நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, March 25, 2013

நடுவுல கொஞ்ச நாளா காணோம்

வணக்கம்


பையன் : உனக்கு ABCD ல A to Z, நல்லா தெரியுமா?

பொண்ணு : ஆமா

பையன் : “ABCDEFGHIJKLMNOPQRSTVWXYZ” இதுல எந்த எழுத்து இல்ல?

பொண்ணு : ம் ம் .........  ".U "

பையன் : கரைக்ட்டு.....எங்கே போச்சி அது?


பொண்ணு : எனக்கு தெரியாது..... ஆமா எங்கே போச்சி..

பையன் : "U" எங்  இதயத்துல இருக்கு


ஹே..... நாங்கெல்லாம் அப்பவே அப்பூடி......இப்படியும் லவ்வ  சொன்னோமுல்ல.இவள் அண்டை வீட்டு பெண்

இவள் தனியாகத்தான் இருக்கிறாள்

இவள் வீடு இருப்பது எனது வீட்டுக்கு நேர் எதிரே

இவள் வீட்டை  எனது அறையில் இருந்து கொண்டு தெளிவாக பார்க்கலாம்

இவளை  நான் தினமுன் எனது அறையில் இருந்து பார்ப்பேன் வேலைக்கு போகும் போதும் வேலை முடித்து வரும் போதும்..

ஒருநாள்..........

எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவள் என் வீடு நோக்கி வருவதை கண்டு.....

என் வீட்டு கதவை தட்டியதும்....

துள்ளி குதித்து ஓடி கதவை திறேந்தேன்

என்னை நேருக்கு நேராக பார்த்து :- இப்ப தான் வந்தேன் ரொம்ப ஜாலி மூடில் இருக்கேன் இன்று இரவு முழுவதும் சந்தோசமாக இருக்கணும்
இன்று இரவு நீங்க ப்ரீயா?

உடனடியாக சொன்னேன் : ஆமாம் நான் ப்ரீதேன் எந்த வித வேலையும் இல்ல 

அவ சொன்னா : நல்லது மிக்க மகிழ்ச்சி எனது நாயை பார்த்து கொள்ளுங்கள் 


ஹா ஹா ஹா முதுமை....எல்லோருக்கும் வரும். 

தலைப்பு : நடுவுல கொஞ்ச நாளா காணோம்.... அட எங் பதிவ சொன்னேனுங்கோ...

=========================================

இன்று நான் அப்பாவாகிய தினம்

ஆமுங்க.. என்ற மகனுக்கு பொறந்தநாளுங்கோ......

====================================================


வாழ்க்கையில் இந்த நாலு விடயத்தில் முழுமையாக திருப்தி எந்த மனிதனாலும் அடைய முடியாது
1. கைபேசி (மொபைல்)
2. வாகனம் (ஆட்டோமொபைல்)
3. தொலைக்காட்சி பெட்டி (டி வி)
4. மனைவி /கணவன்
ஏன்னா,.... பக்கத்துலையே வேறு நல்ல மாதிரிகள் இருப்பதால்/தெரிவதால்.