நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, April 29, 2013

தம்பதிகளே, சந்தோசமா இல்லையா?

வணக்கம்
குடும்ப வாழ்க்கை சின்ன சின்ன கருத்து மோதல்களும், செல்ல சண்டைகளும் இருந்தால்தான் சுவாரஸ்யம் இருக்கும். ஆனால் சண்டை பெரிதானால் குடும்பத்தில் விரிசல்கள் ஏற்படும். எனவே குடும்பத்தில் சண்டை ஏற்பட்டால் ஈகோ பார்க்காமல் சமாதானம் ஆகுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர் பெரியவர்கள்அமைதியாக இருக்காதீர்கள்

குடும்பத்தில் சண்டை வந்து ஒருவரை ஒருவர் குறை கூறி தீர்த்த பின்னர் முகத்தை திருப்பிக் கொள்ளாதீர்கள். யாராவது ஒருவர் சமாதானம் ஆகுங்கள். அதுதான் குடும்பத்திற்கு நல்லது. பேசாமல் இருந்து விட்டால் அதுவே பிரச்சினைக்கு காரணமாகிவிடும். மெளனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் அமைதியாக இருப்பது பெரும் ஆபத்தாகிவிடும்.

சாத்தான் கூடாரம்

அமைதியாக இருந்தால் கண்டதையும் நினைத்து மனது குழம்பும். மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கண்டதையும் ஓதும்.
மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.ஈகோ வேண்டாம்

தம்பதியருக்கிடையே யார் பேசுவது என்பதில் ஈகோ வேண்டாம். ஏனெனில் ஈகோதான் அனைத்து பிரச்சினைக்கு காரணமாகிறது. இருவரும் பேசாமல் விட்டால் முதலில் யார் பேச்சை தொடங்குவது என்பதில் சங்கடங்கள் எழலாம்.

முதலில் யார் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ ஏற்பட்டால் இது வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும். முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும்
, இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.

உடனேபேசுங்கள்

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள்
, சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள். அதுதான் பிரச்சினைக்கு தீர்வு.படித்ததை பகிர்கிறேன்..
நேற்று இன்று நாளை


வணக்கம்ஆகையால், யாருக்கெல்லாம் மகன்கள் உள்ளார்களோ அவர்களுக்கு அனுதாபங்களையும் - யாருக்கெல்லாம் மகள்கள் உள்ளார்களோ அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Sunday, April 28, 2013

அப்பவே சொல்லீட்டாரா....

வணக்கம்

நாம இப்போ எங்க எதை நோக்கிய பயணம்......!?

முகம் தெரியாதவர்களுடன் நாம் கொண்ட நேசம்  அருகில் இருப்பவர்களிடம் காட்டுவது இல்லை என்பது நிதர்சமான உண்மை.

விளையாட்டு மைதானத்தில்.....வேடிக்கை பாக்குராங்கலாம் 

நண்பர்களுடன் உணவகத்தில்....  கலகலப்பா பேசிட்டு இருக்காக பீச்சில் நண்பர்களுடன் காத்து வாங்குராங்கலாம்  நெருக்கமானவருடன்  வெளியில்.... அன்னியோனியமாக
நண்பர்களுடன் தேனீர் பருகுகிறார்கள்.......

மீயுசியத்தை சுத்தி  பாக்க... சென்ற இடத்தில்.. ரசனையுடன்சுற்று சுழல் காட்சிகளை பார்வை....பார்த்து... அனுபவித்து....அருகில் நண்பருடன்...உரையாடல்...?? 


மேல உள்ள    படங்கள்   இருக்கட்டும் ஆனா வெகு காலத்துக்கு  முன்னரே,...  பெரியவர்  என்ன சொல்லி இருக்காருன்னா  


Tuesday, April 9, 2013

பதினெட்டு வயது இளம் பெண்

வணக்கம்டேய், ஏங் கேர்ள் பிரெண்டுக்கு பிறந்தநாள் வருது,  ஒரு பரிசு கொடுக்கணும் என்ன மாதிரி பரிசுன்னு தெரியல அவளுக்கு பிடிச்ச மாதிரியாவும் இருக்கணும் ஒரு ஐடியா சொல்லேன்


அவளுக்கு உன்னை பிடிக்குமா?

