  மற்றொருவர்  வாழ்வை சார்ந்தே வாழ முடியும்

ஆகையால்

வாழுங்கள் உங்களை அதிகம் நேசிக்கும் துணை /நட்பு உறவுடன் இணைந்து. 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இந்த பொண்ணு  டாப்பு  மத்ததெல்லாம் டூப்பு


டிஸ்கி :வாங்கையா வாங்க, ஆரம்பிச்சிட்டோம்ல......ம்தா.


டிஸ்கி : இந்த பதிவின் தலைப்பு காரணம் இந்த கமண்டு :

//வீடு சுரேஸ்குமார் said... 
@மயிலன்; மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை தாண்டி, CHEMOTHERAPY க்காக மொட்டையடித்து ஒரு வருட காலம் உடலாலும் மனதாலும் நொந்து மீண்டு வந்திருக்கும் தேவதை மம்தா.. தன்னம்பிக்கையின் வெளிப்பாடே அந்த அழகு...
/////////////////////////////////
தெரியாத செய்தி மயிலன்! இப்பொழுது மம்தா மீது மரியாதை ஏற்படுகின்றது...!சுன்டு விரல்ல அடிபட்டாக் கூட சிங்கப்பூர் மருத்துவமனை போகும் நடிக்ர்களுக்கு ரசிகனா .இருப்பதை விட மம்தாவிற்கு ரசிகனாக இருப்பது பெருமை!//

 இந்த கமன்ட் மற்றும் பதிவு லிங்க்

Wednesday, June 27, 2012

பொண்ணுங்க Vs பசங்க முத்தம்

வணக்கம்


இவர் யாருன்னு தெரியுதா???? (மனசாட்சியை மாதிரி மூஞ்சியை மறைச்சிக்கிட்டு.... யாருல அங்க முனுமுனுக்கிறது) ஹி ஹி ஹி முடியல.


 மக்காஸ்,            தலையை ஆட்டி ஆட்டி பாருங்க...கண்ணை சிமிட்டி சிமிட்டி பாருங்க   



தேர்வு அறையில் 7 விஷயங்களை தான் நம்ம  பொண்ணுக, பசங்க  செய்கிறார்கள்:

பொண்ணுங்க      
                                                                      
1 எழுதுவது 
 2 முடியை காதுகளுக்கு பின்னல் எடுத்து விடுவது 
3 மீண்டும் எழுதுவது                                                         
4 பேனாவில் மை இருக்கா சோதனை செய்வது       
5  மீண்டும் எழுதுவது                                                        
6 கூடுதலாக காகிதம் கேட்பது           
7 மீண்டும் எழுதுவது                                            
             
  பசங்க
1 எத்துனை பொண்ணுங்க இருக்காங்க என்று எண்ணுவது
2 பெண் மேற்பார்வையாளரை நோட்டம் விடுவது
3 அறையில் உள்ள ஜன்னல் கதவுகளை எண்ணுவது
4 பேனா எந்த கம்பனி என்று பார்ப்பது
5 அமர்ந்த இடத்தில் மாற்றி அமர்வது
6 மணியை பார்ப்பது எப்படா வெளியில் போவோம்
 7 அடுத்த தேர்விலாவது குறைந்த பட்சம் நல்லா படிக்கோணும் நினைப்பது


திருமணபந்தம் அதிகாரபூர்வமான அனுமதி பெற்ற உண்மையான முத்தம் மத்ததெல்லாம் பித்தம்.  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

காதல்....,

காதல்ன்னா கூந்தல் மாதிரி..

அள்ளி முடியலாம் பின்னி சடையும் போடலாம்..,

ஹிம்....தலை குளிக்கும் வர.




விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

 வந்'தார(கை)'யும் வாழவைக்கும்   தமிழக
  
சந்தைக்கு வந்த சந்தனக்கட்டையே.


நன்றி படங்கள் கூகிள்

Monday, June 25, 2012

பக்கி பயபுள்ள மட்டயாகிடுச்சே

வணக்கம்

என்ன புதுசா சொல்ல போறேன் படங்களை பெரிதாக்கி பாருங்கள்



இப்பூடி தான் தீயா வேலை செய்யணும் நெருப்பா இருக்கோணும்

நல்லா புடிக்குதுங்க காக்கா


ஹிம்...தர்பூசனிக்கே....பக்கிபயபுள்ள மட்டயாகிடுச்சே 


கொய்யால.. பீச்க்கு காத்து வாங்கி சந்தோசமா இருக்கலாமுன்னு வந்தா  இந்த மனுஷ பயபுள்ளக...உண்டு இல்லைன்னு பார்த்துடுவோம்.. வா.. செல்லம் 



மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - விளையாடு, நிறுத்தாம விளையாடு

வாழ்க்கை என்பது ஆடல் போல - ஆடு, தைரியமா ஆடு

வாழ்க்கை என்பது பாடல் - பாடு பாடிக்கொண்டே இரு

வாழ்க்கை என்பது கடினமான பாறை  - மோது முட்டி மோது



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

கடல்நீர் குடிநீராகும் காலம் வெகு தொலைவில் அல்ல.



