நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, January 29, 2012

அரசியலில் இது எல்லாம் சாதரணமப்பா.

எல்லோருக்கும் வணக்கம்


 

ஒரு நிமிஷம்....இந்த சூழ்நிலையில் நீங்களா இருந்தால்.???


எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா...


யானை:  அந்த பயம் இருக்கட்டும்..!  
ஓட்டுனர்:  தள்ளிவிட்டாலும் சட்டினிதான்.


பாம்பன் பாலம்:  ரயில் பாலம் மற்றும் தரைவழி பாலம்    பார்த்து இருப்போம்....இரண்டும் சேர்ந்தாற்போல்...கட்டுமான தவறு..  ஹிம்....என்னத்தை சொல்ல


  கட்சி கூட்டம்?! இது எல்லாம் சாதரணமப்பா  
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு


யாரு? யாரு??

Wednesday, January 25, 2012

ஸ்ருதி கரெக்டா இருக்கு - விளையும் பயிர் முளையிலே தெரியும்

வருங்கால பயில்வான் வாழ்த்துக்கள் அம்பி வாழ்த்துக்கள்

 அழகா இருக்கு அருவி.. நீர்வீழ்ச்சி உண்மையா இல்ல கிராபிக்ஸா # சிரியஸ் டவுட்டு

கற்பனைக்கும் எல்லை இல்லை தான் - வாழ்த்துக்கள் யு கண்டிநியூ

விளையும் பயிர் முளையிலே தெரியும்

பெருசை பார்த்தா பெரியமனுசன் மாதிரி தோணுது பட்  பார்வையில் கோளாறு

iPAD நிலைமையை பாரு...

ரிஸ்க் தான் ஓசி பயணத்தில் இது எல்லாம் சாதரணமப்பா

நண்பர்களுடன் உற்சாகபானம் அருந்தி சுதி ஏற்றுவது யாருன்னு...அட கப்புன்னு புடிச்சிடியலே.


செம காமடி போங்க

விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு


அழகு மயில்.. மேக்அப்புக்கு முன்னாடியா? பின்னாடியா? # டவுட்டு 


நடிகை திரிஷாவுக்கு பணம் வேண்டாமாம் சும்மாவே வருவாங்கலாம்.


அமெ‌ரிக்க தமிழ் சங்கத்தின் 25வது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. இதில் த்‌ரிஷா கலந்து கொள்கிறார்.


சொந்த மகளின் காது குத்துக்குக்கூட காசு கொடுத்தால்தான் வருவேன் என்பவர்கள்தான் நமது சினிமாக்காரர்கள். விதிவிலக்கு ஒன்றிரண்டு இருக்கலாம். எந்த விழாவுக்கு என்றாலும் பயணப்படியுடன் லம்பாக ஒரு அமௌண்ட் வெட்டுவது இவர்களின் வாடிக்கை.அமெ‌ரிக்க தமிழ் சங்கம் த்‌ரிஷாவை சீஃப் கெஸ்டாக அழைத்தபோது, பெ‌ரிய தொகை ஒன்றை அவர் கேட்பார் என்றுதான் நினைத்தார்களாம்.
ஆனால் த்‌ரிஷாவோ, இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்குப் பெருமை, அதனால் எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்றிருக்கிறார்.

 தமிளு தமிளு என்று பேசும் நடிகர்களைவிட இவர் எவ்வளவோ மேல்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஹல்லோ...எஸ் குஷ் மீ இவங்களும் த்ரிஷா தான் ப்ரீயா ரிலாக்ஸ்சா பீச்ல் இருக்கும் பொது எடுக்கப்பட்ட படம் ( யாரு எடுத்தா? எந்த பீச்? அப்படி எல்லாம் கேட்கபடாது ஒக்கே.)

16 வயது பெண் தனியாக வந்தால்!? உற்சாகத்துடன் வரவேற்பு.
நெதர்லாந்தைச் சேர்ந்த லாரா டெக்கர் என்ற 16வயது பெண் உலகம் முழுவதையும் படகு மூலமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.


