நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 26, 2011

ஜாம்பவான்களே...உங்களால் முடியும்!?

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல 
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன் - தேவர் மகனில் கமலஹாசன்.

மனசாட்சி: இப்படி தமிழனை உசுபேத்தியே..., எந்த ஏரியாவை காட்டி கல்லா கட்டினிகளோ அந்த ஏரியாவில்தான் தண்ணி பிரச்னை - ஒரு குரல் கொடுங்களேன். (முடியுதான்னு பார்ப்போம், விஷயங்கள் பல அறிஞ்சவர் - வெவரங்கள் பல புரிஞ்சவர்) 
   

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இடவேண்டாம் தங்க மகுடமும் தர வேண்டாம்
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா.
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா - படையப்பாவில் ரஜினிகாந்த்.

மனசாட்சி: சார், அவ்வளவு எல்லாம் வேணாம். முல்லை பெரியாருக்காக
 ஒரு குரல் கொடுங்களேன். (எல்லாம் வீண் ஜம்பம்.  தமிழனின் காசு வேணும். தமிழனை வைத்து பிழைக்கணும்).
எல்லாம் காலம் கடந்து புரியுது - புரிய வைத்தமைக்கு நன்றி   

டிஸ்கி - எதுக்காக தமிழ் நடிகர் திலகம் போட்டோ கேட்பவர்களுக்காக - இந்த இரு படங்களிலும்  ஒரு ஒற்றுமை  என்னனா தமிழ் நடிகர் திலகம் இவங்களோட நடித்து இருப்பார்.. நடிகர் திலகம் போட்டாவை பார்த்தாவது தமிழ் நடிகர் நடிகைளுக்கு தமிழ் உணர்வு வருதான்னு பாப்போம்

தமிழச்சி பால் குடிச்சவண்டா.....தமிழன் பாரதிராஜா





முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.


இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "நான் வரலாறு, இலக்கியம் படித்ததில்லை. ஆனால் மக்களை உணர்வுப்பூர்வமாக படித்தவன். தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள். அந்தப் பெருந்தன்மை காரணமாகவே இன்று தன் உரிமைகளையும் இழந்து வருகின்றனர். இனியும் இந்த நிலை தொடர வேண்டுமா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தந்திரப்போக்கை கையாள்கிறது.


ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக நடிகர்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை, பணத்தைச் சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் இனி ஏமாந்தால் பாலைவனமாகிவிடும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர்? இனி இந்தப் பெயரே இருக்கக்கூடாது. தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயரை மாற்றுங்கள்.
 


முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி தேனி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள், வன்முறைச் செயல்களாக கேரளத்தில் சித்திரிக்கப்படுகின்றன. தமிழர்கள் கேரள மாநிலத்தில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.



கொசுறு:  

தனது கொடிவீரனும், அன்னக்கொடியும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் பாரதிராஜா. மேலும், தனது இரு மலையாள நாயகிகளையும் அனுப்பி வைத்து விட்டாராம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், தானே மலையாள நடிகைகளை வைத்து படத்தை தொடர்ந்து இயக்கினால் சரியாக இருக்காது - பாரதிராஜா.


மனசாட்சி:

தமிழன்டா.. இவர் கேட்பதை தான் தமிழ் நாட்டு மக்களும் கேட்கின்றனர் - அடியே, ஆப்பு இருக்குடி. 

தமிழன் முன்னுக்கு வர சினிமா மாயை விட்டாலே போதும்.

நன்றி - படங்கள் கூகிள்

அமைச்சரவை விரைவில் மாற்றம்



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் ஏன் மாற்றப்படவில்லை என்று பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள்:

போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,
தொழில்துறை அமைச்சர் வேலுமணி,

வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி

வனத்துறை அமைச்சர் பச்சமால்,

வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்

உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் அல்லது அமைச்சர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டெல்லி புறப்பட்டதும் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

மனசாட்சி : 6 மாதத்தில் 7வது முறையாக மாற்றம் 

செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.



வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி நின்றன.

எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாமல் திணறி விட்டன. அலுவலகளுக்குச் செல்ல கிளம்பியோர் வாகனங்கள் தேங்கிப் போனதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டனர்.

பிரதமர் வருகைக்காக இப்படியா போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது என்று மக்கள் குமுறித் தள்ளி விட்டனர்.

மனசாட்சி: செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.

இவரு தான் செயல் படலைனா போற இடம் எல்லாமுமா # டவுட்டு

பாப்பாவுக்கு இப்படி படுத்தால்....வருதாம்.






பாப்பாவுக்கு இப்படி படுத்தால் தான் தூக்கம் வருதாம்






சின்ன வயதில் விளையாடிய கன் அதாங்க துப்பாக்கி.

தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் கைது



பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக இன்று காலை கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னையிலும் தேமுதிகவினர் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள்.


மனசாட்சி: அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்