நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, December 4, 2011

தனுஷின் கொலவெறி மாணவர்களைக் கெடுத்து விடும்

தனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.

இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.

கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.

இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.

புருஷன் எப்படியிருக்கணும்?


வயசை பற்றி பேசினால் எந்த நடிகைகளுக்கும் பிடிக்காது. ஆனால் எல்லாருக்கும் பிடித்த த்ரிஷாவுக்கு வயசு எத்தனை இருக்கும்? கணக்கு போடுவதற்காக கைவிரல்களை மடக்கினால் அதுபோகும் இருபத்தைந்தை தாண்டி.

இந்த கல்யாண வயசையும் தாண்டிப் போய்விடுவாரோ என்ற அக்கறையால்(?) அடிக்கடி ஒரே கேள்வியை கேட்டு இம்சிக்கிறார்கள் நிருபர்கள்.
எப்பங்க கல்யாணம்?

இனிமேலும் இந்த விஷயத்தில் மவுனம் காக்க முடியாது என்று முடிவெடுத்த த்ரிஷா, பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் தனது நிபந்தனையை.

பொதுவாகவே நான் நாய் பிரியை. எனக்கு வரப்போகிற கணவர் என் வேவ் லெங்க்த் கொண்டவராக இருக்கணும். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது? அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி கணவரை என்கிறார்.

த்ரிஷா சொன்னால் நாயையே கூட கட்டிக் கொள்ள ரெடி என்பார்கள் அவரது தீவிர ரசிகர்கள். இதற்கெல்லாமா அஞ்சுவது த்ரிஷா?

டிஸ்கி - ங்கொய்யால எந்த நாய்க்கு அந்த யோகமோ!?

இந்தியர்களின் கறுப்புப்பணம்


வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பண விபரங்களை அடுத்த வருடம் வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல்கள் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ மாநாடு மூலம் லண்டனில் இருந்து கலந்து கொண்ட அசாஞ்ச் கூறியதாவது, மத்திய புலனாய்வுத் துறை மின்னஞ்சல்களில் இருந்து சீன உளவுத் துறை தகவல்களைத் திருடியதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

இந்தியாவின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஒட்டுக் கேட்டு வருகின்றன. அதனால் இந்தியா பாதுகாப்பான தகவல் தொடர்பைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அசாஞ்ச் தெரிவித்தார்.

டிஸ்கி: அட சீக்கிரம் சொல்லுங்கப்பா

2ஜி வழக்கில் ப.சிதம்பரம்? - 8ம் தேதி தெரியும்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்று கூறி சுப்பிரமணியம் சாமி தொடர்ந்துள்ள வழக்கில் 8ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இதுதொடர்பாக சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரமும் கூட்டுச் சதி செய்துள்ளார். அவரும் முன்னாள் அமைச்சர் ராசாவும் சேர்ந்துதான் விலை நிர்ணயம் செய்துள்ளனர். எனவே ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது சாமியின் கோரிக்கையாகும்.

இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் தொடர்பான கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சாமி கோரியிருந்தார். அதை டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ, சாமியிடம் அளித்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 100 பக்க ஆதார ஆவணத்தை சாமி நீதிபதியிடம் சமர்ப்பித்தார். பின்னர் அவர் வாதிட்டார். அதைத் தொடர்ந்து 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியம் சாமி இதுகுறித்துக் கூறுகையில், ப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைப்பதா இல்லையா மற்றும் ப.சிதம்பரத்திற்கு எதிரான சாட்சிகளை விசாரணைக்கு அழைப்பதா இல்லையா என்பது குறித்து 8ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்றார்.

ஸ்டாலின் மீதான வழக்கு-ஆந்திர தொழில் அதிபரை விசாரிக்கும் போலீஸ்

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான சொத்து அபகரிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆந்திர தொழிலதிபர் வேணுகோபால ரெட்டியை விசாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் படை ஒன்று ஹைதராபாத் விரைந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரிகுமார், தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால ரெட்டி, ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட வீடு வேணுகோபால ரெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சார்பதிவாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரெட்டியை விசாரிக்க ஹைதராபாத்துக்கு போலீஸ் படை ஒன்று விரைந்துள்ளது.

பெரும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரெட்டி வீடு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரிய வரும் என்பதால் ரெட்டியிடம் நடக்கும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.