நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 30, 2011

கண்ணா..! மூன்று லட்டு தின்ன ஆசையா?


இந்த மூன்று பெண்களும் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். இன்று வரை ஒன்றாகவே வாழ்கிறார்கள்.
தாயுடன் மட்டுமே வாழும் இவர்களின் திருமணத்தில் தான் சிக்கலே வந்திருக்கிறது. தாயார் பலமுறை திருமணத்திற்கு வற்புறுத்தியும் இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.


திருமணத்தின் பின்னர் தாம் பிரிந்து விடுவோம் என்பதே இவர்களது நீண்ட நாள் பயம் இதற்கு ஒரே வழி இவர்கள் மூவரும் ஒரே நபரை திருமணம் செய்வதுதான்.
யாருக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கோ?

ஓன்று வாங்கினால் இரண்டு இலவசம்!

லட்சுமிராயை பிறந்த மேனியாக பார்க்கலாம்.(ங்கொய்யால......)


நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

முத்தங்கள் பலவகை...


உறவின் தொடக்கமே முத்தம்தான். இன்பத்தின் திறவுகோலான முத்தம் பண்டைய காலத்தில் இருந்தே பல விதமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.வகை வகையான முத்தமிட்டு படு லாவகமாக துணையை குஷிபடுத்தியுள்ளனர்.

 முத்தத்தின் வகையை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள்

முத்தமும் நம்பிக்கையும்:

முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்களிடம் உலவி வருகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

ரோமானிய முத்தம்

முத்தத்திற்கு வரலாறுகளில் ஒவ்வொரு விதமான அர்த்தம் கூறியுள்ளனர். ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.
ஆன்மாக்கள் சங்கமிக்கும் ப்ரெஞ்ச் கிஸ் உலகப் புகழ் பெற்றது. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை இங்கிலீஷ் கிஸ் என்றுதான் அழைக்கிறார்களாம்.

உணர்ச்சியை தூண்டும் முத்தம்

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது துணையின் உதடை, மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் கிஸ்

இது கழுத்தை கவரும் முத்தம். உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது துணையின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் உதடுகளுக்கு போங்கள். உற்சாகம் கொப்பளிக்கும்
ஜில்லென்ற முத்தம் சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.
பழங்களினால் முத்தம்
ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது துணையின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

பபுள் பாத் கிஸ்

பாத் டப்பில் நுரை நிரப்பிய நீரில் இருவரும் இணைந்து குளித்துக்கொண்டே முத்தமிடுவது இந்த வகை. இது குளியலுக்கு குளியல், முத்தத்திற்கு முத்தம் டூஇன்ஒன்.

பபுள்கம் கிஸ்

உங்களுடைய பேவரைட் சுயிங்கம், பபுள்கம்மினை வாயில் போட்டு சுவைத்து முத்தத்தை தொடங்கலாம். அந்த வாசனை முத்தமிடுபவரையும், பெறுபவரையும் உற்சாகப்படுத்தும்.
கொஞ்சம் சூடு கொஞ்சம் குளுமை
முதலில் உங்களது துணையின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.

பேச்சும் முத்தமும்

இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

எஸ்கிமோ முத்தம்

அதேபோல மிகவும் பிரபலமானது எஸ்கிமோ முத்தம். பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர். உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.

முத்தம் ஒரு எச்சரிக்கை

உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவே ஜாக்கிரதை.

முல்லைப் பெரியாறு - தமிழக எம்.பி.,க்கள் சொதப்பல்

தமிழகத்தின் நிலையோ, பார்லிமென்டில் நேற்று தலைகீழாக இருந்தது. கேரள எம்.பி.,க்களின் வேகத்தை பார்த்துவிட்டு, தமிழக எம்.பி.,க்களும் காந்தி சிலை அருகே தர்ணா செய்யப் போகின்றனர் என்ற செய்திபரவியது.அங்கு சென்று பார்த்தால், திருமாவளவன் தலைமையில் கோவை நடராஜன், தென்காசி லிங்கம், ஈரோடு கணேசமூர்த்தி என, நான்குபேர் தர்ணாவில் அமர்ந்திருந்தனர். "புரளியை கிளப்பாதே, பொய் செய்தியை பரப்பாதே' என, அந்த நான்கு பேர் மட்டுமே கோஷமிட்டபடி இருந்தனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.,யான கே.எஸ். அழகிரி அங்கு வந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

போட்டி தர்ணா:

