நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, September 26, 2012

ஏனப்பு, அது ஏன்னு உனக்கு தெரியுமா

வணக்கம்
வாழ்க்கையில் சில சுவராஜ்யமான விடயங்கள்

எதிர்பாரா சமயத்தில் உங்களை பற்றி ஒருவர் இன்னொருவரிடம் நல்லவிதமாக சொன்னதாக கேள்விப்படும் போது

தூக்கத்தில்  இருந்து   விழித்து ஒ.. இன்னும் விடிய நேரமிருக்கா என்று தூங்குவது

முதல் நேசம் கொள்வது 

முதல் முத்தம் கொடுப்பது /பெறுவது 

புதிய நண்பர்கள் பெறுவதும்  மற்றும் பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது.

பாத்ரூமில் பாடுவது

அழகான  கனவுகள் அசைபோடுவது

உச்சி வெயிலில் ஐஸ் கிரீம்  சாப்பிடுவது

குளிர்ந்த அந்த காலை பொழுதில் உங்கள் நேசத்துடன் சேர்ந்து காப்பி பருகுவது

உங்களுக்கு பிடித்தவருடன் கைகோர்த்து நடப்பது

சூரியன் மறைவதை பார்ப்பது 

மனதுக்கு பிடித்தவரின் தோளிலோ /மடியிலோ தலை சாய்ந்து படுப்பது 

நம்மை பிரிந்து ஒரு உள்ளம் ஏங்குது  என தெரியும் போது 

பிறந்த குழந்தையை தடவுவது, முத்தம் கொடுப்பது 

விழும் கண்ணீர் துளி   ஆறுதலுக்கு ஆதரவுக்கோ கட்டி தழுவும் போது. 


இதுல ஒரு நுணுக்கம் எல்லாமே 'து' வில் முடியுது. 
(என்னா ஒரு கண்டுபுடிப்புடா)

(இன்னும் எதாவது இருந்தா சொல்லுங்க இத்துடன் சேர்த்துடுவோம்)




ஸ்டார் பிஷ்க்கு மூளை கிடையாதாம்.


என்னமோ உனக்கு மூளை இருக்குற மாதிரி பில்டப்பை பாரு
  



மைன்ட் வாய்ஸ்  கேக்குதுப்பா கேக்குது




 மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

பூங்காக்களில் பார்க்கலாம் இப்படி ராணுவவீரன் / அரசன்  சுமந்தபடி குதிரை சிலைகளை, அதில் உள்ள நுணுக்கமான ஓன்று:

குதிரை இரண்டு கால்களை தூக்கியவாறு சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் போரில் இறந்ததாக அர்த்தம்.

குதிரை ஒரு  காலை தூக்கியவாறு சிலை இருந்தால்
சிப்பாய் / அரசன் போரில் காயம் பட்டு சிரமப்பட்டு இறந்தான்

குதிரை நான்கு கால்களின் பாதங்களும் தரையில் ஊன்றி  சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் இயற்கை மரணம் அடைந்தார்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
 தலைக்கி  குளிச்சி, தலை சீவி  ஜாக்கெட் போட்டு, தாவணியோ சேலையோ கலாச்சாரம்மா உடை அணிந்து, கண்ணுக்கு மை இட்டு, பூ வைச்சி,  பவ்டர் பூசி,
பொட்டும்  வைச்சி, உதட்டுக்கு சாயம் பூசி ,  அலங்காரம் பண்ணி நகை போட்டு நெத்திசூடி அழகு படுத்தி....தேவதை  போல சிங்காரிச்சி.........

கடைசியிலே கொஞ்சூண்டு முன் தலைமுடியை எடுத்து முகத்துல வுட்டுகுறாங்களே...

ஏம்பு அது ஏன்னு உனக்கு  தெரியும்..

அத  தான் சித்தப்பு  பல வருசமா மோட்டு வலய  பாத்து 

ஒசிச்சுட்டு இருக்கேன் ஒரு மண்ணும் புரியல..  

ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா??