நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, March 28, 2012

யம்மாடியோவ்.... மனசாட்சியே இல்லையா?

மூணு முணுன்னு ஒரு படம் வருதே என்னடா அந்த 3?

 ஸ்... யப்பா....இப்ப தான் புரியுது கொலவெறி படத்தின் தலைப்பு.உதயசூரியன் உதிக்குதே
(அம்மணி,  ஒரு வேளை நீங்க கட்சி மாறீனா? மாற மாட்டீங்க ஒருகால் மாறீனா மறுக்கால பச்சைய....???)யம்மாடியோவ்......
 கலாச்சாரம்........ விளங்கிடும்டா...

உண்மை சம்பவம்: வளைகுடா நாட்டில் ஒரு நிறுவனத்தில் புதிதாக வாங்கிய டீசல் கனரக வாகனம்   (New Fuel Tanker ) புதிதாக சேர்ந்து இருந்த  சேர்ந்த டேமேஜர், மேற்பார்வையாளரிடம்(அதாங்க சூப்பர்வைசர்) சொன்னாரு:

வாகனத்தில் டீசல் பியுள் மற்றும் நோ ஸ்மோகிங் அப்படின்னு அரபி மொழியில் எழுத சொல்லி, அதாவது   "Diesel Fuel" in Arabic and "No Smoking " in Arabic.

நடந்தது என்னன்னா படத்தை பாருங்கோ:


நாங்கெல்லாம் ஆரு....எப்புடீ

விஸ்கி : லொள்ளு &  ஜொள்ளு

மங்கள சீருடையில்  மல்லிகையும் மகிழ்ந்த முகத்துடன்....

அதிரடி கண்ணசைவில்....  மிரட்டுறியே  செல்ல கிறுக்கி... .

Sunday, March 25, 2012

பொய் அழகில் மயங்கி விடாதே

 இதுதாண்டா.. இவ்வளவுதானடா.. 
புற அழகில் மயங்கி விடாதே 


புற தோற்றத்தில் ஏமாந்து விடாதே 


  மதிப்பிடுகள் தெளிவாக இருக்கட்டும்.

(இதில் அரசியல் இல்லை நம்புங்க)பன்னிகுட்டிக்கு எத்தனை கால்கள்?

A. நாலு கால்கள்         B. நான்கு கால்கள்


C. நாலே கால்கள்        D. இரண்டு கால்கள்

(லைப் லைன் 50/50 பயன்படுத்திய பின்)

நாங்கள் வெல்லுவோம்  கோடி


வரி விதிப்பு கடை அடைப்பு சாமானியன் தவிப்பு

(இப்புடி படங்களில் தான் பார்க்கோனுமோ)


யாரைத்தான் நம்புவதோ??விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு

 கண்ணுக்கு மெய் அழகு

உதட்டுக்கு பொய் அழகுநன்றி படங்கள் கூகிள்

Wednesday, March 21, 2012

மன அழுத்தமுடன் புன்னகை கொள்வோம்

பர பரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு. இது தவிர அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் பணமும், இன்றைய ஆடம்பார வாழ்க்கைச் சூழலும் கூட மன அழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன. நமக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை விரட்ட எளிய பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் தெரபி

ழமாய் சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தத்தை விரட்ட முடியும் என்று பல்வேறு நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. இதனால் தசைகடள தளர்வடைகின்றன. மனமும் இயல்பு நிலையை அடைகின்றன. அடிவயிற்றில் கையை லேசாக வைத்துக்கொள்ளுங்கள். ஆழமாய் சுவாசிக்கவும் அப்பொழுது அடிவயிற்றின் அசைவுகளையும், மனமும், உடலும் லேசாக மாறுவதையும் உணரலாம்.

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்பு. பற்களை இறுக கடித்தபடி காதுக்கு கீழ் சுட்டுவிரலால் அழுத்தவும். நீளமாக மூச்சை உள்ளிழுத்து அதனை வாய் வழியாக வெளியேற்றவும். மனஅழுத்தத்தின் சுவடுகள் உடலில் தங்காமல் வெளியேறிவிடும்.

இடைவெளி விடுங்கள்

மன அழுத்தம் அதிகமாகுதா? செய்யும் வேலையில் இருந்து சிறிதுநேரம் இடைவெளி விடுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மரங்கள் அடர்ந்த சோலையில் சில நிமிடங்கள் நடக்கலாம் அல்லது ஓய்வறைக்கு சென்று சிறிது தண்ணீர் அருந்தலாம். இதனால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கருத்து.