இவர் தனது 14வது வயதில் ஒரு படகு மூலம் தனியாக உலகை சுற்றி வர விரும்பினார். அதற்கு நெதர்லாந்து அரசு சம்மதிக்கவில்லை. எனவே அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து குழந்தைகள் நல மையத்தின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கின் தீர்ப்பு இவருக்கு சாதகமாக அமையவே கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி கிப்ரால்டார் என்ற இடத்தில் இருந்து 38 அடி நீள குப்பி என்ற எந்திர படகின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார்.8 மாதங்கள் கழித்து கரீபியன் கடலில் உள்ள செயின்ட் மார்டினை வந்தடைந்த டெக்கரை அவரது பெற்றோர் உட்பட சுமார் 500 பேர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தற்போது உலகை தனியாக சுற்றி முடித்த இளம் வயது வீராங்கனை என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

ஒரு பெண் அழுதால்
அதுக்கு பல காரணங்கள்
இருக்கலாம்.
ஆனால் ஒரு ஆண் அழுதால்
அதுக்கு ஒரே காரணம் தான்
இருக்க முடியும்.
 பெண்.இம்புட்டு அழகா இருந்தா...!!!???


Monday, January 23, 2012

பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும்

உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப இன்றைக்கு நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அழகையே மாற்றிவிடும். அது ஆபத்தானதும் கூட. எனவே எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம் என்பதை தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.


நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளையும், சிறியவர்கள் சின்னநகைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். சீரான நடுத்தர நகைகளை அணியலாம். அது இருவருக்குமே பொருத்தமானது.

வெரைட்டியா போடுங்க


எ‌ப்போது‌ம் ஒரே மா‌தி‌ரியான தங்க நகைகளையே அ‌ணியாம‌ல், மு‌த்து, க‌ல் வை‌த்தது, த‌ங்க நகை எ‌ன்று ‌வித‌விதமாக நகைகளை வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். நா‌ம் செ‌ல்லு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் வகை‌க்கு‌ம், கால நேர‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்றபடி இ‌தி‌ல் ஒ‌ன்றை தே‌ர்வு செ‌ய்து அ‌ணி‌ந்து செ‌ல்லலா‌ம்.

பாரம்பரிய நகைகள்


பாரம்பரிய உடைகளுடன் பாரம்பரிய நகைகளை அணிந்தால் அது வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும். அவற்றுடன் எங்கு பார்த்தாலும் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. இவை விலை மலிவாக இருப்பதோடு அழகாகவும் ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் கூட அதிகம் கவலைப்படத் தேவையில்லை.


ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

பகலில் குறைவான நகை

காலை நேரங்களில் நகைகளை குறைவாகவும், இரவில் அதிகமான நகைகளையும் அணியவேண்டும் அப்பொழுதுதான் நகையின் அழகானது அணிபவருக்கு கூடுதல் அழகு தரும்.


உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது. எனவே அதற்கேற்ப தேர்வு செய்து அணியவேண்டும். நீண்ட கழுத்து கொண்ட பெண்கள் உயரம் குறைந்த கழுத்து ஒட்டிய நெக்லெஸ் அணிவது அழகாக்கி காட்டும் .

கலந்து அணியக்கூடாது


வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும். முக்கியமான விசயம் தங்க நகைகளை தனியாக அணிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தங்கத்தோடு, வெள்ளி, கவரிங் போன்ற நகைகளை இணைத்து அணியக்கூடாது.வெளிநாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் அவற்றுடன் மெல்லிய செயின் சின்ன சின்ன ஜிமிக்கியே போதுமானது. அனைத்தையும் விட முக்கியமான விசயம் பொன்னகை அணிவதோடு உதட்டில் புன்னகையும் இருந்தால்தான் அழகை அதிகரித்துக் காட்டும் இல்லையில் வெறும் அலங்கார பதுமையாக மட்டுமே இருக்க நேரிடும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


சிம்ப்ளா நகை போட்டு இருக்கு அழகு.. அழகு.. இல்ல அஞ்சலி.. அஞ்சலி.


Sunday, January 22, 2012

ஜனவரி... 'அது' சண்டை மாசம்!?

