நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, April 2, 2012

பெண்ணின் விதிகள் (ரூல்ஸ்..) - கலாட்டா கும்மி


மாற்று கருத்துக்கள் வரவேற்க படுகிறது - சீரியசாக தயவு கூர்ந்து எடுத்துக்கொள்ள (கொல்ல) வேண்டாம்.
 1. பெண் தான் எப்பவுமே விதிகள் அமைப்பது.  
 2. விதிகள் இடத்துக்கு இடம் மாறும் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி. 
 3. எல்லா விதிகளும் ஆண்களுக்கு தெரிந்து இருக்கோணும் என்று அவசியம் இல்லை  
 4. ஆணுக்கு  விதிகள்  தெரிந்து விட்டதோ என சிறு சந்தேகம் ஏற்பட்டாலோ, விதிகள் மாற்றப்படலாம் அல்லது திருத்தபடலாம்.
 5. பெண் பக்கம் தவறே கிடையாது.
 6.  பெண் பக்கம் தவறு இருப்பின், அது சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற அடிப்படையில் தான் பார்க்கப்படும்.  
 7. விதி எண் 6 ஏற்று கொண்டால், ஆண் உடனடியாக மன்னிப்பு கேட்டு ஒப்புக்கொள்ளவேண்டும்.
 8. பெண் எந்த நிமிடத்திலும் தங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ளமுடியும்.
 9. ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் மனநிலையை மாற்றக்கூடாது அப்படி மாற்றனும் என்றால் பெண்ணிடம் முன் அனுமதி பெறல் அவசியம்
 10. பெண் எந்த நேரத்திலும் கோபம் அல்லது கவலையாகவும் இருக்க உரிமை உண்டு.
 11. பெண் கோபம் அல்லது சோர்ந்து போய் இருக்க விரும்புகிறார் ஆண் அமைதியாக இருக்க வேண்டும்.
 12.  ஆண்  கோபம் அல்லது கவலையாக இருக்க விரும்புகிறார் என்பதை பெண்ணிடம்  எந்த சூழ்நிலையிலும் தெரியப்படுத்த வேண்டும்.
 13. விதிகள் ஆவணப்படுத்த  முயற்சி செய்யவில்லை எனில் உடலில் காயம் உண்டாக்கும்  விளைவுகளை ஏற்படுத்தலாம்.

டிஸ்கி 1 : எப்ப்ப்பூடீ.....உங்களுக்கு தெரிந்த விதிகள் ஏதாவது இருந்தா சொல்லுங்க... தெரிஞ்சிக்குவோமே..
 விஸ்கி:லொள்ளு & ஜொள்ளுஆரஞ்சுப்பழம் ஆயுதம் எடுக்கிறதே!

 கண்களால்.