நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 7, 2011

செய்திகளும் மனசாட்சியும் - 1

  • கேரளாவில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்பட்டால் திமுக முக்கிய முடிவை எடுக்கும்- கருணாநிதி
        எப்போ எல்லாம் முடிந்த பின்னயா?

  • கேரளாவின் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை- ராஜ்யசபாவில் சிபிஐ, சிபிஎம் குற்றச்சாட்டு
போங்கையா போங்க கண்ணாடியை கலட்ட சொல்லுவே ... ங்கொய்யால

  • தமிழ்ப் பெண்களைத் திட்டி, சேலைகளைக் கிழித்து மானபங்கப்படுத்திய கேரளாக்கார்ரகள்

தமிழன் எங்கு போனாலும் அடி வாங்கி/அவமானப்பட்டு  பழகி போச்சி
டிஸ்கி:செய்திகளும் மனசாட்சியின் ஆதங்கமும்

யு ட்யூப்பின் கொலவெறி?

தனுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி என்ற தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது.

தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது.

இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு, இணைய வலிமை குறித்து புரிய வைக்க ஒரு வாய்ப்பாகவே இந்தப் பாடல் பார்க்கப்படுகிறது.

ஒரு கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் குறித்து டைம் பத்திரிகையே தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கொல வெறி பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் முழு ஆடியோவும் வெளியாக உள்ளது.

இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிருத், ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!

டிஸ்கி - அது என்ன படத்தின்  தலைப்பு '3' - தமிழில் '௩' இது தான் ஏன் ஆங்கில தலைப்பு? (why this kolaveri) - சரி பெரிய எடத்து பொல்லாப்பு நமக்கேன் கொலவெறி.

'இது' தமிழ்நாட்டில் இல்லிங்கோ!

கடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்ட திருத்தத்திற்கு குஜராத் ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.

குஜராத்தில் முழுமையான மதுவிலக்கு இருக்கையில் இவ்வாறு கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க தான் இந்த கடுமையான சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பலவீனம் கேரள அரசியல்வாதிகளிடம்தான்- தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர்

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை கேரள சமூக விரோதிகள் அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றும், அதனால் பக்தர்கள் பாதிப்புக்கும், தவிப்புக்கும் உள்ளாகி உள்ளனர். அதோடு பஸ் பயணிகளும் தாக்கப்படுகிறார்கள் என்றும் அறிய வருகிறேன்.

இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இது தமிழ்நாடு, கேரளாவுக்கும் இடையே நிலவி வரும் உறவுக்கு நல்லதல்ல.

மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசின் கடமையாகும். பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தாலும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினர் கண்டு கொள்ளாமல், அங்குள்ள சமூக விரோதிகளுக்கு அவர்கள் உடந்தையாகவும் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும்.இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசோ மௌனம் காக்கிறது. பிரச்சினை இந்த அளவுக்கு வளர மத்திய அரசுதான் காரணம். 2006 ஆம் ஆண்டே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய அரசு நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த கலவரம் ஏற்பட்டு இருக்காது.

இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியின் கையில் தான் உள்ளது. கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கின்றன. இருப்பினும் அப்பாவித் தமிழ் மக்கள் கேரளாவில் தாக்கப்படுவதை இந்திய, கேரள அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேரளாவைச் சேர்ந்த சமூக விரோதிகள் மீதும், இப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீதும் இந்திய அரசும், கேரள அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்கள் தாக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பலவீனம் அணையில் இல்லை, கேரள அரசியல் வாதிகளிடம்தான் உள்ளதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஏய், நேத்து பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?

பெண்களால் ரகசியத்தை ரகசியமாக வைக்கவே முடியாது என்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதுக்கு ஆய்வு எங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

ஆனால் தெரிந்த விஷயத்திற்காகவும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 3,000 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 10ல் ஒரு பெண் தன்னால் ரகசியத்தை மனதில் வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று சொன்னால் கூட அவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியதாம்.

ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 85 சதவீதம் பேருக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பொறணி பேசுவது என்றால் அலாதிப் பிரியமாம். 13 சதவீதம் பேருக்கு வேண்டும் என்றே பொறணியைக் கிளப்பிவி்டுவதில் ஒரு ஆத்ம திருப்தி.

ஒரு படத்தில் வடிவேலு அரஜுனிடம் தான் எப்படி ஒரு பேக்கரி உரிமையாளரானார் என்பதை கூறிவிட்டு இல்லை உளறிவிட்டு அது பரம ரகசியம் யாரிடமும் சொல்லிவிடாதே என்பார். விடிந்து பார்த்தால் ஊருக்கே அந்த ரகசியம் தெரிந்திருக்கும்.

நம்ம பெண்களும் அப்படி தான் இருக்கிறார்கள். அதனால் ஆண்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றால் அதை ஒரு பெண்ணிடம் கூறி யாருக்கும் சொல்லிவிடாதே என்று கூறுகிறார்கள். உடனே அந்த விஷயம் ஊருக்கே பரவி விடுகிறது.

கூடி, கூடிப் பொறணி பேசுவதில் பெண்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது.

உலக விஷயங்களைத் தெரிந்து கொள்வதை விட அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் பெரும்பாலான பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். நமக்குத் தெரியாதது கூட நம்ம வீட்டுப் பெண்களுக்குத் தெரிந்திருக்கிறதே என்று ஆண்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு பெண்களின் கியூரியாசிட்டி இருக்கிறதாம்.

பகலில் பார்த்துப் பேசணும், ராத்திரியில் அதுவும் பேசக் கூடாது என்பார்கள். இந்த வரிசையில், பெண்களிடம் பேசவே கூடாது என்பதையும் சேர்க்கலாம்

நமக்கே கொலவெறி வரும்

வாழ்கையில் சந்தோசம் வேண்டுமா?

உள்ளத்தில் இருக்கும் சோகத்தை மறைக்க உதடுகள் நடத்தும் நாடகம் தான் - புன்னகை..!

வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு.
வெற்றி உன்னிடம் வந்தவுடன் குதிரையை விட வேகமாக ஓடு.
அப்போது தான் வெற்றி உன்னிடமே நிலைத்திருக்கும்..!

விட்டு கொடு விருப்பம் நிறைவேறும்.
மன்னிப்பு கொடு தவறு குறையும் .
மனம் விட்டு பேசு அன்பு பெருகும் ..!

வாழ்கையில் சந்தோசம் வேண்டுமென்றால் உன்னை நேசி.!
சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் மற்றவர்களை நேசி..!

நமக்காக காத்திருக்கும் அன்பும், நம்மை காக்க வைக்கும் அன்பும் என்றுமே இனிமை தான் ..!


உன் நினைவு இல்லாத நாள் , என் நினைவு நாள் ..!

சிந்தித்து செய்தால் கிடைப்பது வெற்றி - செய்துவிட்டு சிந்தித்தால் கிடைப்பது அனுபவம்..!

சந்தோசமாக வாழ முயற்சி செய்யாதே- நிம்மதியாக வாழ முயற்சி செய் : சந்தோசம் தானாகவே வந்துவிடும்..!

பிரிவு என்பது உறவின் முடிவல்ல -அது நினைவுகளின் ஆரம்பம்..!



நன்றி மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பருக்கும் படைப்பாளிக்கும்.

ஒய் திஸ் கொலவெறி...






என்னா ஒரு ஒத்துமை