ஜனவரி மாதத்தில் கணவன் மனைவி இடையே அதிகம் சண்டை, வாக்குவாதம் நடைபெறுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. குளிர் மாதத்தில் அதிக நேரம் தம்பதியர் ஒரே அறைக்குள் இருக்க நேரிடுவதே இந்த சண்டைக்கு காரணம் என்கின்றன ஆய்வு முடிவு.

ஆண்டு முழுக்க கணவன் - மனைவியரிடையே சண்டை, வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்தான். இது குறித்து இங்கிலாந்தில் 1000 தம்பதியரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஜனவரியில்தான் மன உளைச்சல்கள் அதிகம் என்று பெரும்பாலான தம்பதியர் குறிப்பிட்டனர். ஒருநாளைக்கு சராசரியாக 20 முறை வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனவரி மாதத்தில் சராசரியாக 38 சதவிகிதம் வீடுகளில் மோதல்கள் ஏற்படுகின்றன. 25 வயதுக்குக் குறைவானவர்களிடையே 48 சதவிகிதம் அளவுக்கு மோதல்கள் முற்றுகின்றன.

பொருளாதார பிரச்சினை

ஜனவரி மாதத்தில் பனியும் குளிரும் அதிகம். அதனால் கணவனும் மனைவியும் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக ஒன்றாக இருக்க நேரிடுகிறது. (அதிக நேரம் இருந்தால் ரொமான்ஸ்தானே வரணும்).

மோசமான பருவநிலை, நீண்ட இரவுகள், செலவுகள் அதிகமாவதால் சேமிப்பும் கையிருப்பும் குறைந்துவிட்ட நிலை போன்றவற்றால் மோதல்கள் வெடிக்கின்றன. பணம் சம்பாதிக்கும் ஆற்றல் கணவனுக்கு எவ்வளவு குறைவு என்பதை மனைவி அறியவும், செலவழிக்கும் ஆற்றல் மனைவியிடம் எவ்வளவு அதிகம் என்று கணவன் உணரவும் இந்த மாதம் பெரிதும் உதவுகிறது. எனவே பொருளாதாரப் பிரச்னைகளாலேயே பூசல் தொடங்குகிறது.குளிர் விவாகரத்து

வருமானம் குறைவு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைவு போன்ற காரணங்களால் 65 சதவிகிதம் தம்பதியர் விவாகரத்துவரைகூட போகின்றனர். இனி இவரோடு வாழக்கூடாது என்று புத்தாண்டிலேயே தீர்மானித்துவிடுவதாக 7 சதவிகிதம் பேர் ஒப்புக்கொண்டனர். காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளவே முடிவதில்லை என்று 59 சதவிகிதம் பேர் வரை கூறியுள்ளனர். ஜனவரி மாதத்தில் குளிர் அதிகம், சூரிய வெளிச்சம் குறைவு என்பதால் சோம்பலும் மன வெறுமையும் அதிகமாக இருக்கும் என்று உளவியலாளர் டோனா டாசன் தெரிவிக்கிறார். பண முடை, வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் நேரம் அதிகரிப்பு, சோம்பல், உற்சாகம் இன்மை, அடுத்து என்ன செய்வது என்ற இலக்கு இல்லாமை போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்தில் கணவன், மனைவியரிடையே பூசல்கள் அடிக்கடி தோன்றுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

வெயிலில் சண்டை குறைவு


அதே சமயத்தில் வெயில் காலங்களில் ஒரு நாளில் 10 மணி நேரம்தான் தம்பதியர் இருவரும் சேர்ந்து வீடு தங்குகின்றனர். அதிலும் பெரும்பாலும் தூங்குவதில் போய்விடுவதால் சண்டைக்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை. எனவே தான் ஜனவரி மாதம் சண்டை மாதம் என்று முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.டிஸ்கி பஸ்கி முஸ்கி இல்ல
 
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

பார்ரா..... பயபுள்ள ஆர்வ்வத்தை...... ஆர்வ கோளாறு இருந்தாலும் அந்த தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியல.  


