நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, November 20, 2011

ஓவராத் தான் சீண்டுகிறீர்கள் - விஜயகாந்த்


மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள். பால், பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறினார். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதிக்கியுள்ளது என்பதை மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் பட்டியலிட்டுருப்பதை பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டேன். ஜி.கே. வாசன் கூறியுள்ளதை நானும் கூறினால் விஜயகாந்த் காங்கிரஸ் பக்கம் போகிறான் என்று கதை கட்டிவிடுவார்கள். இதைச் சொல்வதால் நான் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் இல்லை.

ஜி.கே. வாசன் தெரிவித்திருப்பது போல் மத்திய அரசு மாநிலத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்கும். அதை திறமையாகப் பயன்படுத்த வேண்டியது மாநில அரசின் கையில் உள்ளது.

மாற்றம் வேண்டி அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு அது வெறும் ஏமாற்றத்தைத் தான் அளித்துள்ளது. இதை மக்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்கள் தற்போது கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். விலையை ஏற்றுபவர்கள் அதை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்திருக்க வேண்டியது தானே. திமுக அரசு செய்த தவறுகளையே அதிமுக அரசும் செய்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அதிமுகவினர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது ஊருக்கே தெரியும்.

நான் சட்டசபை பக்கம் வரவில்லை என்கிறார்கள். எனக்கு உடல்நலம் பாதி்ககப்பட்டுள்ளதால் தான் செல்லவில்லை. சரி, ஜெயலலிதாவும், கருணாநிதியும் எதிர்கட்சித் தலைவர்களாக இருக்கையில் எத்தனை நாட்கள் சட்டசபைக்கு வந்தார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

பால், பஸ் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு அரசு அனுமதி மறுக்கலாம். இவ்வளவு ஏன் மதுரையில் ஒரு பேனர் வைக்க காவல்துறை அனுமதி மறுக்கிறது. பேனர் எல்லாம் வைக்கக் கூடாது என்கிறார் கமிஷனர்.

கடந்த ஆட்சியில் எப்படி காவல்துறை பாராபட்சமாக இருந்ததோ தற்போதும் அப்படியேத் தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ கலெக்டர்கள் மாநாடு நடத்தி கலெக்டர்களுக்கு பரிசு கொடுத்து பாராபட்சத்தை தூண்டி விடுகிறார்கள். மதுரையில் அனைவருக்கும் வேண்டாதவர் என்று பெயரெடுத்த கலெக்டர் சகாயம் தற்போது ஆளுங்கட்சிக்கு சகாயம் செய்து சகாயமாகிவிட்டார்.

கமிஷனர் கண்ணப்பனும் மாறிவிட்டார். பேனர் வைப்பதை தடுப்பதால் எல்லாம் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி புகழை யாராலும் அழிக்க முடியவில்லை. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள் என்றார்.

தமிழக காங்கிரஸுக்கு கேவலம்


மறைந்த பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இரும்புப் பெண்மணி என்று உலகத் தலைவர்களால் புகழப்பட்டுவருமான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கூட சரியாக தெரியாமல் மக்கள் மத்தியில் கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி.

இந்திரா காந்தியின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியினரோ 105வது பிறந்தநாள் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு கேவலப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் இந்திரா காந்தி. அமெரிக்காவுக்கு பெரும் மிரட்டலாக விளங்கியவர். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். வங்கதேசம் என்ற ஒரு புது நாடு பிறக்க காரணமாக அமைந்தவர். சீனாவைக் கண்டு அஞ்சாமல் செயல்பட்டவர். தனது துணிச்சல் மற்றும் தைரியமான, அதிரடி போக்கால் உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டவர். அனைவரின் மதிப்பையும் பெற்றவர்.

ஆனால் அப்படிப்பட்ட தலைவரின் பிறந்த நாளைக் கூட சரிவரத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்திற்கு 105வது பிறந்த நாள் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரை இப்படியா அவமதிப்பது என்று மூத்த காங்கிரஸார் மனம் ஒடிந்து போய் நிற்கின்றனர்.