இவர்களுக்கு போட்டியாக, சில அடி தூரத்தில் கேரளா எம்.பி.,க்கள் 20க்கு மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக அமர்ந்து, கோஷங்கள் எழுப்பினர். சில நிமிடங்களில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அகமது, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கேரளா எம்.பி.,க்களுக்கு தார்மீக ஆதரவு அளித்துவிட்டு, பின்னர், தமிழக எம்.பி.,க்களிடம் வந்து, "தண்ணீர் தருகிறோம், எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்' என, சிரித்தபடியே திருமாவளவனிடம் கூறிச் சென்றனர்.அடுத்த அரைமணி நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து மனு அளித்தனர். தமிழக மீனவர் பிரச்னை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக, தனித்தனி மனுக்களை டி.ஆர்.பாலு தலைமையில் அளித்துவிட்டு வந்தனர்.அங்கும் திருமாவளவன் வந்திருந்தார். அவர்கள் சென்ற சில நிமிடங்களில், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் அழகிரி, சித்தன், விஸ்வநாதன், ராமசுப்பு, மாணிக் தாக்கூர், ஆருண் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களும்தங்கள் பங்கிற்கு மனு அளித்துவிட்டு சென்றனர்.முல்லைப் பெரியாறு அணை
பிரச்னையில், இப்படி தமிழக எம்.பி.,க்கள் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆளுக்கொரு திசையில் நின்றபடி, தனி ஆவர்த்தனம் வாசித்தபடி உள்ளனர். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில், அரசியல் ஒற்றுமை காட்டி, தற்போதைக்கு கேரளா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அழைப்பை நிராகரித்த எம்.பி.,க்கள் :கேரள எம்.பி.,க்களுக்கு பதிலடி தர, காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் செய்யும் முடிவை எடுத்து, அது பற்றி தி.மு.க., எம்.பி.,க்களுக்கும், திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.அவர்களோ, "நாங்கள் பிரதமரை சந்தித்து மனு தரப்போகிறோம்' எனக் கூறிவிட்டு, தர்ணாவில் பங்கேற்காமல் நாசூக்காக கழன்றனர். அ.தி.மு.க., எம்.பி.,க்களை அழைத்த போது, "அம்மாவிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் வரமுடியாது' என்று சொல்லி விட்டனர்.இடதுசாரி எம்.பி.,க்களில் கூட லிங்கமும், நடராஜனும் மட்டுமே பங்கேற்றனர். இடதுசாரி மூத்த எம்.பி.,க்களான டி.ராஜா மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வரவில்லை.கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சென்று, பிரதமரை சந்தித்து இப்பிரச்னை குறித்து பேசினர். ஏ.கே.அந்தோணி கூட இவ்விஷயமாக பிரதமரிடம் பேசியுள்ளார்.

அதிரடி கவர்ச்சியில் - சோனியா அகர்வால்!

செல்வராகவனுடன் விவாகரத்து பெற்றபிறகு புதுபொலிவுடன் காணப்படுகிறார் நடிகை சோனியா அகர்வால். மீண்டும் சினிமாவில் இரண்டாம் அத்யாயம் எடுத்திருக்கும் சோனியா, அதை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்விளைவாக அதிரடி கவர்ச்சியில் இறங்கபோகிறாராம். டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ‌சோனியா அகர்வால். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். செல்வா, கீதாஞ்சலி என்பவரை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். தற்போது தனிமையில் இருக்கும் சோனியா மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றில் தலா படம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கும் சோனியா, தன்னை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாராம். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா, படுகவர்ச்சியான உடையில் வந்து, விழாவிற்கு வந்த அனைவரையும் கிறங்கடிக்கச் செய்தார். மேலும் எப்படி கேரக்டரிலும் நடிக்கத் தயார் என்றும், பிகினி உட்பட சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கும் தான் நடிக்க தயார் என்றும் கூறிவருகிறாராம். சோனியாவின் இந்த அறிவிப்பால் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.  இதனால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் சோனியா. அப்ப இனி சோனியா காட்டில் மழை தான்!

இலவசம்.....இலவசம்....!!

Tuesday, November 29, 2011

ஏன் இந்த ஓரவஞ்சனை? - தினமணி

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன.
 
 முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.
 
 அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.
 
 இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.
 
 புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
 
 முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
 
 நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
 கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
 
 படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.
 
 இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
 
 முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
 
 அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.


 மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?
 

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி.

கனிமொழியின் விடுதலையே தமிழ் இனத்தின் விடுதலையாக கருதி மகிழ்ந்துக் கொண்டிருக்கும் மு.கருணாநிதியை,

 

கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆனதுமே, சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் குலோப் ஜாமுனும் ஜாங்கிரியும் கொடுத்து கட்சியினர் கொண்டாடுகிறார்களே. இதை யாராவது தடுத்திருக்க வேண்டாமா?

கனிமொழி தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்த கொடுமையை கண்டித்து சிறைக்குப் போனாரா? இல்லை மத்திய அரசின் அடக்கு முறையை எதிர்த்து சிறைக்கு போனாரா?

உலகத்தையே உலுக்கி ய ஊழல் குற்றச்சாட்டில், ஏ-2 அதாவது இரண்டாவது குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது முறையா? என்பதை தி.மு.க. சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கனிமொழி இன்று சிறையிலிருந்து வெளியே வந்தாலும் கோர்ட்டு விசாரணைகளில் பங்கேற்றுவிட்டு வரும் டிசம்பர் 2ம் தேதியான வெள்ளிக்கிழமை மாலை அல்லது டிச.3ம் தேதியான சனிக்கிழமை காலையில் தான் சென்னை திரும்புகிறார்.


டெல்லியிலிருந்து அவரை அழைத்து வர துரைமுருகன் தலைமையிலான குழுவை நேற்று இரவே அனுப்பி வைத்துவிட்டார் தி.மு.க. தலைவர். வெள்ளிக்கிழமை மாலை வரும் கனிமொழிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அவர் வந்ததும் ஓரிரு மாதங்களில் கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் அல்லது துணைப் பொதுச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதாவது ஒரு பதவியைத் தரப்போகிறார்கள். இதில் மாற்றமில்லை.

ஆனால் கலைஞர் என்ன சொல்கிறார், “ சிறையிலிருந்து வெளியே வரும் கனிமொழிக்கு பதவி கிடைக்குமா ?”என்று நிருபர்கள் கேள்வி கேட்டால், “ நான் சர்வாதிகாரி இல்லை. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே, கனிமொழிக்கு பதவி அளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும்”. அந்தக் கட்சி எது என்பது தான் தி.மு.க. தொண்டர்களின் கேள்வி.

அடடா… அடடா… கட்சியை கேட்டா தயாநிதி மாறனை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சராக்கினீர்கள்?

கட்சியை கேட்டா, கனிமொழியை எம்.பி.யாக்கினிரீகள்?

kani-888bகட்சியை கேட்டா, அழகிரியை எம்.பி. தேர்தலில் நிற்க வைத்து மத்திய அமைச்சராக்கினீர்கள்?

அட… கட்சியை கேட்டா மந்திரி சபையிலிருந்து தூக்கிய டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு மீண்டும் மந்திரி பதவி கொடுத்தீர்கள்?

அட… கட்சியை கேட்டா துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறையை பறித்துக் கொண்டு நீங்களே வைத்துக் கொண்டீர்கள்.

அட… கட்சியை கேட்டா பா.ம.க. கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்த்தீர்கள். கல்யாண பத்திரிகை வைக்க வந்த ராமதாஸை கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு… இப்படி அரசியல் செய்வதற்கு பெயர் என்ன?

“நான் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல” – இன்னும் எத்தனை காலம் தான் இந்த வார்த்தை ஜாலங்களை சொல்லி கட்சியை நடத்தப் போகிறீர்களோ தெரியவில்லை.

சரி.. போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

சிறையில் இருக்கும் போதே கனிமொழிக்கு என்ன பதவி கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு, கனிமொழிக்கு பதவியளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும் என்று கருணாநிதி கதைக்கிறார் என்றால் யாராவது நம்புகிறீர்களா?

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி எது தெரியுமா? அதில் உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?

கட்சியின் பெயர்: க.க.ரா.மு.க.

கனிமொழிக்கு பதவி தரும் கட்சியில் மூன்றே மூன்று உறுப்பினர்கள் தான். ஒருவர் கருணாநிதி இரண்டாவது ராசாத்தி, மூன்றாவது கனிமொழி.

என்னது கட்சியின் பெயர் புரியவில்லையா?

கருணாநிதி கனிமொழி ராசா(த்தி) முன்னேற்றக் கழகம்.

இப்படியே இருங்க. கட்சி கட்சி சூப்பராக இருக்கும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இந்த கொடுமை என்றால், டெல்லியில் இன்னும் கொடுமையான காட்சிகளை காணலாம்.

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் இரண்டு நாள் கூட்டம். இதில், சிதம்பரம் “வயதானவர்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” அதே கூட்டத்தில் ராகுல் பேசும்போது அரசியலில் தான் மிகப்பெரிய ஊழல் நிலவுகிறது. ஏராளமான இளைஞர்கள் அரசியலுக்கு ஈடுபடுவது மூலம் ஊழலை ஒழிக்க முடியும்” என்கிறார்.

இதையெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசா, கனிமொழி, ஷரத் குமார், கரீம் மொரானி, ஆஸிஃப் பல்வா, சாஹித் பல்வா ஆகியோர்களை பார்த்த பிறகு கூட ராகுல் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஊழல் இருக்காது என்று நம்புகிறாரா?


முல்லைப் பெரியாறு அணை - குரல் கொடுக்க யாரு???

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தையே கலக்கி விட்டனர் கேரளாவைச் சேர்ந்த அத்தனை எம்.பிக்கள். ஆனால் அவர்களின் தர்ணா போராட்டத்திற்கு கவுண்டர் தரும் வகையில் ஒரு தமிழக எம்.பியைக் கூட காண முடியவில்லை.

திமுக எம்.பிக்கள் கனிமொழியின் ஜாமீனுக்காக ஓடிக் கொண்டிருந்தனர். அதிமுக எம்.பிக்களோ லோக்சபாவில் நடந்த அமளி துமளியில் சீரியஸாக மூழ்கியிருந்தனர். முல்லைப் பெரியாறு அணைக்காக குரல் கொடுக்க நேற்று ஒரு தமிழக எம்.பி. கூட இல்லாதது தமிழக மக்களை விரக்தியில் தள்ளியது.

முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்ட வேண்டும் என்று தீர்மானமாக உள்ளது கேரளா. இதற்காக நேற்று கேரளாவின் நான்கு மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.

அதேபோல டெல்லியிலும் கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்கள் நேற்று சீன் கிரியேட் செய்து விட்டனர். லோக்சபாவில் கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட - கோஷமிட்டனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்திலும் கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த எம்.பிக்களிடம் தமிழகம் மீது குற்றம் சாட்டி தங்களுக்கு ஆதரவு சேகரித்தனர். மேலும் டேம் 999 படத்தைப் பாருங்கள், அப்போது எங்களது பரிதாப நிலை தெரியும் என்றும் படம் குறித்தும் விளம்பரம் செய்தனர். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி வீடு முன்பும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கேரள எம்.பிக்களின் போராட்டம் குறித்த பேச்சாகவே இருந்தது. பல மாநில எம்.பிக்களும் கேரளா ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டது போல என்று எண்ணும் அளவுக்கு கேரள எம்.பிக்களின் செயல்பாடுகள் காணப்பட்டன.

இப்படி நடந்தும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பிக்களில் ஒருவர் கூட எந்த வகையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஒரு எதிர்ப்புத் தர்ணாவைக் கூட யாரும் நடத்தவில்லை. குறைநத்பட்சம் லோக்சபாவில் கூட கேரள எம்.பிக்களின் கூற்றை மறுத்து யாரும் பேசக் கூட இல்லை.

திமுக எம்.பிக்கள் அத்தனை பேரின் கண்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் தருவார்களா என்ற எதிர்பார்ப்பில்தான் இருந்தது. அங்குதான் கிட்டத்தட்ட அத்தனை பேரும் கூடியிருந்தார்கள். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் சிலர் கூடியிருந்தனர். டி.ஆர்.பாலுவைப் பிடிக்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு கனி மொழி குறித்த கவலையில் சுற்றிக் கொண்டிருந்தார் அவர்.

சரி அதிமுக எம்.பிக்களாவது ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அவர்களும் கப்சிப்பென்றிருந்தனர். மாறாக, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் அரசுக்கு எதிரான ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்த அமளி துமளிகளில் அவர்கள் பாஜகவுடன் சேர்ந்து படு பிசியாக காணப்பட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சியினரும் கூட இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. சிபிஐ தேசியச் செயலாளர் ராஜாவைக் கூட காண முடியவில்லை. மொத்தத்தில் நேற்று தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக அத்தனை தமிழக கட்சிகளும் நேற்று டெல்லியில் திராட்டில் விட்டு விட்டன.

39 எம்.பிக்கள் இருந்தும், கேரளாக்காரர்கள் நடத்திய போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்க ஒரு எம்.பி கூடவா இல்லை என்று தமிழக மக்கள் விரக்தி அடைந்ததுதான் மிச்சம்.
கனிமொழி பிரச்சினை முடிந்து விட்டதால் 'ஃப்ரீ' ஆகியுள்ளதைத் தொடர்ந்து திமுக எம்.பிக்கள் இன்றுதான் பிரதமரைச் சந்திக்கப் போகின்றனராம்!

மார்க்கம் உண்டு

 
அப்பாடா.... ஒரு வழியாக
 
ஒரு வழி கிடைத்தது
 
இனிவழி எதுவென நின்ற(து) நேரம்
 
கனிமொழி வழி இது கண்ட(து) போதும்
 
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
 
அன்பு ஆலயத்தில்!!
 