# கள்ளத்தொடர்புகள் விரைவில் படங்களுடன்...  

Saturday, January 21, 2012

முகநூலில் மச்சக்காரன் என்ன தான் தீர்வு.?

சனிக்கிழமை இரவுகளில் இப்படிதான் தூங்குவார்களாம்முக நூலில் ஒப்பிடு:

என்ன தான் தீர்வு - படத்தை பாருங்கள்


அழகான அருவி கொட்டும் இடத்தில்  அற்புதமான உணவகம்


மச்சக்காரன் கேள்வி பட்டு இருக்கேன் இப்பதான் பார்கிறேன்
இது எங்கன்னு நா சொல்லியா தெரியனும் ?
Wednesday, January 18, 2012

தமிழில் தமிழ்நாடு படும் பாடு!?

இந்த இணைப்பில் சென்று,......அதில் TN என்று டைப் செய்யுங்கள்:

http://translate.google.com/#auto|pt|இதுக்கு நா வேற தனியா என்ன விளக்கம் தர்றது நீங்களே பார்த்துட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்க.

Tuesday, January 17, 2012

நடிகைகளின் உண்மையான (இன்னொரு பக்கம்) திறமையை தெலுங்கில் மட்டுமே காணலாம்


பொதுவாக தமிழில் நல்ல குடும்ப பாங்காக நடிக்கும் நடிகைகள் தெலுங்கில் பிட்டு பட நடிகைகள் போன்று தமது அதி உச்ச திறமையை வெளிக்காட்டுகின்றனர்,

அனுஷ்கா, சமீரா ரெட்டி போன்றவர்கள் தெலுங்கில் ரசிகர்களை குஷிப்படுத்தும் சமூக பணியில் சிறப்பாக ஈடுபடுகின்றனர்.


பாருங்கள் தமிழ் பட  ரசிகர்களே :

http://www.youtube.com/watch?v=UKLQ7H1KO44&feature=player_embedded#!


http://www.youtube.com/watch?v=4CXsySGOtho&feature=player_embedded

Wednesday, January 11, 2012

பெண்கள் காது, உதடு - என்னத்தை சொல்ல?

காதுக்குத் தோடு போடுறத்துக்குப் பதிலாக பூட்டுப் போட்டுத் தொங்க விட்டுருக்கு. இதை என்னவென்று சொல்லுவது?

2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம், மும்பையில் 13.5 சதவீதம், டில்லியில் 11 சதவீதம், கொல்கத்தா 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


நா என்னத்தை சொல்ல: 


Tuesday, January 10, 2012

பெண் ஆணாக மாறும் காணொளி

நீங்கள் என்ன எதிர்பார்த்து உள்ளே வந்தீர்களோ அது இல்லை ... ஆனால் தலைப்பிற்கு ஏற்ற செய்தி தான் இது, ஆண் பெண்ணாவது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் .. இது பெண் ஆணாவது இந்த காணொளியை பாருங்கள் எல்லாம் விளங்கும்:

http://www.youtube.com/watch?v=8pR20n_U234&feature=player_embedded

Saturday, January 7, 2012

தமிழனுக்கு எதிரான விஜயின் புத்திசாலித்தனம்???

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் துப்பாக்கி. படத்தில் விஜய்யின் உழைப்பை பற்றி தன் நட்பு வட்டாரத்தில் புகழ்ந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். விஜய்யுடன் மலையாள நடிகர் ஜெயராம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே அந்த ரகசியமாம்.

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாவதை அடுத்து படத்தில் ஜெயராம் நடிக்கும் விஷயத்தை இப்போதைக்கு வெளியே சொன்னால்பிரச்சினை கிளம்பிவிடுமோ என்று பதறிப்போய் உள்ளார்களாம் படத்தின் இயக்குனரும் நடிகரும்.


முல்லைப் பெரியாறு பிரச்சினையின் சூடு தனிந்ததும் விஷயத்தை வெளியே சொல்லலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.