அழுத்தம் போக்கும் இசை

மன அழுத்தம் போக்குவதில் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. மன அழுத்தம் காரணமாக அதீத டென்சன் ஏற்படும் போது மனதிற்கு பிடித்த பாடலை ஹெட்போன் மூலம் கேட்கலாம். இதனால் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து போகும் மனம் அமைதியாகும். எனவே கையோடு ஹெட்போன் வைத்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பை குறைக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.


கொஞ்சம் புன்னகை

 
கொஞ்சம் புன்னகை? - இந்த அளவுக்கு போதும்.

 இடியே விழுந்தாலும் பதற்றம் வேண்டாம். ஏனென்றால் பதற்றத்தோடு எழுபவன் தோல்வியோடு உட்காருவான் என்ற பழமொழியே உள்ளது. எனவே எதனால் இது நேர்ந்தது என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தாலே பிரச்சினையின் தீர்வு பிடிபடும். அப்புறம் என்ன உங்களுக்கு டென்சன் ஏற்படுத்திய சம்பவத்தை கொஞ்சம் புன்னகையுடன் சமாளியுங்கள். மன அழுத்தம் அழுது கொண்டே ஓடிப்போகும்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

பூவும் புன்னகையும் பூத்து குலுங்கும் ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும்

மனஅழுத்தம்   கொள்ள வைக்குமடி....உனை காணும் மானிடருக்கு.


Tuesday, March 20, 2012

கோடையை ஜில்லாக்கும் தித்திக்கும் கனியழகி

கோடையை உணர்த்தும் விதமாக காலை நேரத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. என்னதான் வெயில் என்றாலும் வேலை மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக வெளியில் சென்றுதான் தீரவேண்டும். வெப்பத்தினால் உடலில் நீர்சத்து குறைவதோடு நாவறட்சியும், தாகமும் ஏற்படுகிறது. எனவே கோடையை சமாளிக்க பழச்சாறுகளை உட்கொண்டால் வெப்பத்தினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை சமாளிக்கலாம். உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.

சுக்கு மல்லி மூலிகைச் சாறு

கோடை காலத்தில் உஷ்ணத்தினால் பித்தநோய் ஏற்படுவது இயல்பு. எனவே இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சுக்கு தட்டிப்போட்டு அதனுடன் கொத்தமல்லியை பொடி செய்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அதில் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து ஆறவைத்து அருந்த வேண்டும். இதனால் பித்த நோய் குணமாகும்.

மாம்பழச் சாறு

மாம்பழத்தை நன்றாக தோல் உறித்து அதனுடன் பால் கலந்து மிக்சியில் அடித்து ஐஸ் சேர்த்து கோடைக்கேற்ற குளுமையான சத்தான பானத்தை அருந்தலாம்.

தர்பூசணிப்பழச் சாறு

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் தர்பூசணி பழத்தை அதிகம் உண்ணலாம். இந்தப் பழத்தை சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

எலுமிச்சைச் சாறு

உடல் களைப்பு, கை, கால் மூட்டுக்களில் உள்ள கணுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

எலுமிச்சைச் சாறுடன் தேன் அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீர் பானம்

இளநீரை எந்த பருவத்திலும் அருந்தலாம். கோடையில் இளநீர் ஏற்ற பானம். இளநீருடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.

தக்காளிச் சாறு

தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.

கோடை காலத்தில் தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

ஆப்பிள் பழச்சாறு

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சை பழச் சாறு

கோடையில் திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சு பழச் சாறு

ஆரஞ்சு பழச்சாறு அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும்.

இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம் தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.

பாதாம் பால், தேன்

பாதாம் பருப்பை நன்கு பொடித்து அதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் தேன் கலந்து ஏலக்காய் தட்டிப்போட்டு காய்ச்சி ஆறவைத்து ஃப்ரிட்ஜ்ல் வைத்து குடிக்கலாம் கோடைக்கேற்ற சத்தான பானம் இது.விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
தித்திக்கும் திராட்சை கண்ணழகி

 திகட்டாத உதட்டழகி
 

Saturday, March 17, 2012

பிகர்.. பீர்... கும்மாளம் ஜில் ஜில் திருவிழா.

ஜெர்மனி நாட்டில் முனீச் நகரில் நகரம் முழுவதும் பீர் திருவிழா நடக்கும். விழாவின்போது எல்லா வகை பீர் பானங்களும் தாராளமாக வினியோகம் செய்யப்படும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரும் இந்த விழாவில் கலந்து கொண்டு பீரை ருசிப்பர்.

