நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, July 18, 2012

பில்லா 2 - தல வழி

காலங்காத்தாலைல இருந்தே நொய்யு நொய்யுன்னு.......அடேய்  நாதாரி இந்த கொசு தொல்லை தாங்கலடா....

என்னதானுங்டா உங்கபிரச்னை?

அண்ணே நீங்க ஒரு மேதைன்னே..

அடேய் ங்கொக்கமக்கா நிர்த்து .....மேட்டருக்கு  வா

அண்ணே சகுனி படத்துக்கு விமர்சனம் பண்ணீங்

கொய்யாலே நா எப்படா பண்னேன்?

இல்லீங்னே கருத்து சொன்னீங்

ஆமா சொன்னேன் - சகுனி - முடிச்சவுக்கி.... அதுக்கு இப்ப என்னாங்கற.?

எப்டீங்ணே?

டேய் அதுக்கெல்லாம் லிவர் வேல செய்யணும்டா கோமுட்டிதலையா.... அந்த படத்துல எத்தனை முடிச்சை சகுனி அவுக்காறு (படத்திலும் இடைவேளைக்கு முன்  ஒரு டயலாக் இருக்கே)  அதை தான்டா ஒத்தை வார்த்தையில் சொன்னேன்.

அண்ணே இந்த லிவருன்னா ?..

தெரியலயா? அதுக்குத்தான்டா ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்றது, அடேய் கோமுட்டி தலையா, மூளை மட்டும் வேலை செஞ்சா போதாது, லிவரு அந்த லிவருதான்டா முக்கியம், லிவரு போச்சுன்னா நீயும் போயிருவ ஸ்ட்ரெயிட்டா ஊ ஊஊதான்.

அண்ணே எல்லாம் சரிண்ணே இப்ப தல நடந்திருகற ச்சீ நடிச்சிருக்கற பில்லா - 2 அதுக்கும் உங்க விமர்சனம் ?

டேய் ஸ்டாப்பு நோ விமர்சனம் ஒன்லி சிங்கிள் வேர்டு

பில்லா II - தல வலி 

என்னனே இப்புடி சொல்லிபுட்டீங்க...

வேற எப்பட்றா சொல்லணும் பாஸ்பரஸ் வாயா..?

அடேய் அந்த படம் நீ பார்த்தயில்ல ஆரம்பச்சதுல  இருந்து முடியிற  வரைக்கும் தல போகற வழியெல்லாம் எம்புட்டு வேதனை, ரணம் இவ்வளவு சிக்கல் (படத்துல தலயோட டயலாக் 'என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா”) அதெல்லாம் வலிதானடா கோமுட்டி தலையா அதான் சொன்னேன் பில்லா II  தல வலின்னு .

அண்ணே இன்னும் வேற ஏதோ கருத்துன்னு சொன்னீங்களே?

அதுவாடா,  இங்க பதிவுலகத்துல சினிமா விமர்சனம் பண்றவங்க  கொள்ள பேரு இருக்காங்கடா மொதல்ல அவுங்க எல்லாம் சொல்லட்டும் அப்பறமா நாம சொல்லலாம்..


அண்ணண்ண்ணே ....


என்னடா சவுண்டு?


அண்ணே,, அடுத்து துப்பாக்கி வருது.....

ஓங்கி அப்புனன்னா உங்கன்னத்துல சவுண்டும் வரும், அடுத்து துப்பாக்கி வரும்.....விஸ்வருபம் வரும்... கோச்சடையான் வரும்...... அதுக்கு என்னடா இப்ப? ...               அடேய் கிளிசரின் தலையா எல்லாம் வரட்டும்டா  வச்சிக்கலாம்..

எப்புடின்னே இப்படி எல்லாம் திங் பண்றீங்க?

அதத்தாண்டா சொன்னேன் கோமுட்டி தலையா லிவருன்னு

அண்ணே எனக்கும் சொல்லி தாங்கண்ணே

அடேய் கோமுட்டி மண்டையா  இதெல்லாம் சொல்லி வரக்கூடாதுடா தானா வரணும்,,,.. அதுக்கு நீ ஒரு நாலு விசயத்தை தூக்கி கடாசனும்  முடியுமா?

என்ன அண்ணே அந்த நாலு விஷயம் ?

அப்பூடி  கேளு,

அரசியல், சினிமா, ஜாதி, மதம்  இந்த நாலையும் தூக்கி  அப்பாலிக்கா  வச்சுட்டு  சாதாரணமா எலும்பு,  சதை, ரத்தம்,  மனசாட்சி உள்ள மனுசனா தமிழனா  வா எப்பூடின்னு சொல்லி தாரேன்.

இப்ப அந்த கிளாஸ் எடு  லார்ஜை உத்து..    தொடரும்