நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, June 9, 2012

திரிஷாவுடன் அந்த மூன்று விஷயங்கள்

 

கடந்த பதிவில் பிரேக் கேட்டு இருந்தேன் சோ,
பிரேக்குக்கு பின் :
(பிரேக்கில் நடந்தவைகள் விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்)

மனித  வாழ்க்கையில் மூன்று விஷயங்கள்:


அழிவுக்கு காரணம் - பேராசை, பெருமை, கோபம்


மிகவும் மதிப்புமிக்கது  - சுயமரியாதை, நேரம், நேசிப்பு


பெரிய மனிதர் ஆக - கடின உழைப்பு, நேர்மை, வெற்றி


உறுதியாக சொல்ல முடியாது - கனவுகள், வெற்றி, அதிர்ஷ்டம்


மீண்டும்வாராதது - வார்த்தைகள்,  வாய்ப்பு,  நேரம்


இழக்க  கூடாது - அமைதி, நம்பிக்கை, நேர்மை



நாசா,  செவ்வாயில் சென்று வேலை செய்வோருக்கான நேர்முக தேர்வு நடக்குதுங்க:

(குறிப்பு - செவ்வாய் சென்றால் பூமிக்கு திரும்ப முடியாதுங்க)   
 
முதல் விண்ணப்பதாரருங்க, ஒரு இத்தாலியருங்க, அவரிடம் செவ்வாய் செல்ல எவ்வளவு டாலர் வேண்டும் என்று கேட்க படுகிறதுங்க?
அவர் பதில் சொல்கிறாருங்க: ஒரு மில்லியன் டாலர்கள் வேண்டும் அதை நான் தொழில் கல்வி  நிறுவனத்துக்கு தானமாக சமர்பிப்பேன்ங்க. 
 
அடுத்த விண்ணப்பதாரருங்க, ஒரு அமெரிக்கருங்க, அதே கேள்வியை கேட்டாங்க. அவர் இரண்டு மில்லியன் டாலர்கள் கேட்டாருங்க.
 
"நான், என் குடும்பத்துக்கு  ஒரு மில்லியன் கொடுக்க வேண்டும்ங்க,"மற்றும் மருத்துவ ஆராய்ச்சி முன்னேற்றம் துறைக்கு ஒரு  மில்லியன் தானமாக சமர்பிப்பேங்க."என்று அவர் விளக்கினார்ங்க.
 
கடைசியாக விண்ணப்பதாரருங்க இந்தியருங்க,  அதே கேள்வியை கேட்டார்கள், நேர்காணல் நடத்துபவரின் காதில் முணுமுணுத்தாருங்க  "மூன்று மில்லியன் டாலர்கள்." என்று கோரிக்கையைங்க.
  
"ஏன் அப்படி மற்றவர்களை விட அதிகமாக?" பேட்டியாளர் கேட்டாருங்க.
 
இந்தியருங்க  "நீங்கள் எனக்கு $ 3 மில்லியன் கொடுத்தால், உங்களுக்கு  $ 1 மில்லியன் கொடுப்பேனுங்க, நான் $ 1 மில்லியன் வைத்துக்கொள்வேனுங்க, மற்றும் நாம் $ 1 மில்லியன் கொடுத்து இத்தாலியரை  அனுப்பி வைப்போம் என்றாருங்க.                            இது எப்பூடீ ......


விழிப்புணர்வு:



உண்மை சம்பவம்: இந்த படம் ஒரு பாடத்தை பதிவு செய்கிறது
தயவு கூர்ந்து உங்களின் (கனரக, இலரக) வாகனத்தை இயக்கும்
 முன் வாகனத்தை சுற்றி சோதனை செய்யுங்கள்.


மனபிராந்தி  : காத்துவாக்கில & காதுல 
 
பட்டொளி வீசி பறக்குது பல வண்ணங்களில் கட்சிக்கொடிகள்

சாராய காசில்.. 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


பிரேக் எடுத்ததில் இருந்து

எல்லாமே பிங்க் பிங்கா தெரியுதே.... கண்ணுல கோளாறோ??