ஆமாம்...

அப்படின்னா நீ எதைவேனுமினாலும் வாங்கி கொடு.
பதினெட்டு வயது இளம் பெண்

அவளது தாய் சொல்கிறாள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பிராத்தனை செய்தால் உன் கனவில் தேவதை வரும் உனக்கு மூன்று வரம் தரும் என்று, இதை புரிந்து உள்வாங்கி கொண்ட பெண் அதை நடைமுறை படுத்த தயாராகிறாள்

தினமும் தொடந்த பிராத்தனை நான்கு ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் பூர்த்தி செய்கிறாள்


அதற்கான தருணம்  வந்தது, மனதெல்லாம் பூரிப்புடன் சீக்கிரமாகவே படுக்கைக்கு சென்றால் அந்த பதினெட்டு வயது இளம் பெண் உண்மையிலேயே கனவில் தேவதை வந்தது

இப்ப இருவருக்கும் நடந்த உரையாடல்:

 
தேவதை:  பெண்ணே, கடந்த நான்கு ஆண்டுகளாக தொடந்து விடாமல் என்னை பிராத்தனை செய்தாய் மிக்க மகிழ்ச்சி


நான் உனக்கு மூன்று வரம் தருகிறேன்... கேள் உன் விருப்பபடி என்ன வேனுமினாலும்  ஆனா ஒரு நிபந்தனை

பெண் : நிபந்தனையா?!.... என்ன அது.


தேவதை:  உனக்கு பாய்பிரண்டு இருக்கா?

பெண் : ஆமா


தேவதை: பெண்ணே நீ பிராத்தனை செய்யும் பொது அவன் உனக்காக காத்திருந்தான் நேரத்தை தியாகம் செய்துள்ளான்..... 
ஆகையால்..... அதே நேரத்தில் அவனுக்கு இந்த மாதிரி வரம் பத்தி எதுவும் தெரியாது இருந்தாலும் நீ என்னவெல்லாம்  வரமாக  கேட்பாயோ உன்னில்  இருந்து பத்து மடங்கு அவனுக்கும்  போய்  சேரும் இதை நீ ஏற்றுகொண்டால் உன்னுடைய முதல் வரத்தை நீ கேட்கலாம்பெண் : ( சிறிது நேர சிந்தனைக்கு பின்) சரி தேவதை ஒப்பு கொள்கிறேன்


பெண் : முதல் வரமாக என்னை இவ் உலகத்திலே உள்ள பணக்காரர்களை விட பத்து மடங்கு  பணக்காரியாக ஆக்கவும் 

தேவதை: ஆனா, உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக ....

பெண் :பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியே

பெண் : இரண்டாவது இவ் உலகிலேயே உள்ள அழகியை விட நூறு மடங்கு அழகியாகனும்   


தேவதை: ஆனா , உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு அழகான பையனாகி விடுவானே

பெண் : பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியேதேவதை: இப்ப கடைசியான வரம்.... கேள்

பெண் : தேவதையே எனக்கு மிதமான  இதய வலியை கொடு 

தேவதை: என்ன  உண்மையாகவேவா 

பெண் : ஆமாம் உண்மையாகவே

 தேவதை: சரி உன் விருப்பபடியே...

சிந்திக்கவும்

பாத்திங்களா....அந்த பையனின் நிலைமையோ பாவம் இதயவலி வந்து பரிதாபமாக.......................

ஆனா 

பதினெட்டு வயது இளம் பெண்ணோ 
மிதமான  இதயவலியுடன் பிழைத்துக்கொண்டாள் ஆக அவள் தான் உலகிலேயே அழகியும் பணக்காரியுமாக...