அப்படிப் பார்த்தால் இப்போது வெளிவர இருக்கும் பல தமிழ் படங்களில் மலையாள சேச்சிகளே ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி சினிமா ரசிகர்கள் உட்பட யாருமே கவலைப்படவில்லை. நடிகருக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு ஒரு நியாயமாஎன்ற கேள்வியே எழுகிறது.
அதே சமயத்தில் தன் படத்தில் நடிக்கும் இரண்டு மலையாள நடிகைகளையும் போயிட்டு வாங்கபிரச்சனை முடிந்ததும் பார்த்துக்கொள்ளளாம் என்று வீட்டுக்கு அனுப்பிவைத்த இயக்குனர் பாரதிராஜா போன்ற உணர்வுப்பூர்வமான இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

இதே விஜய் தேர்தல் நெருங்கிய வேளையில் பரப்பரப்புக்காகவும், தனது ரசிகர்களின் பலத்தை காட்டுவதற்காகவும் இலங்கை அரசை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அதன் விளைவு விஜயின் 'காவலன்' படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்ட போது 'எங்கள் தேழி அசின் நடித்திருப்பதால் காவலனை இலங்கையில் திரையிட அனுமதிக்கிறோம்' ( எப்படி தேழி, எந்த முறையில் தோழி, எந்த நட்பு கோப்பெருஞ்சோழன் - பிசுரத்திரயார் நட்போ ! கேவலம்டா சாமி....) என்று ராஜபக்சே அறிவித்து படத்துக்கு அனுமதி அளித்தார்.
அத்தோடு விஜயின் இலங்கை எதிர்ப்பு காணாமல் போனது...


இலங்கை அரசுக்கு எதிராக கையெழுத்து கேட்க போனவர்களையே துரத்தி அடித்து தனது சிங்கள விசுவாசத்தை காட்டி தனது வேலாயுதம் படத்தை எந்த வித சிக்கலும் இல்லாமல் இலங்கையில் திரையிட வைத்தார். 


இப்போது முல்லை பெரியாறு அணை பிரச்சனை பத்திக்கொண்டு எரியும் இந்த வேளையில் தனது படங்களை கேரளாவில் திரையிடுவதில் எந்தவிதமான சிக்கலும் வந்துவிட கூடாது என்பதற்காகவே வாய் மூடி மௌனம் காத்தவர் சிக்கலே இல்லாமல் இருக்க இப்போது மலையாள நடிகரையே தனது படத்தில் நடிக்கவைகிறார் என்றால்  விஜய் செய்திருக்கும் இந்த முள்ளமாரித்தனமான காரியம் அவரது சுயரூபத்தை ,மக்கள் நலனில் அவருக்குள்ள அக்கறையை மிக தெளிவாக எடுத்துக்காடுகிறது.  

 திரைப்படங்களில் தொடையை தட்டி வீரவசனம் பேசுவது அல்ல வீரம் இதுபேன்ற நேரங்களில் துணிந்து குரல் கொடுப்பது தான் வீரம் .
இவர் போன்ற நடிகர்களுக்கு பிரச்னை என்றால் ரசிகன் என்ற பெயரில் உயிரையே கொடுக்க முன் வரும் தமிழனுக்கு, தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த ஹீரோக்கள் எல்லாம் பொட்டைத்தனமாக வாய் மூடி ஒளிந்துகொள்வது தான் வாடிக்கையாக உள்ளது....

அது சரி முருகதாஸ் ....முருகதாஸ் என்று ஒரு மானமுள்ள தமிழன் இருந்தாரே தனது இலட்சிய படத்தை (ஆம் அறிவு ) தமிழனுக்காக அர்பணிக்கிறேன் என்றாரே ...படத்தில மூச்சுக்கு மூச்சு தமிழன் தமிழன்னு சொன்னாரே அந்த அந்த மானமுள்ள முருகதாஸா தமிழனுக்கு தன்னித்தர மறுப்பவனோடு கைகோர்கிறார்...

அட போங்கடா... நீங்க எல்லோருமே தெளிவா தான் இருக்கீங்க உங்க உங்க விசயங்களில், இளிச்சவாயன் தமிழன் தான் இன்னும் தெளிவாகல...தெளிவாகவும் மாட்டான்......(தேங்க்ஸ்  டாஸ்மாக்)

நன்றி படங்கள் கூகிள்