இந்த லட்சணத்தில் காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்று வாய் கூசாமல் பேசிக் கொள்கின்றனர் காங்கிரஸார். புதிய தலைவராக ஞானதேசிகன் பதவிக்கு வந்தவுடனேயே நடந்துள்ள இந்த குழப்பம் தமிழக காங்கிரஸாருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது.

விலை உயர்வின் "தைரிய கணக்கு...!'

கட்டண உயர்வுகளால், ஓட்டு வங்கி அரசியலுக்கு உடனடி பாதிப்புகள் இல்லை என்று கணக்கிட்டு தான், பஸ் கட்டணத்தையும், பால் விற்பனை விலையையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மின் கட்டண உயர்வை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்துவிட்டதும், லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதும், அ.தி.மு.க., அரசுக்கு பாதுகாப்பான காலங்களாகவே உள்ளன.
மாநில அரசைப் பொறுத்தவரை, கட்டண உயர்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பப் போவதில்லை. விலை உயர்வுக்கு எதிர்க் கட்சிகளின் தாக்குதல் இப்படித் தான் இருக்கும் என எதிர்பார்த்து, பால், பஸ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது என்று கூறுகின்றனர்.விலைகளை உயர்த்தி, மக்களுக்கு வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிலும் இது தெளிவாகவே வெளிப்பட்டு உள்ளது. மேலும், விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் களம் இறங்குவதற்கு முன்பே, அதற்கான தவிர்க்க முடியாத காரணங்களை மக்கள் மத்தியில், நாமே எடுத்துச் செல்வோம் என முடிவு செய்து "டிவி'யில் மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார் என்றும் கூறுகின்றனர். இதனால், எதிர்க்கட்சிகளின் போராட்ட வேகத்தைக் குறைக்கவும் முதல்வர் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.மாநில அரசுக்கு, உடனடித் தேர்தல்கள் இல்லாத பாதுகாப்பான சூழ்நிலை, எதிர்க்கட்சிகளையும், மக்களையும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுவே, அதிரடி முடிவுகளின் ஒரு பகுதியாக பஸ், மின் கட்டணங்களையும், பால் விலையயும் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி உள்ளதற்குக் காரணம் என்கின்றனர்.

ஊழல் - கறுப்பு பணம் விழிப்புணர்வு ரதயாத்திரை - 40 நாள் இன்று நிறைவு

நாட்டில் மலிந்து விட்ட ஊழல் , கறுப்பு பண விவகாரத்தை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் எழுச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் விதமாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.,அத்வானி ‘ஜன்ஷேத்னா ’ ரத யாத்திரை இன்று டில்லியில் நிறைவு பெறுகிறது. நண்பகல் 12 மணி யளவில் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் தே.ஜ.,கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.


கடந்த 39 நாட்களில் 22 மாநிலங்களில் முக்கிய நகரங்களில் மக்கள் பெருவாரியான வரவேற்பு அளித்தனர் . இதில் மக்கள் ஆதரவையும் , எழுச்சியையும் காண முடிந்ததாக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர். யாத்திரை பா.ஜ.,வுக்கு பெரும் செல்வாக்கு தேடித்தந்திருப்பதுடன் அத்வானிதான் பிரதமர் வேட்பாளர் என்று ஊர்ஜிதம் செய்திருப்பதாக என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். யார் பிரதமர் வேட்பாளர் என்று அவரிடம் நிருபர்கள் கேட்டபோது பா.ஜ.,வை பொறுத்தவரை திறம்பட பணியாற்றும் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். பிரதமர் தேர்வு என்று வரும் போது கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடக்கும் என்றார். மோடி பிரதமர் பதவிக்கு வரஆசைப்படுவதாகவும், இதனால் அத்வானியின் ரத யாத்திரைக்கு அவர் ஆதரவு அளிக்க மாட்டார் என்றும் யூகங்கள் வெளியாகின ஆனால் குஜராத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்த அத்வானியுடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று சிறப்பான வரவேற்பையும் பெற்றுத்தந்தார் என்றார் மிகையாக இருக்க முடியாது.

