ஏம்மா நீங்க ரத்த அழுத்த மாத்திரை நிறுத்திட்டீங்கள
அந்த கெரகத்தை நிறுத்தி 4 வருசமாசிப்பா
ஏங் கண்ணு கேக்குற...
இல்ல நாங், ரத்த அழுத்த மாத்திரை நிறுத்தலாமுன்னு..
அந்த கெரகத்த வேணாமுன்னா .. கேக்கமாட்டங்குற...இப்ப ஏங்கண்ணு...திடீருன்னு
அது ஒண்ணுமில்லம்மா...ரத்த அழுத்த மாத்திரை எடுத்தது மொத நெஞ்செரிச்சல், மூச்சு இளைப்பு, உடம்பு எடை கூடுது, வயிறு உப்புசம்....
அப்பறம் அதுக்கு வேறு மாத்திரை ஒரே இம்சையா இருக்கு அதாங்.
அதுவும் செரிதேங்
நேத்து நெட்ல படிச்சேங்
நெட்ல?!
ஆமாம்மா இணையதளத்தில்
சேரி சேரி
அந்த ரத்த அழுத்த மாத்திரை பக்க விளைவு அப்படின்னு நெஞ்செரிச்சல், மூச்சு இளைப்பு, உடம்பு எடை கூடுதல், வயிறு உப்புசம்......நாளடைவில் க்கல்லீரல் கூட கெட்டுபோகுமாம்.
அட கெரகமே
அதாங் அந்த கருமத்த தூக்கி வீசிப்புடலாமுன்னு...
கல்லீரல் கெட்டுபோச்சின்னு...மருத்துவர் கிட்ட போனா குடிப்பியான்னு கேப்பாங்க ..
மருத்துவர்க்கு கல்லீரல் கெட்டதுக்கு காரணம் மாத்திரைன்னு தெரியுங்... ஆனா பழிய தூக்கி குடிமேல போட்டுட்டு இவங்க தப்பிச்சுக்குவாங்க.
அதுக்காக குடிக்கிக்கு கொடிபுடிக்கலம்மா, எதுவும் அளவோட இருந்த நல்லதுதேங் - மாத்திரை அளவோடுதான் எடுத்துக்குறோம் ஆனா பாருங்க கல்லீரல் பாதிக்கும்றாங்க.
இடையில,.. அம்மணி, ஏனுங்க பி பி யை கண்ட்ரோல் பண்ணலாம் க்யூர் பண்ண முடியாதுங்க - மாத்திரையை 'தொட்டால் தொடரும்' ...ஹாங்.
செரி செல்லம்.
செரி செல்லம்.
ஏம்மா...இப்ப ரத்த அழுத்த மாத்திரைக்கு பதிலா என்ன பண்ணுறீங்க
கண்ணு, நெல்லிக்காய் அளவுல இஞ்சி எடுத்து தட்டி சாறு எடுத்து
அதில ரெண்டு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து...
தல சுத்தற மாதிரி/படபடப்பு தோனுச்சின்னா குடிச்சிடுவேங் அம்ம்புட்டுதேங்...தினம் தயார் பண்ணி வச்சிருக்கேங் என்ர தேவைக்கு.
இம்புட்டு தானா..
கண்ணு அப்படியே கொஞ்சம் தேன் கலந்துக்கோ
ஏம்ம்மா
காராமா இருக்கும்பா
நாங் என்ன சின்ன பையனா
ஹா ஹா எனக்கு எப்பவும் கொழந்தை தானே நீயி
வூருக்கே நாட்டாமையானாலும் வூட்டுக்கு புள்ளதானே.
ம்ம்..
ஆம்மா,,.. கண்ணு சின்ன புள்ளைய இருக்கும் பொது இஞ்சி சாறு குடிக்க
எம்புட்டு அழுவே காரம் கண்டு..
ம்ம்
கண்கண்ட தெய்வம் தாய் - நாங் குடியிருந்த கோவில் அல்லவா... சொன்னா செரியாதாங் இருக்கும் .
ஏனுங்க எனக்கும் செரி, உங்கம்மா சொல்றதுக்கும் செரின்னா என்னங்க அர்த்தம்
ரெண்டு பெரும் சொல்றது செரிதேங்
தலைப்புக்கா உனக்கு செரின்னேன்
பதிவுக்காக அம்மாவுக்கு செரின்னேன்
பதிவுக்குதேங் இந்த பில்டப்பா - ஒங்க பதிவுல தீய வைக்க.... க்ஹும்.
ஆத்தீ...இந்த வெட்டு வெட்டிட்டு போறா .......
போச்சா இன்னைக்கு ராத்த்ரி போச்சா............
...சாப்பாட்ட சொன்னேங்க.
ஆத்தீ...இந்த வெட்டு வெட்டிட்டு போறா .......

...சாப்பாட்ட சொன்னேங்க.
ஸ்ஸ்ஸ்ஸ் அபா.....! ஏன் இப்படி ?
ReplyDeleteஇதுக்கே...இம்புட்டு பெருமூச்சா...இன்னும் இருக்குவோய்....
Deleteபுரிந்து 'போச்சி'ங்கோ...!
ReplyDeleteபுரிஞ்சி 'போச்சா'.......நல்லதுங்கோ
Deleteரொம்ப நாள் கழித்து உங்க பதிவு படிக்கிறேன். இயற்கை மருத்துவம் எப்பவுமே நல்லது.... ஆனா நீங்க எழுதியிருக்கும் நோக்கம் என்னவோ?
ReplyDeleteஅம்மாவாக இருக்கும் வரை புரியாமல் உணராமல்.....பாட்டியான பின்பு உணருகிறார்கள் இயற்கை வைத்தியத்தை....
Deleteசொந்த கதை சகோ...
இது எங்க அம்மா எங் மனைவி இவர்கள் இடையில் எமது நெலம.
நல்ல தகவல்! நன்றி!
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteகண்டிப்பா தீயதான் வைக்கபோறேன்
ReplyDeleteஅதானே.... வைக்கலைன்னா தான் ஆச்சரிய படனும் வாத்தீ
Deleteஉங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!
ReplyDeleteமகிழ்ச்சி.....நன்றி நன்றி சுரேஷ்
Delete