பணம் இருந்தால் பார்க்கிங் உண்டு!
 
அறிவு ஆலயத்தில்!!

கொலைவெறி - புல்லரித்துப் போன அமிதாப்!

தனுஷ் எழுதி, பாடிய கொலைவெறி பாடலைக் கேட்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் புல்லரித்துப் போனாராம். இதுபற்றி அவர் தனது பிளாக் பக்கத்தில், ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி.. ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடனமிடுகின்றன, என்று எழுதியிருக்கிறார்.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. இளம் நடிகர் படையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் தனுஷ், மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். யாரைப் பார்த்தாலும் இப்போது இந்தப் பாடலைத்தான் கேட்கிறார்கள் என்றும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் அமிதாப்.

நீச்சல் உடை அணியவே மாட்டேன்...

 
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நீச்சல் உடையணிந்து நடிக்கவே மாட்டேன், என்று நடிகை தீக்ஷா சேத் கூறியுள்ளார். இத்தனைக்கும் அம்மணி ஒரு நீச்சல் சேம்பியனாம். மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து தமிழ் ரசிகர்களை கிறங்கடிக்க தயாராகி வருபவர் நடிகை தீக்ஷா சேத். சமீபத்தில் தீக்ஷாசேத் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, வாலிப வயோதிக அன்பர்களை வருத்தத்தில் தள்ளி வறுத்து எடுத்திருக்கும். வேறொன்றுமில்லை, அம்மணி நீச்சல் உடையை அணியவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

விக்ரமுடன் ராஜபாட்டை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தீக்ஷா அப்படம் வெளிவந்தால், தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் நீச்சல் உடையில் நடிப்பேன் என்று அவசரப்பட்டு பேட்டி கொடுக்கிற நடிகைகளுக்கு மத்தியில் தனது கவர்ச்சி கொள்கை பற்றி தீவிர விளக்கம் கொடுத்திருக்கிறார் தீக்ஷா. மகாராஷ்டிரா மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றவர்தான் இந்த தீக்ஷா என்பது கூடுதல் தகவல்.

சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தமிழ்நாடு அரசின் சிறப்பு தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தின் சிறப்பு தூதராக அமிதாபச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் குஜராத் மாநில தூதராகவும் நியமிக்கப்பட்டார்.


மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை விளக்கி சுற்றுலா பயணிகளை கவர, முதலீடுகளை பெருக்குவதற்கான விளம்பர படங்களில் அவர் நடித்துள்ள காட்சிகள் தொலைகாட்சி, சினிமா தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு தூதராக பொறுப்பு ஏற்கும்படி ஷாருக்கானை அணுகி இருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆனால் கொல்கத்தாவை சேர்ந்த சிலஅமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதேபோல் தமிழ்நாடு மாநில தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கண்ணன் கூறும்போது,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


கர்நாடகாவில் அவர் பிறந்திருந்தாலும் தமிழ் படங்கள் மூலம்தான் உயர்ந்த இடத்தை பிடித்தார். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு சமூக விஷயங்களில் அக்கறையுடன் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.

எனவே தமிழ்நாடு மாநிலத்தின் தூதராக பொறுப்பு ஏற்க ரஜினி முன்வர வேண்டும். அவரை தூதராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்என்றார்.

கட்சியில பெரிய பதவி என்ன கொடும்மை இது

திமுக ராஜ்யசபா எம்பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி 2 ஜி ஸ்பெட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழி ஜாமீன் கோரி பலமுறை நீதிமன்றக் கதவை தட்டியும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை ராசாத்தி அம்மாளிடம் பகிர்ந்து கொண்டேன் என்றார்.

கட்சியில் பதவி?:

கனிமொழிக்கு கட்சியில் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அது பற்றி பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

ராசாவின் ஜாமீன் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு ஜாமீன் பற்றி ராசா எதுவும் பேசவில்லை என்று கருணாநிதி கூறினார்.

வரவேற்பு அளிக்க முடிவு:

ஆறுமாத காலம் திகார் சிறையில் இருந்து விட்டு வரும் கனிமொழிக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கனிமொழி சென்னை வரும் போது கண்டிப்பாக வரவேற்பு அளிக்கப்படும் என்றார் கருணாநிதி.

கனிமொழியுடன் தொலைபேசியில் கருணாநிதி பேச்சு:

இந் நிலையில் கனிமொழியுடன் கருணாநிதி தொலைபேசியிலும் பேசினார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் திமுகவினர் இனிப்பு வழங்கி கனிமொழியின் ஜாமீன் விடுதலையைக் கொண்டாடினர்.

பெரிய நிம்மதி-டி.ஆர்.பாலு:

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. கருணாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு நிம்மதியை அளிக்கக் கூடியது என்றார்.