பெண்களின் அழகில் மறைந்துள்ள ஆபத்துக்கள்

இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் தலைக்கு வர்ணம் அடிக்கவும் ஹென்னா போடவும் ஆர்வம் காட்டுகின்றனர். உடலில் டாட்டூ வரைந்து கொள்வதும் இன்றைய இளைஞர்களிடையே பேஷனாகி வருகிறது. ஹென்னா பயன்படுத்துவதாலோ, டாட்டூ வரைவதாலோ லுக்கீமியா புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.உடலை பாதிக்கும் ரசாயணம்
நமது உடலில் உள்ள மரபணுவை நேரடியாக சென்று தாக்கக் கூடிய கார்சினோஜினிக் என்னும் ரசாயனம் ஹேர்டையில் கலக்கப்படுவதால் அவை தலைக்கு தடவும் போது தலைமுடிகளில் வேர் பகுதிகளின் மூலம் உடலில் ஊடுருவி ரத்தத்தில் கலந்து விடுகின்றன. கார்சினோஜினிக் நச்சுப்பொருட்கள் சிறுநீரகப்பையில் நிரந்தரமாக தங்கிவிடுவதால் இவை லிம்போமா என்னும் புற்றுநோய் ஏற்படக்காரணமாகிறது என்கின்றனர் புற்றுநோய் வல்லுநர்கள். பிற வண்ணங்களைக்காட்டிலும் கருப்புநிற சாயங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் அதிகம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தடை செய்யப்பட்ட பென்சின்
இது மட்டுமல்லாது அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்பதற்காகவும், நிறம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் செயற்கை மருதாணி எனப்படும் ஹென்னாவை பயன்படுத்துகின்றனர். இந்த ஹென்னாவில் கலக்கப்படும் பென்சின் ரசாயனம்தான் லுக்கீமியா எனப்படும் ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பாதிப்பிற்கு காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அழகுக்காக டாட்டூ வரைந்து கொள்வதும் ஆபத்தானது என்கின்றனர் புற்றுநோய் மருத்துவர்கள்.


பென்சின் கலக்கப்பெற்ற அழகு சாதன பொருட்கள் பயன்படுத்த வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவை எளிதில் கிடைக்கின்றன. இவை புற்றுநோய் மட்டுமல்லாது தோல்நோய்களையும் ஏற்படுத்துகின்றன. எனவே அவசியமற்ற தருணங்களில் தலைமுடியும் சாயம் தடவுவதையும் தரமற்ற செயற்கை மருதாணி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்கள் ஆலோசனை.

இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு

சோறு, தண்ணீர் போல தூக்கமும் மிகமிக அவசியமானது. போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் இயல்பு நிலை பாதிக்கப்படும்.

இந்த பாதிப்பை இன்சோம்னியா என்கிறது மருத்துவ உலகம். இந்த பாதிப்பில் இருந்து விடுபட உலகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஏராளமான பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இங்கிலாந்தின் நார்த்அம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. நன்கு தூக்கம் வருவதற்கு ஆராய்ச்சியாளர்கள் தரும் அறிவுரை இது: கடின உழைப்புக்கு பின்பு இரவில் உறக்கம் இன்றி அவதிப்படுவது அடுத்த நாளின் இயல்பு வேலைகளை பாதிக்கும்.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளியாக மாறும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் அதிகம். தூக்கமின்மை என்பது சாதாரணமாக விடக்கூடியது அல்ல. அதை உடனே சரிசெய்ய வேண்டும்.

நமது உணவு, பழக்க வழக்கங்கள் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இதற்கு மருந்து, மாத்திரைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. படுக்கைக்கு செல்லும் முன்பு தினமும் ஒரு கிளாஸ் செர்ரி பழச்சாறு குடித்தால் நன்கு தூக்கம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செர்ரி ஜூஸ் குடித்தவர்கள் கூடுதலாக 25 நிமிடம் தூங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் செக்ஸ் பொம்மைகள் விற்பனை

சென்னையில் ரகசியாக செக்ஸ் பொம்மைகள் விற்பனை நடக்கிறது. விஞ்ஞானம் வளர்ச்சி என்ற போர்வையில் சில வக்கிரம் இந்தியாவுக்குள் ஊடுருவி நம் கலாச்சாரத் துக்கு ஊறுவிளைவிக்கிறது. ஆபாச வீடியோக்கள், ஆபாச இணைய தளங்கள் இளைஞர்களை கெடுத்துக் கொண்டு இருக்கிறது. தற்போது செக்ஸ் பொம்மைகள் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டது.

மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் பொம்மைகள் கலாசாரம் வேரூன்றி விட்டது. அது தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து சென்னையிலும் புகுந்து விட்டது. சில மருந்து கடைகளிலும் வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர் களிலும் செக்ஸ் பொம்மைகள் விற்பனை ரகசியமாக நடைபெறுகிறது.

செக்ஸ் பொம்மைகள் விற்பனை பற்றி இன்டர்நெட்களில் சிலர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் முக வரியுடன் விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த விளம் பரத்தை பார்த்து சென்னையில் உள்ள கடைகளுக்கு சென்று செக்ஸ்பொம்மைகள் வாங்கிச் செல்கிறார்கள். ஆண்களுக்கான செக்ஸ் பொம்மைகள் யாருக்கும் தெரியாத படி ஆணுறை பாக்கெட்டுகளுடனும், பெண்களுக்கான செக்ஸ் பொம்மைகள் அழகு சாதன பொருட்கள் போலவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பொம்மைகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஓசையின்றி விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மனபயம் உள்ளவர்கள் தனிமை விரும்பிகள், தொற்று நோய் பயம் உள்ளவர்கள் இதை அதிகம் பயன்படுத்துவதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

சட்ட விரோதமாக நடைபெறும் இந்த செக்ஸ் பொம்மைகள் விற்பனையை போலீசார் கண்டு பிடித்து தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனி ஜோதிடம்.........

கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.

கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்….நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள் இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவீர்களே தவிர சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள். மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்… கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம் கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள் வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.

 உங்கள் விருப்பம் வாழைப்பழமானால்…. நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப் பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால் உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான். உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
 உங்கள் துணையை நீங்கள் மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும் நிலவும்.

 ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு: அதிக அளவு பொறுமையும்இ அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன் நேசிப்பீர்கள்.

 ஆப்பிளை விரும்பும் அன்பர்களே! நீங்கள் உடனடியாக முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள் ஒரு குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும் முன்னேறிச் செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிலும் செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.

 அன்னாசியை ரசித்து ருசிப்பவரா? நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில் உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும் நேர்மையாகவும் இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள் ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத் தொடர்வீர்கள். உங்கள் துணைவர் ஃ துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.

 பேரிக்காய்ப்பிரியர்களே! உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுத்தினால் அதை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது நிரம்பவும் கடினம் உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன் தொடங்கிவிட்டு இடையிலே கைவிடுவது உங்கள் பழக்கம். எதைச் செய்தாலும் உடனடியாகப் பலன் தெரிந்தாக வேண்டும் என்று துடிப்பீர்கள். அதிக ஆற்றலும் தெம்பும் உடையவர். யாருடனும் எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை நீண்ட நாள் தொடர்வதில் அன்னாசிப் பழக்காரருக்கு அப்படியே எதிரிடையானவர்.

 திராட்சை விரும்பிகளே!
உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாகஇ அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோஇ ஓவியமோ குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்இ உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை உற்சாகத்துடனும்இ புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள் வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்… கொஞ்ச நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும். அவ்வளவுதான்.

 செர்ரிப்பழமா உங்கள் தேர்வு? உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடுதான். குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது. எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே இருக்கும். சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும். உங்களுக்குக் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஒரே மாதிரியான சலிப்பு தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால் விளம்பரத்துறை ஓவியம் கலைத்துறைகளில்தான் உங்கள் நாட்டம். உங்கள் துணைக்கு உண்மையானவராக இருப்பீர்கள். ஆனால் அன்பை வெளிக்காட்ட நீங்கள் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.

