நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, January 23, 2012

பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும்

உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப இன்றைக்கு நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அழகையே மாற்றிவிடும். அது ஆபத்தானதும் கூட. எனவே எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம் என்பதை தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.


நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளையும், சிறியவர்கள் சின்னநகைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். சீரான நடுத்தர நகைகளை அணியலாம். அது இருவருக்குமே பொருத்தமானது.

வெரைட்டியா போடுங்க


எ‌ப்போது‌ம் ஒரே மா‌தி‌ரியான தங்க நகைகளையே அ‌ணியாம‌ல், மு‌த்து, க‌ல் வை‌த்தது, த‌ங்க நகை எ‌ன்று ‌வித‌விதமாக நகைகளை வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். நா‌ம் செ‌ல்லு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் வகை‌க்கு‌ம், கால நேர‌த்‌தி‌ற்கு‌ம் ஏ‌ற்றபடி இ‌தி‌ல் ஒ‌ன்றை தே‌ர்வு செ‌ய்து அ‌ணி‌ந்து செ‌ல்லலா‌ம்.

பாரம்பரிய நகைகள்


பாரம்பரிய உடைகளுடன் பாரம்பரிய நகைகளை அணிந்தால் அது வித்தியாசமான தோற்றத்தை அளிக்கும். அவற்றுடன் எங்கு பார்த்தாலும் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. இவை விலை மலிவாக இருப்பதோடு அழகாகவும் ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் கூட அதிகம் கவலைப்படத் தேவையில்லை.


ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

பகலில் குறைவான நகை

காலை நேரங்களில் நகைகளை குறைவாகவும், இரவில் அதிகமான நகைகளையும் அணியவேண்டும் அப்பொழுதுதான் நகையின் அழகானது அணிபவருக்கு கூடுதல் அழகு தரும்.


உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது. எனவே அதற்கேற்ப தேர்வு செய்து அணியவேண்டும். நீண்ட கழுத்து கொண்ட பெண்கள் உயரம் குறைந்த கழுத்து ஒட்டிய நெக்லெஸ் அணிவது அழகாக்கி காட்டும் .

கலந்து அணியக்கூடாது


வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும். முக்கியமான விசயம் தங்க நகைகளை தனியாக அணிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தங்கத்தோடு, வெள்ளி, கவரிங் போன்ற நகைகளை இணைத்து அணியக்கூடாது.வெளிநாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் அவற்றுடன் மெல்லிய செயின் சின்ன சின்ன ஜிமிக்கியே போதுமானது. அனைத்தையும் விட முக்கியமான விசயம் பொன்னகை அணிவதோடு உதட்டில் புன்னகையும் இருந்தால்தான் அழகை அதிகரித்துக் காட்டும் இல்லையில் வெறும் அலங்கார பதுமையாக மட்டுமே இருக்க நேரிடும் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


சிம்ப்ளா நகை போட்டு இருக்கு அழகு.. அழகு.. இல்ல அஞ்சலி.. அஞ்சலி.