நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 14, 2011

நடிகைகள் பீர் அபிஷேகம்!
நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில sonia agarwalவெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ?

குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். (இப்படியெல்லாம் நமக்கு தோணலையே என்றுதான்)

கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை முடி பஞ்சு மேகம் போல மிதக்குமாம். கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார் இந்த அழகுராணி. இந்த கண்டுபிடிப்பு மெல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி, இன்று அநேக நடிகைகள் இந்த பீராபிஷேகத்தைதான் விரும்புகிறார்களாம்.

தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நீள்கிறது இந்த பட்டியல். சமீபத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் படப்பிடிப்பு செலவில் பாட்டில் பாட்டிலாக பீர் கணக்கு வர, என்ன ஏது என்று விசாரித்தார்களாம். அங்குதான் தெரியவந்தது இந்த பீராபிஷேக மேட்டர். சோனியா அகர்வாலின் பஞ்சு ஹேருக்கு இந்த பீர்தான் காரணமாம்.

முல்லைப் பெரியாறு - வைரமுத்து ஆவேசம்இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

"முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்
என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'
எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத் தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். 'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு.''

உண்ணாவிரதத்தை கேலி செய்த தி.மு.க. எம்.பி.க்கள்!முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.

இதன் ஒரு பகுதியாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக தி.மு.க. எம்.பி.க்கள் அறிவித்தனர். அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காந்திசிலை முன்பாக பகல் 12 மணிக்கு ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகிய இரு எம்.பி.க்கள் மட்டுமே அடையாள உண்ணாவிரதத்திற்காக அமர்ந்தனர்.

பத்திரிகை புகைப்படக்காரர்கள் ஒவ்வொருவராக வந்து படம் எடுக்கும் படலம் முடிந்ததும் பிற்பகல் 2 மணிக்கு இருவரும் எழுந்து சென்றனர்.

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதிமாறன், ஜெ.கே. ரித்திஷ், தாமரைச்செல்வன் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்திலே இருந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

5b3b493a-2865-4e1d-93c6-b971f3366067HiResதி.மு.க. தலைமை அறிவித்த போராட்டத்தில் நான்கு எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து கொண்டே கலந்து கொள்ளவில்லை. இந்த நான்குபேர் தலைமை அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவமரியாதை செய்ததைவிட, இருவர் உண்ணாவிரதம் என்ற பெயரில், இரண்டு மணிநேரம் உண்ணாவிரதம் என்று இருந்து, போஸ் கொடுத்துவிட்டு, ஒரு கேலி கூத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு மணிநேர உண்ணாவிரதமும், அதுவும் புகைப்படக்காரர்கள் வந்து படமெடுத்து பிறகு எழுந்து சென்றதும் எதற்காக? இப்படியொரு சடங்கு, சம்பிரதாயம் தேவையா?

உண்ணாவிரதம் என்றால் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை என்று இருத்தல்தானே நியாயம்.

இந்த பார்ட் டைம் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் டெல்லியில் இருந்துக்கொண்டே உண்ணாவிரதத்தைப் புறக்கணித்தவர்களையும் தி.மு.க. தலைமை கண்டிக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்காதோ என்று தோன்றுகிறது.

ஏனென்றால், 2009-ம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட போரில் அப்பாவி தமிழர்கள் குண்டுகளுக்கு பலியானதை கண்டித்து மூன்றரை மணிநேரம் அதாவது பார்ட் டைம் உண்ணாவிரதத்தை நடத்தியவரே தி.மு.க. தலைவர் கருணாநிதிதானே. இவர் எப்படி எம்.பி.க்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டிக்கப்போகிறார் என்று தான் தெரியவில்லை?


நன்றி தமிழ் லீடர்

தனுஷுக்கு குறிவைக்கும் 'டேம் 999' படத்தின் டைரக்டர்

 
 
போகிற போக்கை பார்த்தால் சேட்டன் கடை டீக்கும் வேட்டு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. மணப்புரம் கோல்டு ஹவுஸ் மேலே பறக்கும் கல், சேட்டன் கடையை பதம் பார்க்க எத்தனை நேரம் பிடிக்கும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக இளைஞர்களில் சிலர். இப்படி அண்டை மாநிலத்திற்குள் சிண்டுபிடி சினேகத்தை வளர்த்துவிட்டு ஹாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் சோஹன்ராய். டேம் 999 படத்தின் இயக்குனர் இவர்தான்.

பல வருடங்களாகவே விவாதிக்கப்பட்டு வரும் முல்லை பெரியாறு பிரச்சனை இந்தளவுக்கு கொடூர முகத்தை காட்டுவதற்கு காரணமே இவரது படமும் அதற்கு விதிக்கப்பட்ட தடையும்தான். இதையடுத்து ஊரே உருமிக் கொண்டிருக்க, சத்தம் போடாமல் அடுத்த வெடிகுண்டை தயார் பண்ணிக் கொண்டிருக்கிறாராம் இந்த மேதாவி.

ராமேஸ்வரம் பகுதியில் அடித்த சூறாவளி காரணமாக ஒரு காலத்தில் காணாமலேயே போய் விட்ட தனுஷ்கோடியின் வரலாற்றை எடுக்கப் போகிறாராம். இப்போதும் அந்த பகுதியில் எலும்புக் கூடாக நிற்கும் சில வீடுகளும், தேவாலயம் ஒன்றும் இந்த குரூரத்திற்கு சாட்சியாக இருக்கிறது. இந்த சோகத்தைதான் அவர் படம் பிடிப்பதாக இருக்கிறாராம்.

இவ்வளவுக்கு பிறகும் தமிழ்நாட்டு எல்லையில் கால் வைக்க விடுவார்களா இவரை