நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, January 8, 2015

என்ன நீ திட்டுவ..பொண்ணு : ஹாய்

பையன் : ஹை

பொண்ணு :  என்னாச்சி

பையன் : ஒண்ணுமில்ல

பொண்ணு : இல்ல...சொல்லுப்பா என்னாச்சி...முகம் வாடிபோய் இருக்கே

பையன் : நா உங்கிட்ட ஒன்னு கேப்பேன் நீ உண்மைய சொல்வியா

பொண்ணு : ம்...சொல்றேங்

பையன் : ஆரூ அவங் ...பேஸ்புக்குல உங் எல்லா ப்ரோபில் படத்துக்கும் லைக் பண்ணுறாங் உன் ஸ்டேட்டாஸ் கம்மண்டுறாங்...ஆரந்த முட்டாள்

பொண்ணு : தயவு செய்து அவனை பத்தி எதுவும் சொல்லாதே

பையன் : ஏங்...உங் பழைய பாய் பிரண்டா? இன்னும் அவனை காதலிக்கிறாயோ?

பொண்ணு :நா எதுக்கு லவ்வனும்...நீ மட்டும்தேங் எங் லவர்

பையன் : அப்படிங்னா அவங் உங் சகோதரனா?

பொண்ணு :இல்ல இல்ல அப்படீலாம் இல்ல

பையன் : அப்படிங்னா ஆரவன்?

பொண்ணு :நாம வேற எதாவது பேசுவோமா?

பையன் : ஆக எங்கிட்ட எதையோ மறைகிற....அந்த அளவுக்கு நீ அவங்ட தொடர்புள்ள இருக்க..... அவங்தேங் ஒனக்கு முக்கியம்..அப்படிதானே?

பொண்ணு : அந்த ரகசியத்தை சொன்ன கண்டிப்பா என்ன நீ திட்டுவ

பையன் : எனக்கு எரிச்சலா  இருக்கு எங் பொறுமைய சோதிக்காதே

பொண்ணு : வேணாம் விடேங்...பிளிஸ் டா
பையன் :இப்ப நீ சொல்லல இந்த நிமிசமே நாம பிரிஞ்சுடலாம்.

பொண்ணு :ம்ம் சொல்றேங்...சத்தியம் பண்ணு என்னை திட்ட மாட்டேங்னு

பையன் : ம்.....ஒக்கே

பொண்ணு :ம்ம்ம்ம்ம்...அது என்னோட பேக் ஐ டி- யாருமே லைக்
பண்ணலேங்னா....அந்த பேக் ஐ டி மூலமா நா லைக் போடுவேங் அப்பறம் நீ நல்ல அழகா இருக்கே...கவர்ச்சியா இருக்கே அப்டீங்னு கமண்டுவென்...
........!!!!!

பையன் :____________________ (?)