நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, October 23, 2011

வெற்றி தேடித் தந்தவர்களுக்கு - ஜெ. ரகசிய திட்டம்

உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அரசின் நியமன பதவிகளை வழங்க, முதல்வர் முடிவு செய்துள்ளார்.முதல்கட்டமாக, மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிக்கான நபர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான நபர்களின் பெயர்கள், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதையடுத்து, தமிழக அரசால் நியமனம் செய்யப்பட உள்ள கோவில் அறங்காவலர் குழு பதவி, வணிகர் நல வாரியம் உட்பட அரசின், 32 வாரியங்களின் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை வெளியிட்டு, தீபாவளி பரிசு வழங்க முடிவு செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 38 ஆயிரத்து 421 கோவில்களின் அறங்காவலர்கள் குழு பதவிகளுக்கான பட்டியல் முதலில் வெளியாகிறது.தொடர்ந்து, தமிழ்நாடு முதலீட்டுக் கழகம், சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சி), சமூக நல வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உட்பட, அரசின் 31 கழகங்களுக்கு, தலைவர் உட்பட மற்ற பதவிகளுக்கான நபர்களின் பட்டியல் வெளியாக உள்ளது. வணிகர் நல வாரியம், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம், ஆடு வளர்ப்போர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு நல வாரியங்களுக்கான நியமன பதவிகளுக்கான நபர்களின் பட்டியலும், இந்த வாரத்தில் வெளியாக உள்ளது.

எம்.ஜி.ஆர்., விசுவாசிகள், இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை, ஜெயலலிதா பேரவை ஆகிய அமைப்புகளில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.இது குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது: இந்த பதவிகளுக்கு மாவட்ட செயலர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள பட்டியல், உளவுத்துறை மூலம் தணிக்கை செய்யப்பட்டு, முதல்வரின் பார்வைக்கு சென்று விட்டது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு முன், நியமன பதவிகளுக்கான பட்டியல் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...