 சீதாப்பழத்திற்கா உங்கள் வாக்கு? அப்படியென்றால் நீங்கள் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அடக்கமானவர். எதையும் ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள். ஆனால் அவசரமோ பதற்றமோ உங்கள் பக்கத்தில் கூட வராது. நிதானமும் பொறுமையும் மிக்கவர். விரிவாக விளக்கப் படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள் தொடர்பான பணிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான உங்களுக்குப் பொருத்தமான பணியாக இருக்கும். புற அழகு அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள் குறைபாடு. கொஞ்சம் வெட்கமும் கூச்சமும் நிறைந்தவராக இருப்பதால் உங்கள் பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.

 இனி என்ன? உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்!!!!!!!

நிறத்தை வைத்து குணத்தை அறியலாம்

‘நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்’ – இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கலரைச்சொல் லுங்கள்.உங்களைப்பற்றிச் சொல்லு கிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்…

வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதிலும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால்விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாறமாட் டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை களை அணியாதீர்கள். ஏனெனில், மழை பெய்து ஊரே சகதியாகக் கிடக்கிறது!


சிவப்பு: ரொம்பவே ஆக்டிவ் பார்ட்டி. நத்தைகூட மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றாலே கசப்பு. (மனைவிகள் கவனிக்க!) அதிக மன வலிமை இருக்கும். அதுதான் பலமும் பலவீனமும்!

பிங்க்: சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான சுயநலச் சுனாமிகள். எப்போதும் தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காகப் பசித்த பூனைபோலப் பரிதாப முகம் காட்டி நடிப்பீர்கள் (காதலிகள் உஷார்!).

மெரூன்: மெரூன் என்றால்மெச்சூ ரிட்டி என்று அர்த்தம். வாழ்க்கை யில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்தவர்களுக்கு மெரூன் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால், சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள். ஸோ… மெரூன் பார்ட்டிகளுக்கு உடனடியாக ஃபேஸ்புக்கில் ஒரு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுங் கள்!

ஆரஞ்சு: சுகவாசிகள். ஆல் டைம் ஹேப்பி வேண்டும். கூட்டணி கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவீர்கள்!

மஞ்சள்: புத்திசாலித்தனம், கற்பனை வளம் இருந்தால், உங்களுக்கு மஞ்சள் பிடிக்கும். ஒசாமாகூட இருந்தாலும் உங்களுக்குச் சிரிப்பு வரும். அவரையும் சிரிக்கவைப்பீர்கள். உங்களுக்கு முதல் தேவை முழுச் சுதந்திரம்!

பச்சை: மென்மை பிளஸ் நேர்மைதான் பச்சை பார்ட்டிகள். உங்களைச் சுற்றி எப்போதும் 10 பேர் இருக்க வேண்டும். அன்பே உங்கள் ஆயுதம். அமைதி உங்கள் சாய்ஸ். இதனாலேயே சுற்றியுள்ள மாப்புகள் உங்களுக்கு ரெகுலராக ஆப்புகள் வைப்பார்கள். பி அலர்ட்!

கறுப்பு: கிவ் ரெஸ்பெக்ட்… ஹேவ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள். ஈஸியாக மற்றவர்களை இம்ப்ரெஸ் செய்துவிடுவீர்கள். மரியாதை என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் தேடி வந்துவிடும்!

லேவண்டர்: கொஞ்சம் கலாசாரக் காவலர் கள். புதுமை பிடிக்காது. கட்டம் போட்ட பேன்ட் பார்த்தால் சத்தம் போட்டு அலறுவீர்கள். உள்ளுவது உயர்வுள்ளல். ஆனால், வேலை வந்துவிட்டால், குறட்டைவிடு வீர்கள்.
வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக்காதே… மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த நேரம் மாறியிருக்கும்!