திமுக-காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பாலு பதிலளித்தார்.

திமுக எம்பியான டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், இந்த வழக்கில் கனிமொழி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றார்.


கொள்ளை அடிச்சுகிட்டு ஜெயிலுக்கு போய் திரும்புறவங்களுக்கு ஏதோ நாட்டுக்காக போராடி ஜெயிலுக்கு போய் திரும்புற மாதிரி வரவேற்பு , கட்சியில பெரிய பதவி என்ன கொடும்மை இது ! என்ன நடக்கு....!!

மின் கட்டணம் வீடுகளுக்கு ரூ.110

 தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், குறைந்த பட்ச மின் கட்டணமும், இரு மடங்காக உயர உள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைத்த பின், இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் முதல் அமலாகும்.

கடனில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ள மின் வாரியத்தை காப்பாற்ற, கட்டண உயர்வு கோரி, மின் வாரியத்தில் இருந்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, விசாரணைக்கு ஏற்கப்பட்டு, டிச., 31க்குள், கட்டண உயர்வு குறித்து, தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மின் வாரியத்தின் புதிய முடிவுப்படி, தினமும் பயன்படுத்தப்படும் யூனிட்களுக்கான கட்டணத்துடன், மாதந்தோறும் கட்ட வேண்டிய குறைந்த பட்ச மின் கட்டண தொகையும், இரு மடங்காக உயர்த்த உள்ளது.அதாவது, மின்சாரம் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை, கட்டாயமாக கட்ட வேண்டும். இல்லையெனில், அபராதம் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.இதற்கான கட்டணத் தொகைக்கு பரிந்துரை கோரி, மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. வீடுகளுக்கு, தற்போது இரு மாதங்களுக்கு வசூலிக்கப்படும், 40 ரூபாய் கட்டாய கட்டணம், 110 ரூபாயாக மாற்றப்பட உள்ளது. இதேபோல், அனைத்து வகை பயனீட்டாளர்களுக்கும், கட்டாய கட்டணம் உயர்கிறது.

மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!

ரஜினி நடிக்கும் புதுப்படத்துக்கு ‘'கோச்சடையான்என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘'கோச்சடையான்இந்தியாவில் தயாராகும், நடிப்பை பதிவிறக்கம் செய்யும் முதல் 3டி படமாகும். ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாரான அவதார்’, ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் உருவான டின் டின்ஆகிய படங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் உருவானவை. சரித்திரப் பின்னணியில் உருவாகும் கோச்சடையான்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சவுந்தர்யா அஸ்வின் இயக்குகிறார். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்குகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி இந்த படத்தில் பாண்டிய நாட்டு மன்னனாக நடிக்கிறார். கிபி.670 முதல் கிபி -710 ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பெயர் 'கோச்சடையான்'. கோ என்றால் அரசன், சடையான் என்றால் சிவன் பக்தர் என்று அர்த்தமாம் ஏற்கனவே தீவிர சிவன் பக்தனான சூப்பர் ஸ்டார், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என தனது முந்தைய படங்களில் சிவனை குறிப்படும் பெயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மயக்கம் என்ன!!!
நன்றி - கலிபோர்னியா ஆர்டிஸ்ட்  ரேபேகாஹ்

Wednesday, November 23, 2011

’குடி’ மகன் வயிற்றில் அடிக்கலாமா?

”யோவ், நீ நல்லா இருப்பியா, புட்டி மேலே அதிக துட்டு கேட்டு குடிகாரன் வயித்துல அடிக்கிறே...?”

“யோவ் கேக்ற துட்டு குடுக்கறதா இருந்தா குடு இல்லே சரக்கு கடியாது கிளம்பு...!”

இந்த டயலாக் சென்னையில் உள்ள ‘டாஸ்மாக்’ மது விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் நடைபெறுகின்ற சச்சரவில் தினந்தோறும் கேட்கப்பட்டு வருகிறது.

மது வாங்க வருபவர்களிடம் பாட்டிலில் குறிப்பிட்டு இருக்கும் விலையை விட, 3, 4, 5, 6, 7 ரூபாய் என்று அதிகமாக வசூலிக்கிறார்கள். அப்பாவி போல் காட்சியளிக்கும் மற்ற மாநிலத்தவர்களிடம் 10,15 ரூபாய் என்று கூடுதலாக பெற்றுக் கொண்டுதான் விற்பனை செய்கிறார்கள்.

