நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, March 11, 2012

திருமணம் Vs மறுமணம் கலாட்டா கும்மி1. திருமணம் என்பது:

உணவகம் செல்கிறிர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று  நீங்கள் முடிவு பண்ணி ஆர்டர் பண்ணனும் அதை விட்டுட்டு  மற்றவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து  அதேயே ஆர்டர் செய்வது?!.  
----------------------------------------------------------------------------

2. ஆண்:  நீண்ட ஆயுள்  பெற ஏதாவது வழி இருக்கா?


டாக்டர்: கல்யாணம் பண்ணிக்குங்க.

ஆண்: கல்யாணம் பண்ணினால்... முடியுமா?

டாக்டர்:  இல்ல, நீண்ட ஆயுள் வேணும் என்ற எண்ணம் வராது.
-----------------------------------------------------------------------------

3..கல்யாணத்தின் போது தம்பதிகள் இருவரும் கைகளை கோர்த்து இருப்பது ஏன்?


அது ஒரு சம்பிரதாயம்... எப்படின்னா இரண்டு  குத்து சண்டை வீர்கள் சண்டைக்கு முன் கை குலுக்கி கொள்வார்களே அது போல்
-----------------------------------------------------------------------------

4..மனைவி: செல்லம் இன்னைக்கு நமக்கு (திருமணம்) ஆண்டு விழா...நாம் என்ன செய்யலாம்?


கணவன்: இரண்டு நிமிஷம் அமைதியாக இருப்போமா?
-----------------------------------------------------------------------------

5. கடவுளை புரிந்து கொள்ள முடியல... பின்ன, அழகான பொண்ணுகளை படைத்தும்  விட்டு அவர்களை மனைவியா திருப்பி விடுறானே
-------------------------------------------------------------------------------

6. பண பரிவர்த்தனைகள் மின்னணு வங்கியை விட வேகமாக நடக்கும்னா அதுக்கு பெயர்  கல்யாணம் .


--------------------------------------------------------------------
7. கேர்ள் பிரெண்ட்ஸ் சாக்லேட் மாதிரி எப்பவும்  சுவையா இருக்கும்.

லவர்ஸ் பிஸ்ஸா  மாதிரி  ஹாட் மற்றும்  காரமாக அடிகடி சாப்பிடுவது.

கணவன்  சாதம் மாதிரி வேறு வழி இல்லாத போது சாப்பிடுவது.
----------------------------------------------------------------------------------

8. நாய்கள் ஏன் திருமணம் புரிவதில்லை?


அதுங்க ஏற்கனவே நாய் வாழ்க்கை  வாழுதுங்க.
-------------------------------------------------------------------------------

9. மறுமணம் புரிந்து கொள்ள சட்டம் மறுப்பதேன்?
 
ஏன்னா..., ஒரே குற்றத்து  இரண்டு முறை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


கடலோரம் வீசும் காற்று....

இரவிலே படுத்தால்  என் தூக்கம் என்னை திட்டும்

விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்.

28 comments:

 1. ஹா ஹா என்ன இது இங்கை ஒரே காமெடியா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 2. //கணவன் சாதம் மாதிரி வேறு வழி இல்லாத போது சாப்பிடுவது. //
  என்னய்யா மனச்சாட்சி, மனச்சாட்சியே இல்லாம இப்படி எங்களவச்சு காமெடிபண்ணுறீர்.

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ...தக்காளி சாதம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 3. நகைச்சுவை
  கும்மி அடிக்கும்
  கலக்கல் பதிவு

  ம்ம்ம்.... கலக்குங்க கலக்குங்க

  தலைவரே
  கல்யாணம் பண்ணிடீங்களா ...?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   ஆச்சிங்...

   Delete
 4. //நாய்கள் ஏன் திருமணம் புரிவதில்லை?

  அதுங்க ஏற்கனவே நாய் வாழ்க்கை வாழுதுங்க.//

  என்ன இது ஊர்பூரா இதே நாய்பிழைப்பாயிருக்கே.

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி ஹி எப்புடீ இம்ம்புட்டு கரைக்கிட்டா...

   Delete
 5. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 6. மனசாட்சி ரொம்ம அடிபட்டிட்டாரு போல....விடுங்க..விடுங்க...அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்கோ!

  ReplyDelete
  Replies
  1. அரசியல்ல...அதான் நீங்களே சொல்லிபுட்டீயலே..

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 7. செம காமெடியா இருக்கு, அதே நேரம் எதிர் காலத்தை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. ஏ..ன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்....பயம்... பயத்தை தூக்கி போடுங்கள் நண்பரே

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 8. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுதா?

  ReplyDelete
 9. ------------------------------------------------------------------
  7. கேர்ள் பிரெண்ட்ஸ் சாக்லேட் மாதிரி எப்பவும் சுவையா இருக்கும்.

  லவர்ஸ் பிஸ்ஸா மாதிரி ஹாட் மற்றும் காரமாக அடிகடி சாப்பிடுவது.

  கணவன் சாதம் மாதிரி வேறு வழி இல்லாத போது சாப்பிடுவது.
  >>
  இது புதுசா இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. அப்படியியா..

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 10. கேர்ள் பிரெண்ட்ஸ் சாக்லேட் மாதிரி எப்பவும் சுவையா இருக்கும்.

  லவர்ஸ் பிஸ்ஸா மாதிரி ஹாட் மற்றும் காரமாக அடிகடி சாப்பிடுவது.

  கணவன் சாதம் மாதிரி வேறு வழி இல்லாத போது சாப்பிடுவது.// இதை நான் வேறு மாதிரி படித்துள்ளேனே..! ஹஹஹ

  ReplyDelete
  Replies
  1. அப்படியா....எப்புடீங்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 11. கலாட்டா பகிர்வுகள் சிரிக்கவைத்தன.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 12. கலாட்டா கும்மி... காமெடி கும்மி...

  ReplyDelete
  Replies
  1. அப்படி போடு... அ..த்...து

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 13. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...