குறிப்பு: இன்று  பிளாக்ல எதாவது பிரச்சினையா??

சில வலை பூக்களில் கமண்ட்டு போட்ட அதுவாவே டிலிட் ஆவுதே இல்ல டிலிட் பண்றாங்களா புரியலையே - யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

படங்கள் நன்றி கூகிள்

Saturday, June 23, 2012

மஞ்சகாட்டு மைனா

பிரமாண்டம் பிரமாண்டம் அப்படின்னா இப்பூடீ தானோ:

நீங்க பாருங்களேன்... நீங்க பாருங்களேன்..,

(எப்பவும் போல் படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்)







டிஸ்கி : படங்கள் அனைத்தும் போட்டோஷாப் / ஆர்ட் ஆக கூட இருக்கலாம் பட், கற்பனை திறன்  பிடிச்சிருக்கு, படைப்பாளிக்கு பாராட்டுக்கள்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

முகத்தில் புன்னகை இல்லாத மனிதனா,
உங்கள்  வங்கி கணக்கில் கோடிகணக்கில் இருந்தும்
காசோலை புத்தகம் இல்லாமல் இருப்பதற்கு சமம்.

புன்னகை உன் முகத்தின் சாளரத்தில் ஒளி போன்று அது கொண்டு சேர்க்கும் நன் மக்களிடம்.



 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

மஞ்சகாட்டு மைன்னா......

 மடியில் என்ன ஓய்னா.....



படங்கள் நன்றி கூகிள்

Wednesday, June 20, 2012

திருமணத்துக்கு பின் இது சகஜமா

ஒரு காலத்தில், ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டுவிழா  கொண்டாடினார்கள்

அவர்கள் இருவருக்குள்ளும் 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு மோதல், சண்டை சச்சரவு,  குக்கர் மூடி வீசுறது, பூரி கட்டை எறிவது இது எல்லாம் நடந்ததே இல்லை. இந்த செய்தி நகரில் பிரபலமாக,
 
உள்ளூர்  செய்தித்தாள் ஆசிரியர் இந்த ரகசித்தை  கண்டு  பிடிக்க  ஆவல் கொண்டு, தம்பதிகளை சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

அதன் பின் நடந்த உரையாடல்:


ஆசிரியர்:.. "ஐயா, இது அதிசயமாகவும்  நம்பமுடியாததும்  எப்படி இந்த சாதனை செய்ய முடிந்தது?

தனது பழைய தேனிலவு நாட்கள் நினைவுக்கு வர  கணவர் கூறினார்:


"நாங்கள்  திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு ஊட்டி போயிருந்தோம் .
இறுதியாக  குதிரை சவாரி செய்யாலாம் என்று  இரண்டு வெவ்வேறு குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாங்கள் சவாரி தொடங்கினோம்.


என் குதிரை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் என் மனைவி சவாரி செய்த குதிரை ஒரு   பைத்தியக்காரன் போல் தெரிந்தது.


போகும்  வழியில் அந்த குதிரை என் மனைவியை  திடீரென்று குதித்து
 கவிழ்த்தது, நிலத்தில் இருந்து தனது நிலையை மீட்டு,
என் மனைவி மீண்டும் குதிரை  சவாரி செய்யும் முன்  "இது உனக்கு முதல் முறை ஆகும்" என்றார்.


அவள் மீண்டும் குதிரை அமர்ந்து  சவாரி தொடர்ந்தது.  பிறகு
அதே போன்று மீண்டும் நடந்தது.
அவள் இந்த முறை மீண்டும் அமைதியாக வந்து  "இது உனக்கு இரண்டாவது முறை ஆகும்" என்று தொடர்ந்தார்...

குதிரை அவளை  மூன்றாவது முறை கைவிடப்பட்ட போது, அவள்  அமைதியாக பர்ஸ் இருந்து சுழல் துப்பாக்கி எடுத்து குதிரையை சுட்டு விட்டார் !


நான் என் மனைவிடம்  கத்தினேன்: "நீ என்ன காரியம் செய்தாய் ஒரு அப்பிராணியை கொன்று விட்டாயே . நீ என்ன பைத்தியமா? 