இந்த அநியாயத்தை(!?) எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு மது விற்கப்படுவதில்லை. “வேணும்னா வாங்கிட்டு போய்யா, இல்லாட்டி எங்காவது போய் கம்ப்ளயின்டு செய்” என்று விரட்டி விடுகிறார்கள் ஊழியர்கள். எந்த ஒரு கடையிலும் பாட்டிலில் குறிப்பிட்டுள்ள கட்டணம் வசூல் செய்வதில்லை. குறிப்பிட்டுள்ள கட்டணத்தை சரியாக கொடுத்தாலும் அதிக கட்டணம் கொடுத்தால்தான் மது வாங்க முடியும் என்ற நிலைமை தான் எங்கும் உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கம்ப்யூட்டர் முறையை ஏற்படுத்தினால் ஊழியர்களின் பகல் கொள்ளையை ஓரளவுக்கு தடுக்க முடியும் என்கிறார்கள் சில சிறந்த(!) குடிமகன்கள். அத்துடன் போலி சரக்கு விற்பனையும் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.

விற்பனையாளர்களிடம் ஒற்றுமை இருந்தால், பங்குபோடும் மனமிருந்தால் அவர்களால் எளிதில் போலி சரக்குகள் கடைகளிலேயே விற்பனை செய்ய முடியும். சமீபத்தில் வெளிவந்த செய்தியில் டாஸ்மாக் கடைகளில் வருவாய் குறைந்து வருவதால் அரசு அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. இந்த வருவாய் இழப்பிற்கு காரணம் போலி மதுவிற்பனையாக இருக்கலாம் அல்லவா.


 
பக்கத்து மாநிலமான கேரளாவில் கம்ப்யூட்டர் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட மது கடைகள் எவ்வித சச்சரவும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்படுவதில்லை. காரணம், மது வகைகளை அங்கே வாங்கினால் பில் உண்டு. தமிழ்நாட்டில் பில் கிடையாது.

கேரளாவில் மது விற்பனை கடைகளில் க்யூ நிற்பதற்கு கம்பி வேலி உண்டு. பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற பலவகை மதுவுக்கு தனி கியு காணலாம். ’ரம்’ அதிகமாக விற்பனை ஆகுவதால் அதற்கு தனி கவுண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாட்டில்களில் பெரிய எழுத்தில் அதன் விலை எழுதி மாட்டிவைத்து இருக்கிறார்கள். இதனால் அந்த பாட்டிலுக்கு என்ன விலை என்று கேட்க வேண்டிய அவசியமில்லை. கியூவில் நிற்பவர் முதல் கவுண்டரில் தனக்கு வேண்டிய மது பற்றி கூறும் போது உடனே கம்ப்யூட்டரில் பில் அடித்து வழங்கப்படும். அத்துடன் அடுத்த ஊழியரை அனுகினால் மது கிடைக்கும். அதை காகிதத்தில் நன்றாக சுற்றி கடமை(!!!) உணர்வுடன் வழங்குகிறார்கள். அங்கு எவ்வித பேச்சுக்கும் இடமில்லை.ஆனால், தமிழகத்தில் தி.மு.க., ஆண்ட போதும் இப்போது அ.தி.மு.க. ஆளுகின்ற போதும் மது விற்பனை கடைகளில் ஏனோ கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில்லை. இதனால் பல கடைகளில் போலி மது விற்பனை மிக எளிதாக நடைபெற்று அரசு வருவாய் குறைப்பது மட்டுமின்றி பாவம் குடிமகன்களையும் அல்லல்படுத்துகிறார்கள். அரசுக்கு அதிக வருமானம் ஈட்டு தரும் குடிமகன்கள் மீது ஏன் இந்த வஞ்சனை?

ஓட்டல்களில், மருந்துக் கடைகளில் இன்னும் பல வியாபாரம் நடத்தும் தனியார் கடைகளில் பில் போடவில்லை என்றால், வணிக வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள்.

அப்படியென்றால், அரசே நடத்தும் கடைகளில் ஏன் பில் போட மறுக்கிறார்கள். இதன் மூலம் எத்தனை கொள்ளை நடக்கிறது. அதை தடுக்க வேண்டிய அரசாங்கம் கைகட்டி கொண்டு இருப்பதன் நோக்கம் என்ன?குட்டை பாவாடை குஷ்பு கண்டனம்

நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது வழக்கம். கவர்ச்சி நடிகைகள் மட்டுமின்றி முன்னணி கதாநாயகிகளும் இதுபோல் கவர்ச்சி ஆடை அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புகளும் காட்டப்பட்டு வருகிறது.