நடிகைகளுக்கு ஏன் நாய்க்குட்டியிடம் பிரியம்

நடிகைகள் பொதுவாக வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வழக்கம். அதில் சிலர் அதிக ஈடுபாடுகாட்டுவார்கள். தான் வளர்ப்பது மட்டுமல்லாது தன்னை சார்ந்தவர்களிடமும் வளர்க்கச் சொல்வார்கள். தற்போது நடிகைகளுக்கு நாய்க்குட்டிதளின் மீது பிரியம் ஏற்பட்டுள்ளது.
திரிஷா வுக்கு நாய்க்குட்டிகள் மேல் அதிக பிரியம். வீட்டில் நிறைய நாய்க்குட்டிகள் வளர்த்து வருகிறார். திரிஷாவின் நாய் பாசத்தை உணர்ந்து நிறைய பேர் தெரு நாய்களை பிடித்து போய் தேனாம்பேட்டை செனடாப் ரோட்டில் உள்ள திரிஷா வீட்டு முன்னால் விட்டுப் போகின்றனர். அவற்றை சளைக்காமல் எடுத்து போய் குளிப்பாட்டி சுத்தம் செய்து நெருங்கியவர்களிடம் அணுகி வளர்க்க கொடுக்கிறார்.
 
இதுபோல் ஸ்ரேயாவுக்கும் நாய்க்குட்டிகள் மேல் பிரியம் ஏற்பட்டு உள்ளது. போபால் அருகில் காரில் படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்த போது ரோட்டோரம் தண்ணீரில் தத்தளித்தப்படி கிடந்த ஒரு நாய்க்குட்டியை பார்த்தார். உடனே காரை நிறுத்தி அந்த நாய்க்குட்டியை எடுத்தார்.
 
அதன் உடல் முழுவதும் புண்ணாக இருந்தது. உடனே அதை கால்நடை ஆஸ்பத்திரிக்கு தூக்கிப்போய் மருத்துவ சிகிச்சை அளித்தார். பின்னர் வீட்டுக்கு எடுத்து சென்றார். அந்த நாய்க்குட்டிக்கு துரு என பெயர் வைத்துள்ளார். படப்பிடிப்புக்கும் அதை எடுத்துச் செல்கிறார். இது ஒரு வகையில் செல்லப்பிராணிகளின் மீது அவர்கள் காட்டும் அன்பையும் வெளிப்படுத்துகிறது, அத்துடன் அவர்களுக்கு ஒரு விளம்பரத்தையும் கொடுக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மங்காய் என்பது இதுதானோ?

சூர்யா குமுறல்

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்களின் ரசிகர்கள் பங்களிப்பு  பற்றி பேசியுள்ள சூர்யா,  " என் மீது அன்பு கொண்டவர்கள் நிறைய பேர் சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள். என்னை நானாக ஏற்றுக் கொண்டவர்கள். என்னைப் பற்றியும் என் படங்களைப் பற்றியும்  அவர்கள் செய்யும் பதிவேற்றம் ஆச்சர்யப்பட வைக்கிறது.

அநாகரீகமாக எழுதுபவர்களும் இத்தகைய சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள்.  சுவற்றில், தியேட்டரில் கழிவறைகளில் இப்படிப்பட்ட கிறுக்கல்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அத்தகைய கிறுக்கல்களை இப்படிப்பட்ட சமூக வலைதளங்களில் போட அவர்கள் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்.

பெருவாரியான மக்களைச் சென்றடையும் ஒரு சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களைத் திட்டுவதாலோ, குறை சொல்வதாலோ அவர்களின் வெற்றியை நீங்கள் பறித்துவிட முடியாது. 

திரைபடத்தை பார்த்துவிட்டு தங்களது விமர்சனத்தை சொல்வதில் தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் நடிகரைப் பற்றியோ அவரது குடும்பத்தைப் பற்றியோ அவதூறாக பேசுவது சரியல்ல.

என்னைப் பொருத்தவரை இம்மாதிரியான அவமதிப்புகள் உண்மையான கலைஞர்களை பாதிக்காது.  சமூக வலைதளங்களில் இப்படி தரக்குறைவாக எழுதுவோர் இதை புரிந்து கொள்ள வேண்டும்