பாருங்க...  மக்காள்ஸ்... 

சுவர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் இருக்கட்டுமேபால் ஆடை தெரியும். ஒ... இது  பீர் ஆடையோ?

பாட்டில் மயங்குபவர்கள்  உண்டு இவுக பாட்டலில் மயங்குபவர்களோ

 ம்....விழா... திருவிழா


 சியர்...............ஸ்........  


ஒரே கள்ப்புல....

ஜில் ஜில் திருவிழா.


இம்ம்புட்டுமா...தாங்குமா(எம்புட்டு சந்தோசம்)

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்


கும்மாளம் அவ்வ்வ்வ்வ்வ்

எம்மாம் பெருசு...... (கிளாசை சொன்னேன்)


எவ்ளவ்.... பெ..ரிய்...ய..   டம்ள..ரூ 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

?...?....?....  

பால் குடிக்கிற வயசுல தம்மும், தண்ணியும்  எதிர்காலம் 
ரொம்ப பிரைக்ஹ்டா இருக்கும்லேய்.
.


Wednesday, March 14, 2012

கத்திரி வெயிலிலும் அழகாய் ஜொலிக்கனும்

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெயிலுக்கு பயந்து கொண்டு வெளியில் செல்லாமல் இருக்கமுடியாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப்போய்விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

தயிர் கலவை

வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம்
, கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.

கருமை மறையும்

வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன்
, சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக

பாசிப் பருப்பு
, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சைசாறு , தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

உருளைக் கிழங்கு பவுடர்

தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை
, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.

பச்சைக் காய்கறிகள்

உடம்பில் சூடு அதிகமாகும்போது
, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.

இரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம்
, கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்காதிருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ளவேண்டும்.

இயற்கை சிகைக்காய் பவுடர்

தலையில் அழுக்கும்
, பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இதற்கு சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை தக்கவைப்ப தோடு, கருமையும் மறைய தொடங்கும்.

வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். புருவங்களை சீர்படுத்தி
, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்துக் கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச் செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க விரும்பும் வசதி படைத்தவர்கள் கோல்ட் பேஷியல் கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.

மேக் அப் கவனம்

வெயிலும்
, நெரிசலும் அதிகமாக இருப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்-ஐ முகத்தில் தேய்த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க பவுடர் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க வேண்டும். அவரவர் நிறத்துக் கேற்றாற் போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங்கும்.

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

கொறைஞ்சது இந்த அளவுக்காவது கேரண்டிங்.

Sunday, March 11, 2012

திருமணம் Vs மறுமணம் கலாட்டா கும்மி1. திருமணம் என்பது:

உணவகம் செல்கிறிர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று  நீங்கள் முடிவு பண்ணி ஆர்டர் பண்ணனும் அதை விட்டுட்டு  மற்றவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து  அதேயே ஆர்டர் செய்வது?!.  
----------------------------------------------------------------------------

2. ஆண்:  நீண்ட ஆயுள்  பெற ஏதாவது வழி இருக்கா?


டாக்டர்: கல்யாணம் பண்ணிக்குங்க.

ஆண்: கல்யாணம் பண்ணினால்... முடியுமா?

டாக்டர்:  இல்ல, நீண்ட ஆயுள் வேணும் என்ற எண்ணம் வராது.
-----------------------------------------------------------------------------

3..கல்யாணத்தின் போது தம்பதிகள் இருவரும் கைகளை கோர்த்து இருப்பது ஏன்?


அது ஒரு சம்பிரதாயம்... எப்படின்னா இரண்டு  குத்து சண்டை வீர்கள் சண்டைக்கு முன் கை குலுக்கி கொள்வார்களே அது போல்
-----------------------------------------------------------------------------

4..மனைவி: செல்லம் இன்னைக்கு நமக்கு (திருமணம்) ஆண்டு விழா...நாம் என்ன செய்யலாம்?


கணவன்: இரண்டு நிமிஷம் அமைதியாக இருப்போமா?
-----------------------------------------------------------------------------

5. கடவுளை புரிந்து கொள்ள முடியல... பின்ன, அழகான பொண்ணுகளை படைத்தும்  விட்டு அவர்களை மனைவியா திருப்பி விடுறானே
-------------------------------------------------------------------------------

6. பண பரிவர்த்தனைகள் மின்னணு வங்கியை விட வேகமாக நடக்கும்னா அதுக்கு பெயர்  கல்யாணம் .