இக் கதையில் இருந்து தெரிந்து கொள்வது என்னான்னா

பெண்கள் புத்திசாலிகள் ஆண்களை விட மிகவும் தெளிவான புத்திசாலிகள் பசங்களே உஷார்


இதுக்கு மேல பெண்கள் படிக்க வேண்டாம்


ஆண்கள் மட்டும் தொடரவும்


நண்பர்களே கவலைபடாதீர்கள் நீங்க நினைத்தமாதிரி எதுவும் நடக்கல 

உண்மையிலே என்ன நடந்ததுன்னா


அந்த பெண்ணின் காதலனுக்கு மிதமான இதயவலி பத்து முறை  வந்தது ஆகையால் அந்த பெண்ணை விட பத்து மடங்கு காலம் உலகிலேயே ஆண் அழகனாகவும்  பணக்காரனாகவும் வாழ்ந்தான்.இக் கதை மூலம், ஆக கவலைபடவேண்டாம் உங்களை விட உங்க கேர்ள் பிரெண்ட் புத்திசாலி.................
ஹலோ அதான் நான் அங்கேயே சொன்னேன்ல பெண்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று (அவ்வ்வ்வ்வ்)

மனைவியை சமாளிப்பது எப்புடி?

அப்படின்னு கூகுளே தேடினாலும், தேடிய விடை அப்புடிதேன் வருது

நல்வரவு, நாங்களும் அதை தான் தேடுகிறோம்

எப்புடி ஹி ஹி ஹி ஹி ......வர்ர்ர்ட்டா

Monday, March 25, 2013

நடுவுல கொஞ்ச நாளா காணோம்

வணக்கம்


பையன் : உனக்கு ABCD ல A to Z, நல்லா தெரியுமா?

பொண்ணு : ஆமா

பையன் : “ABCDEFGHIJKLMNOPQRSTVWXYZ” இதுல எந்த எழுத்து இல்ல?

பொண்ணு : ம் ம் .........  ".U "

பையன் : கரைக்ட்டு.....எங்கே போச்சி அது?


பொண்ணு : எனக்கு தெரியாது..... ஆமா எங்கே போச்சி..

பையன் : "U" எங்  இதயத்துல இருக்கு


ஹே..... நாங்கெல்லாம் அப்பவே அப்பூடி......இப்படியும் லவ்வ  சொன்னோமுல்ல.இவள் அண்டை வீட்டு பெண்

இவள் தனியாகத்தான் இருக்கிறாள்

இவள் வீடு இருப்பது எனது வீட்டுக்கு நேர் எதிரே

இவள் வீட்டை  எனது அறையில் இருந்து கொண்டு தெளிவாக பார்க்கலாம்

இவளை  நான் தினமுன் எனது அறையில் இருந்து பார்ப்பேன் வேலைக்கு போகும் போதும் வேலை முடித்து வரும் போதும்..

ஒருநாள்..........

எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவள் என் வீடு நோக்கி வருவதை கண்டு.....

என் வீட்டு கதவை தட்டியதும்....

துள்ளி குதித்து ஓடி கதவை திறேந்தேன்

என்னை நேருக்கு நேராக பார்த்து :- இப்ப தான் வந்தேன் ரொம்ப ஜாலி மூடில் இருக்கேன் இன்று இரவு முழுவதும் சந்தோசமாக இருக்கணும்
இன்று இரவு நீங்க ப்ரீயா?

உடனடியாக சொன்னேன் : ஆமாம் நான் ப்ரீதேன் எந்த வித வேலையும் இல்ல 

அவ சொன்னா : நல்லது மிக்க மகிழ்ச்சி எனது நாயை பார்த்து கொள்ளுங்கள் 


ஹா ஹா ஹா முதுமை....எல்லோருக்கும் வரும். 

தலைப்பு : நடுவுல கொஞ்ச நாளா காணோம்.... அட எங் பதிவ சொன்னேனுங்கோ...

=========================================

இன்று நான் அப்பாவாகிய தினம்

ஆமுங்க.. என்ற மகனுக்கு பொறந்தநாளுங்கோ......

====================================================


வாழ்க்கையில் இந்த நாலு விடயத்தில் முழுமையாக திருப்தி எந்த மனிதனாலும் அடைய முடியாது
1. கைபேசி (மொபைல்)
2. வாகனம் (ஆட்டோமொபைல்)
3. தொலைக்காட்சி பெட்டி (டி வி)
4. மனைவி /கணவன்
ஏன்னா,.... பக்கத்துலையே வேறு நல்ல மாதிரிகள் இருப்பதால்/தெரிவதால்.


Wednesday, February 13, 2013

காதல் அப்படின்னா ஒரு இது வேணும்

வணக்கம்


காதல் அப்படின்னா _______________________??