அவள் ஒரு அமைதியான பார்வை பார்த்து விட்டு  கூறினார்:.

"! இது உங்களுக்கு முதல் முறை" "

கணவன்:  "அது தான்..... அதன் பிறகு நாங்கள் இப்போது வரை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்."

டிஸ்கி :  ஹி ஹி ஹி இதிலிருந்து அறியப்படும் நியதி என்னவெனில்....திருமணத்துக்கு பின் இதுவெல்லாம் சகஜமப்பா.
கட்டிக்கிட்டு ஆடுறது கட்டாம ஆடுறது அதான் சலங்கை இது எல்லாம் கல்யாணத்துக்கு முன்.....கால் கட்டு போடணும் கால் கட்டு போடணும் சொல்வாங்களே அதன் இதா ம்



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

ஏய்ய்ய்   வர்றீய்யா... ஒத்தைக்கு ஒத்த போட்டு பார்த்திடுவோம்
 
நம்புங்க, இந்த பதிவுக்கு அடிப்படை காரணம் மச்சி வீடு சுரேஷ்  இங்கே . இது  எதிர் பதிவு,.. இல்ல   ஆதரவு பதிவு,... எப்பூடீ வேணாலும் எடுத்துக்கோங்க  அது  உங்கள்  விருப்பம். 

Monday, June 18, 2012

ரெண்டு ரெண்டா தெரியுதே

எப்பவுமே நீங்க ஒருவரை முதல் முதலாக பார்க்கும் போது வரும் எண்ணம், சிந்தனை வேறு  அப்புறம் அவருடன் பேசி பழகிய பின் தான் தெரியவரும் அவரின் உண்மையான  பெர்சனாலிடி:

இப்ப கீழ உள்ள  படங்கள்  சில  ஜோடிகளை  வைத்து  ஆடைகளை  மாற்றி  ,.. நீங்களே பாருங்களேன்  வேடிக்கையாக இருக்குல்ல இப்ப சொல்லுங்க 

 தவறு நடப்பது பார்வையிலா, மூளையிலா ?

படங்களை பெரிதாக்கி பார்க்கவும்  














மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல 

 நம் நாட்டுக்கா​க இரண்டு நிமிடங்கள்


முடிவில்லா அறிவியல் பயணத்தில் மறக்க முடியாத மனிதர் கோவையை சார்ந்தவர்




விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இன்னைக்கு டபுள் மாமே

ஒண்ணு லொள்ளுக்கு, ஒண்ணு ஜொள்ளுக்கு

ஹல்ல்ல்லோ எச் ஜூஸ் மீ எது லொள்ளு எது ஜொள்ளு

அது உங்க பார்வை....

Saturday, June 16, 2012

இந்த பொண்ணு தனியா நிக்குது? அந்த பொண்ணு மந்திரியாகுமோ?

வணக்கம்

படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்



இதயம் = மனசு -  தலை = மூளை


நல்லா பாருங்க.....மக்களே,  குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ்


எல்லோரும் ஜோடி ஜோடியாய் இருக்கும் போது  ஏன் இந்த பொண்ணு மட்டும் தனியா நிக்குது...... ம் ஏதோ தப்பு இருக்குது.


 மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இவரை நல்லா பாத்துகோங்க மக்களே


 கொஞ்சம் டீசன்டான படங்கள்  

இவர் போர்ன் ஆக்டர் (அதாவது நீல பட நடிகை - சிவப்பு ட்ரெஸ் போட்டுருக்குன்னு கேட்கபாடாது ஒக்கே) பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் இவர்  இந்தியாவில் பிரபலமானார். (நாங்களும் பார்த்தோம்ல) இதையடுத்து பூஜா  பட்(இவர் ஒரு நடிகை என்பது கூடுதல் தகவல்) என்ற இயக்குனர் (இவுங்க அப்பா மகேஷ் பட் பிரபல இயக்குனர்)ஹிந்தியில்  தனது படமான ஜிஸ்ம் 2ல் (ஜிஸ்ம் என்றால் தமிழில் உடம்பு ) சன்னி லியோனை நடிக்க வைத்துள்ளார். இவர்  பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.ஆபாச நடிகையான இவர் தற்போது பெரிய நட்சத்திரம் அளவுக்கு கொண்டாடப்படுகிறார்.
ஏன் சொல்றேன்னா வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்)  எம்பி (MP)  ஆகி  மந்திரியும் ஆவார் - இப்பவே நல்லா பாத்துகோங்கோ



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இது இடுப்பு.....

அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்

இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு