நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 31, 2011

ரேப் சீனுக்கு கூப்பிடுறாங்க

பாலியல் பலாத்கார காட்சிகள் நடிக்கத் தான் என்னை அதிகம் அழைக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் வருத்தப்படுகிறார்.

நடிகை ராக்கி சாவந்த் தனது நடிப்பை விட சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏதாவது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வார். சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ராக்கி வித்தியாசமாக ஒரு புலம்பலை வெளியிட்டுள்ளார். எனக்கு பலாத்கார காட்சிகளில் நடிக்கத் தான் வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க எனக்கு விருப்பமில்லை. என்னை ஏன் இப்படிபட்ட காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது என்று ராக்கி தெரிவித்துள்ளார். மேலும் கூடவே, ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனேவையும் வம்புக்கிழுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நான் ஆடும் பாடல்கள் ஆபாசமாக உள்ளது என்று தணிக்கை குழு நிராகரிக்கிறது. ஆனால் என் பாடல்களை விட ஆபாசமான 200 பாடல்களை என்னால் காட்ட முடியும்( எடுத்துக்காட்டாக ஜான் ஆபிகாம் மற்றும் தீபிகா படுகோனே பாடல்கள்). கான், கபூர், பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பதற்காக தணிக்கைக் குழு என்னையே குறி வைக்கக் கூடாது.

இத்தனை நாட்களாக டிவியில் கவனம் செலுத்தினேன். தற்போது புதிய உதவியாளரை பணியமர்த்தியுள்ளேன். விரைவில் என்னை பெரிய திரையில் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் தேஜாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

3 comments:

 1. பாலியல் பலாத்கார காட்சிகள் நடிக்கத் தான் என்னை அதிகம் அழைக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் வருத்தப்படுகிறார்.//

  டிவி நிகழ்ச்சியில இவங்ககிட்டே அகப்பட்டு அவமானப்படும் ஆண்களை சொல்லிமாளாது, நாசமா போகட்டும் விடுங்க...!!!!

  ReplyDelete
 2. MANO நாஞ்சில் மனோ said...
  டிவி நிகழ்ச்சியில இவங்ககிட்டே அகப்பட்டு அவமானப்படும் ஆண்களை சொல்லிமாளாது, நாசமா போகட்டும் விடுங்க...!!!!

  ஒ நீர் அந்த நிகழ்ச்சியை சொல்றிகளா? செருப்படி ஐயய்யோ மானம் கப்பல் ஏறுட்சே

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...