  • வலி
  • குருட்டுத்தனம்
  • வாழ்க்கை  
  • போதை
  • பொய்
  • பொழுதுபோக்கு  
  • விளையாட்டு
  • அழகான உணர்வு
  • காமம்
  • ஒண்ணுமே இல்ல

கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்.மனபிராந்தி : காத்துவாக்குல & காதுல
ஏங்,.. உங்களுக்கு எதாவது புரியுதுங்களா,  

கூகிளாண்டவர் என்ன சொல்றாருன்னா,
லவ்ன்னா காதல் என்று அன்பை களங்கப்படுத்த வேணாம்
லைப்ன்னா வாழ்க்கைன்னு உயிரை களங்கப்படுத்த வேணாம்

எல்லாத்துக்குமே ஒரு இது வேணும்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

விசுவாசம்.......எம்புட்டு நாளைக்கி ...

Wednesday, February 6, 2013

ஒக்காந்து ஓசிப்பம்ல

வணக்கம்

இது ஒரு காதல் கதை அல்ல காவியம்.... ஆம், ஓவியம்  

இந்த பதிவில் உள்ள காவியம்  எவர் மனதையும் புண்படுத்த அல்ல...(ஒ... டைட்டில் கார்டு) இந்த பதிவுக்கும், இந்த லவ் பண்ணலாமா  பதிவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. (எல்லாம் ஒரு மார்க்கமாத்தேன் திரியுராங்களோ) மைண்ட் வாய்ஸ் கேட்குது...

சரியி கதைக்கு ச்சே காவியத்துக்கு போவோமா ....வாங்க  


நா 12ம் வகுப்பு படிச்சேன்

அவளும் 12ம் வகுப்பு படிச்சா

நா பிஎஸ்சி போனேன் 

அவ பிசிஎ போனா

நா எம் எஸ் சி பண்ணும்போது

அவ கல்யாணம் பண்ணா

நா ஜே ஆர் ப் தயாராகும் போது

அவ ஒரு குழந்தைக்கு தாயான

நா பி எச் டி சீட் கிடைக்கும் போது 

அவ இரு கொழந்தைக்கு தாய் ஆனா

நா பி எச் டி பண்ணும் போது

அவ கொழந்த 1ம் வகுப்பு போச்சி

நா டாக்டரேட்  ஆனேன்

அவ கொழந்த 10ம் வகுப்பு பாஸ்சானா

நா ஒரு வேலையில்  சேர்ந்தேன்

அவ பொண்ணு காலேஜ்ல சேர்ந்தா

முக்கியமான விசேசம் என்னான்னா!!

இன்னைக்கு எனக்கு என்கேஜ்மென்ட் 

அவ பொண்ணு என்னோட பியான்சி 

(ஏலேய்...டாக்டரேட் படிப்பே.......அவ்வ்வ்வ்வ்வ்)

(மன்னிக்கணும் ஒரு டாக்டரேட் நிலையில், இடையிடையே ஆங்கிலம் கலந்து)   


என்ன.. காதல் காவியம் இனிமேதேன் ஆரம்பம். கல்யாணம் பண்ணியும் காதல் பண்ணலாம் என்ன புரியுதா...வர்ட்ட்டா 


Monday, January 28, 2013

தல, இரகசியசந்திப்பு

இன்றைய சுற்றுச்சூழல்அப்போது ஏழு வயசிருக்கும் எனக்கு. மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார்கள் என்னை 
அப்பாவும் அம்மாவும். அந்த வளாகத்தை நான் ரசிக்கவில்லை . எந்த மிருகத்தின் முகத்திலும் சிரிப்பில்லை; பறவைகளுக்கு உடல் நலமில்லை. மிருகங்களைப்  பார்க்க வந்த மனிதர்களையெல்லாம் கூண்டிலடைத்து  அவர்களை வேடிக்கை பார்க்க மிருகங்களை திறந்துவிட 
வேண்டுமென்று தோன்றியதெனக்கு   - எமிலி 
(வைரமுத்துவின்....மூன்றாம் உலகப்போர் நூலில்  பக்கம் 61 - 62ல்- நன்றி)
பேசும் படம்

