நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, March 11, 2012

திருமணம் Vs மறுமணம் கலாட்டா கும்மி1. திருமணம் என்பது:

உணவகம் செல்கிறிர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று  நீங்கள் முடிவு பண்ணி ஆர்டர் பண்ணனும் அதை விட்டுட்டு  மற்றவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்து  அதேயே ஆர்டர் செய்வது?!.  
----------------------------------------------------------------------------

2. ஆண்:  நீண்ட ஆயுள்  பெற ஏதாவது வழி இருக்கா?


டாக்டர்: கல்யாணம் பண்ணிக்குங்க.

ஆண்: கல்யாணம் பண்ணினால்... முடியுமா?

டாக்டர்:  இல்ல, நீண்ட ஆயுள் வேணும் என்ற எண்ணம் வராது.
-----------------------------------------------------------------------------

3..கல்யாணத்தின் போது தம்பதிகள் இருவரும் கைகளை கோர்த்து இருப்பது ஏன்?


அது ஒரு சம்பிரதாயம்... எப்படின்னா இரண்டு  குத்து சண்டை வீர்கள் சண்டைக்கு முன் கை குலுக்கி கொள்வார்களே அது போல்
-----------------------------------------------------------------------------

4..மனைவி: செல்லம் இன்னைக்கு நமக்கு (திருமணம்) ஆண்டு விழா...நாம் என்ன செய்யலாம்?


கணவன்: இரண்டு நிமிஷம் அமைதியாக இருப்போமா?
-----------------------------------------------------------------------------

5. கடவுளை புரிந்து கொள்ள முடியல... பின்ன, அழகான பொண்ணுகளை படைத்தும்  விட்டு அவர்களை மனைவியா திருப்பி விடுறானே
-------------------------------------------------------------------------------

6. பண பரிவர்த்தனைகள் மின்னணு வங்கியை விட வேகமாக நடக்கும்னா அதுக்கு பெயர்  கல்யாணம் .


--------------------------------------------------------------------
7. கேர்ள் பிரெண்ட்ஸ் சாக்லேட் மாதிரி எப்பவும்  சுவையா இருக்கும்.

லவர்ஸ் பிஸ்ஸா  மாதிரி  ஹாட் மற்றும்  காரமாக அடிகடி சாப்பிடுவது.

கணவன்  சாதம் மாதிரி வேறு வழி இல்லாத போது சாப்பிடுவது.
----------------------------------------------------------------------------------

8. நாய்கள் ஏன் திருமணம் புரிவதில்லை?


அதுங்க ஏற்கனவே நாய் வாழ்க்கை  வாழுதுங்க.
-------------------------------------------------------------------------------

9. மறுமணம் புரிந்து கொள்ள சட்டம் மறுப்பதேன்?
 
ஏன்னா..., ஒரே குற்றத்து  இரண்டு முறை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


கடலோரம் வீசும் காற்று....

இரவிலே படுத்தால்  என் தூக்கம் என்னை திட்டும்

விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்.