--------------------------------------------------------------------
7. கேர்ள் பிரெண்ட்ஸ் சாக்லேட் மாதிரி எப்பவும்  சுவையா இருக்கும்.

லவர்ஸ் பிஸ்ஸா  மாதிரி  ஹாட் மற்றும்  காரமாக அடிகடி சாப்பிடுவது.

கணவன்  சாதம் மாதிரி வேறு வழி இல்லாத போது சாப்பிடுவது.
----------------------------------------------------------------------------------

8. நாய்கள் ஏன் திருமணம் புரிவதில்லை?


அதுங்க ஏற்கனவே நாய் வாழ்க்கை  வாழுதுங்க.
-------------------------------------------------------------------------------

9. மறுமணம் புரிந்து கொள்ள சட்டம் மறுப்பதேன்?
 
ஏன்னா..., ஒரே குற்றத்து  இரண்டு முறை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


கடலோரம் வீசும் காற்று....

இரவிலே படுத்தால்  என் தூக்கம் என்னை திட்டும்

விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்.

Wednesday, March 7, 2012

மனைவியை சமாளிக்க சில டிப்ஸ்.


மகளிர் தின சிறப்பு பதிவு

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க : ஒரு சில டிப்ஸ்

உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.(நம்புங்க)
மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.

உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.

மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம். எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.


கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள். மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது மல்லிப்பூ அல்லது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள்.
நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.

மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


 மனசாட்சி: சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதான  கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்...

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


டீ.வியில் பவர் சோப்பு விளம்பரத்துக்கு வரும்.. இந்த புள்ள எம்புட்டு அம்சம்..னு, அழகுன்..னு மனசுக்குள்ளார  சொல்லிகோணும் அத வுட்டுட்டு வெளிபடையாக... அதுவும் மனைவியிடமே சொன்னால் கம்பெனி பொறுப்பாகாது.

Monday, March 5, 2012

கனவு காணுங்கள் என்...னே ஒரு வில்ல.த்..தனம்.


கனவு காணுங்கள். ஏன்? மனுஷ பிறவிதான்  தான் கனவு கானனுமா விலங்கு,பறவைகள் கானபடாதா?விலங்குகளின் கனவுகள்


விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு  


என்....னே ஒரு வில்ல...த்...தனம்.Thursday, March 1, 2012

பவர் ஸ்டார் ஆனந்த தொல்லையாக..வந்துட்டார்மக்களே ரெடியா...வருகிறார் பவர் ஸ்டார்

ஆனந்த தொல்லை....இதோ உங்களுக்கான,

உங்களுக்காக சிறப்பு காட்சி

http://www.youtube.com/watch?v=z16jBbX3iME&feature=player_embedded#!எப்புடீ....


ஆண்னென்ன? பெண்னென்ன? உண்மையான வாழ்க்கை..


நட்பு என்பது காலை மாதிரி
நாள் முழுவது கூட  வராது
ஆனால் ஓன்று மட்டும் உறுதி
தூங்கி எழும் போதெல்லாம் வரும்
 நாளையும்  வரும் ஒவ்வொரு நாளும் வரும்
அடுத்த வருடமும்  வரும்.
வாழும் நாட்கள்  தாண்டியும்  வரும். 

நட்பு என்பது வைரங்கள்  மாதிரி
அது உண்மையானதும் அரிதானதும்
பொய்யான நட்பு என்பது இலைகள் மாதிரி
அது எல்லா இடமும் சிதறி கிடக்கும் சிதறியும்  போகும்

வாழ்க்கை என்பது
6 நண்பர்கள்.. 2  பைக்குடன் ..  பெட்ரோல்  இல்லாமல்...இருப்பது.
வாழ்க்கை என்பது
புகைப்பவர்கள் 6 பேர்...ஒரு சிகரட்டுடன்   கடற்கரையில் அமர்ந்து இருப்பது.

வாழ்க்கை என்பது
எல்லாமே முட்டாள்தனமானது ஆனால் அறிவோடு ஏதோ நட்பு போல. 


விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு  

ரோஸ் பிறந்தது அழகுக்காக
மல்லிகை பிறந்தது  மணத்துக்காக
நீ பிறந்தது எனக்காகா 
நான் பிறந்தது உனக்காகா 
நீயும் நானும் பிறந்தது நட்புக்காகா.