ஒரு தல..... ஈருடல்.........இரகசியசந்திப்பு இரகசியசந்திப்புன்னு சொல்வாய்ங்க....
அதானா இது(நகைச்சுவைக்கு மட்டுமே)மனபிராந்தி: காத்துவாக்குல & காதுல


நீங்கள் விரும்பும்/நேசிக்கும் ஒருவர் உங்களை விரும்பாது/நேசிக்காது  இருப்பது -  விமானநிலையத்தில் கப்பலுக்காக காத்திருப்பது போன்றது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வாழ்க்கையில் மிக உன்னதமான ஒரு மகிழ்ச்சி என்பது, என்ன பண்ணினாலும்..... சுற்றி உள்ளவர்கள் - உன்னால் செய்ய முடியாது என்று சொல்வதே. 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரண்டு சிறந்த ஆலோசனைகள்:

அனைத்து விதமான கேள்விகளுக்கும் சிறந்த பதில் மௌனம்

அனைத்து விதமான  சூழ்நிலைகளிலும் சிறந்த எதிர்வினை புன்னகை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அறியாமல் நடக்கும் ஒரு சம்பவம்...

அதுல, கழுதை கிராபிக்ஸ்...  டேய் நீ எல்லாம் நல்லா வருவீடாTuesday, January 1, 2013

இதயபலம் உள்ளவர்களா - வாங்கோ

வணக்கம்

 

அவன் : திருமணம் செய்ய சிறந்த மாதம் எது ?

இவன்   : அக்டம்ப்ரோரி ..

அவன் : முட்டாள்தனமாக பேசாதே, அப்படி ஒரு  மாதமே இல்லை

இவன் : அதைதேன் நானும் சொல்றேன் 

===============================================================
  

அப்பாவி பக்கி பயபுள்ள
   
===============================================================
ஒரு இராணுவவீரர் குழந்தையும் ஒரு கடற்படைவீரர்  குழந்தையும் தனது தந்தையை பற்றி பெருமையாக பேசினார்கள்.

"என் தந்தை ஒரு பொறியாளர். அவரால் எதையும் செய்யமுடியும், உனக்கு  ஆல்ப்ஸ் (பெரிய மலை)  தெரியுமா? "

"ஆமாம்," கடற்படை குழந்தை கூறியது.

"என் அப்பாவால்தான் அது கட்டப்பட்டது."

பின்னர் கடற்படை குழந்தை கேட்டது:

மிடியல
"உனக்கு  டெட் சீ  (Dead Sea) தெரியுமா?"

"ஆம்."

"அது என் அப்பாவினால் தான் கொல்லப்பட்டது !"

                                                                     

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

மொக்க காமடிக்கு கூட ஓவரா சிரிக்கானே...

அட, அது ஒண்ணுமில்லப்பு

பயபுள்ள ஆழ்மனதில் பெரும் சோகத்துடன் இருக்கான்.....

=============================================================

எப்ப ஒருத்தனை / ஒருத்தியை முழுமையாக எந்த வித சந்தேகமும் இல்லாமல் நம்பிவிட்டோமோ?!

அதன் முடிவில் கிடைக்கும் ஒரே பயன்:

வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதன்.

(அல்லது) 

வாழ்க்கையில் ஒரு நல்ல பாடம்.
==============================================================

விழிப்புணர்வுக்காக,  இன்றைய காலகட்டத்தில்  நாலு சக்கர வாகனங்கள் நமது தெருக்களில் பெருகியுள்ளது., உஷார்.....மக்களே... குழந்தைகள் கவனம்:  கடந்த ஜூன் மாதத்தில் புகைப்படம்  மூலம் விழிப்புணர்வு பதிவு செய்திருந்தேன்.

(இந்த காட்சி வீட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானவை)

(இதயபலவீனம் கொண்டவர்கள் இக்காட்சியை காணவேண்டாம்  மீறினால்.....க்கும் சொன்ன   கேட்கவா போறீங்க...........ம் உங்க இஷ்டம்) 

இதயம் பலமா  உள்ளவர்கள் மட்டும் இந்த பட காட்சியை காணவும் 
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஜிந்திக்குறேன்....

(லொள்ளு & ஜொள்ளுக்கு எந்த மாதிரி!  படம்,
 எப்பூடி கமண்டலாமுன்னு)நன்றி : படங்கள் கூகிள்