நடிகை ஸ்ரேயா, சிவாஜி பட விழாவில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்றார். இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்தது. போலீசிலும் புகார் அளித்தது. இதையடுத்து ஸ்ரேயா மன்னிப்பு கேட்டார். இதுபோல் நமீதாவும் கவர்ச்சி ஆடை அணிந்து விழாக்களுக்கு வருகிறார். இருக்கையில் அமர்ந்து இருக்கும்போது போட்டோ கிராபர்கள் படம் எடுப்பதை தவிர்க்க கால்கள் மேல் துண்டை போட்டு மறைத்துக்கொள்கிறார்.நடிகைகள் கவர்ச்சி ஆடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நடிகை குஷ்பு கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
 


நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார்.ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்
Monday, November 21, 2011

விஜய்யின் புது சென்ட்டிமென்ட்...
வேலாயுதம் ஹிட் ஆனதிலிருந்தே முருகன் சென்ட்டிமென்ட் பிடித்தாட்டுகிறது விஜய்யை. படி தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரது சமீபத்திய படங்களில் வேலாயுதத்திற்கு மட்டும் பாரசூட்டே கிடைத்தது. அதன்விளைவாகதான் இந்த வேலாயுதக்கடவுள் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.

அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய். படத்தின் துவக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம். சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.

எ.ஆர்.முருகதாஸ் (பார்றா... இங்கயும் ஒரு முருகன்) இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ். திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய் அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.

படத்தின் கதாநாயகியாக யார் யார் பெயரையோ சொல்லி உழப்பிக் கொண்டிருக்கிறார்கள். வரப்போவது நிச்சயம் வள்ளியாக இருக்கப் போவதில்லை. வாயில் நுழையாத பெயரோடு ஏதாவது ஒரு கள்ளிகாத்துக் கொண்டிருப்பார்.

கடைசி செய்தி- காஜல் அகர்வாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!


எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம்.

டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.
நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

பியூட்டி ப்ரெஸ் யாருக்கு?
இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள்.
500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாகஇருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்’ ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு
அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் நம் முன்னோர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் முதுமை நம்மை அண்டாது என்று தெரிவித்துள்ளனர்.

என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும். எனவே உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகாக மாறுங்கள்.

ஹன்ஷிகா தோற்றத்தில் பெருசு - வயதளவில் சிறுசுதான்!


தமிழ் சினிமாவில் நடிக்க, தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஹன்சிகா மோத்வானி பெருமிதம் கொள்கிறார். பாலில் தோய்த்து எடுத்த முத்துகள் போல, தன் அழகான சிரிப்பாலும், கண்மூடி தூங்கினாலும் கனவோடு வந்து நிற்கும் அழகிய முகம் ஹன்சிகாவுடையது.

தனுஷில் தொடங்கி ஜெயம் ரவி, விஜய் என்ற விறுவிறுவென முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு வருகிறார் ஹன்சிகா. கடைசியாக விஜய்யுடன், இவர் நடித்த வேலாயுதம் படம் ஹிட்டானது, ஹன்சிகாவை ரொம்பவே மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தற்போது சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் பட புகழ் ராஜேஷ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பது பற்றி ஹன்சிகா கூறுகையில், தமிழ் சினிமாவில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் நடிக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.


எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது. இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. அதற்குள், நல்ல நல்ல படங்களில் நடித்து சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு, லட்சியம், எல்லாம் என்று கூறியுள்ளார்.

மீண்டும் நயன்தாரா!?


பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நயன்தாரா, திருமணத்துக்குப்பிறகு  மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 நயன்தாரா சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? என்று எழுந்த கேள்விகளுக்கு, நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும்வரை நடிக்கும் எண்ணம் இல்லை. அதன்பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றி யோசித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார் நயன்தாரா.

நடிகை அஞ்சலி யாரையும் காதலிக்கவில்லை !

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காடித்தெரு மூலம் எனக்கொரு அங்கீகராத்தை கொடுத்த ரசிகர், ரசிகைகள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு எங்கேயும் எப்பொழுதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். வாழ்க்கையில் ஜெயிக்க, போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் எனது போராட்டத்துக்குப் பிறகு இன்று நல்ல நடிகை என்று அந்தஸ்தில் கொஞ்சம் வளர்த்திருக்கிறேன். இப்போது தான் நல்ல நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை கெடுப்பது போன்று ஒரு நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்று பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன் இணைந்து ஒரே ஒரு படத்தில் தான் நடித்தேன். அதற்குபிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து, சில படங்களை தவிர்த்தேன். நான் இன்னும் வளர வேண்டும். நல்ல நடிகை என்று விருதுகளை வாங்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். எனது இந்த ஆசைகளுக்கு உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.

எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை... இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து மேற்கொண்டு அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள்.

இவ்வாறு அஞ்சலி கூறியுள்ளார்