நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, November 29, 2011

நீச்சல் உடை அணியவே மாட்டேன்...

 
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நீச்சல் உடையணிந்து நடிக்கவே மாட்டேன், என்று நடிகை தீக்ஷா சேத் கூறியுள்ளார். இத்தனைக்கும் அம்மணி ஒரு நீச்சல் சேம்பியனாம். மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து தமிழ் ரசிகர்களை கிறங்கடிக்க தயாராகி வருபவர் நடிகை தீக்ஷா சேத். சமீபத்தில் தீக்ஷாசேத் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, வாலிப வயோதிக அன்பர்களை வருத்தத்தில் தள்ளி வறுத்து எடுத்திருக்கும். வேறொன்றுமில்லை, அம்மணி நீச்சல் உடையை அணியவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

விக்ரமுடன் ராஜபாட்டை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தீக்ஷா அப்படம் வெளிவந்தால், தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் நீச்சல் உடையில் நடிப்பேன் என்று அவசரப்பட்டு பேட்டி கொடுக்கிற நடிகைகளுக்கு மத்தியில் தனது கவர்ச்சி கொள்கை பற்றி தீவிர விளக்கம் கொடுத்திருக்கிறார் தீக்ஷா. மகாராஷ்டிரா மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றவர்தான் இந்த தீக்ஷா என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...