நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, April 9, 2013

பதினெட்டு வயது இளம் பெண்

வணக்கம்டேய், ஏங் கேர்ள் பிரெண்டுக்கு பிறந்தநாள் வருது,  ஒரு பரிசு கொடுக்கணும் என்ன மாதிரி பரிசுன்னு தெரியல அவளுக்கு பிடிச்ச மாதிரியாவும் இருக்கணும் ஒரு ஐடியா சொல்லேன்


அவளுக்கு உன்னை பிடிக்குமா?

ஆமாம்...

அப்படின்னா நீ எதைவேனுமினாலும் வாங்கி கொடு.
பதினெட்டு வயது இளம் பெண்

அவளது தாய் சொல்கிறாள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பிராத்தனை செய்தால் உன் கனவில் தேவதை வரும் உனக்கு மூன்று வரம் தரும் என்று, இதை புரிந்து உள்வாங்கி கொண்ட பெண் அதை நடைமுறை படுத்த தயாராகிறாள்

தினமும் தொடந்த பிராத்தனை நான்கு ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் பூர்த்தி செய்கிறாள்


அதற்கான தருணம்  வந்தது, மனதெல்லாம் பூரிப்புடன் சீக்கிரமாகவே படுக்கைக்கு சென்றால் அந்த பதினெட்டு வயது இளம் பெண் உண்மையிலேயே கனவில் தேவதை வந்தது

இப்ப இருவருக்கும் நடந்த உரையாடல்:

 
தேவதை:  பெண்ணே, கடந்த நான்கு ஆண்டுகளாக தொடந்து விடாமல் என்னை பிராத்தனை செய்தாய் மிக்க மகிழ்ச்சி


நான் உனக்கு மூன்று வரம் தருகிறேன்... கேள் உன் விருப்பபடி என்ன வேனுமினாலும்  ஆனா ஒரு நிபந்தனை

பெண் : நிபந்தனையா?!.... என்ன அது.


தேவதை:  உனக்கு பாய்பிரண்டு இருக்கா?

பெண் : ஆமா


தேவதை: பெண்ணே நீ பிராத்தனை செய்யும் பொது அவன் உனக்காக காத்திருந்தான் நேரத்தை தியாகம் செய்துள்ளான்..... 
ஆகையால்..... அதே நேரத்தில் அவனுக்கு இந்த மாதிரி வரம் பத்தி எதுவும் தெரியாது இருந்தாலும் நீ என்னவெல்லாம்  வரமாக  கேட்பாயோ உன்னில்  இருந்து பத்து மடங்கு அவனுக்கும்  போய்  சேரும் இதை நீ ஏற்றுகொண்டால் உன்னுடைய முதல் வரத்தை நீ கேட்கலாம்பெண் : ( சிறிது நேர சிந்தனைக்கு பின்) சரி தேவதை ஒப்பு கொள்கிறேன்


பெண் : முதல் வரமாக என்னை இவ் உலகத்திலே உள்ள பணக்காரர்களை விட பத்து மடங்கு  பணக்காரியாக ஆக்கவும் 

தேவதை: ஆனா, உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக ....

பெண் :பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியே

பெண் : இரண்டாவது இவ் உலகிலேயே உள்ள அழகியை விட நூறு மடங்கு அழகியாகனும்   


தேவதை: ஆனா , உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு அழகான பையனாகி விடுவானே

பெண் : பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியேதேவதை: இப்ப கடைசியான வரம்.... கேள்

பெண் : தேவதையே எனக்கு மிதமான  இதய வலியை கொடு 

தேவதை: என்ன  உண்மையாகவேவா 

பெண் : ஆமாம் உண்மையாகவே

 தேவதை: சரி உன் விருப்பபடியே...

சிந்திக்கவும்

பாத்திங்களா....அந்த பையனின் நிலைமையோ பாவம் இதயவலி வந்து பரிதாபமாக.......................

ஆனா 

பதினெட்டு வயது இளம் பெண்ணோ 
மிதமான  இதயவலியுடன் பிழைத்துக்கொண்டாள் ஆக அவள் தான் உலகிலேயே அழகியும் பணக்காரியுமாக...


இக் கதையில் இருந்து தெரிந்து கொள்வது என்னான்னா

பெண்கள் புத்திசாலிகள் ஆண்களை விட மிகவும் தெளிவான புத்திசாலிகள் பசங்களே உஷார்


இதுக்கு மேல பெண்கள் படிக்க வேண்டாம்


ஆண்கள் மட்டும் தொடரவும்


நண்பர்களே கவலைபடாதீர்கள் நீங்க நினைத்தமாதிரி எதுவும் நடக்கல 

உண்மையிலே என்ன நடந்ததுன்னா


அந்த பெண்ணின் காதலனுக்கு மிதமான இதயவலி பத்து முறை  வந்தது ஆகையால் அந்த பெண்ணை விட பத்து மடங்கு காலம் உலகிலேயே ஆண் அழகனாகவும்  பணக்காரனாகவும் வாழ்ந்தான்.இக் கதை மூலம், ஆக கவலைபடவேண்டாம் உங்களை விட உங்க கேர்ள் பிரெண்ட் புத்திசாலி.................
ஹலோ அதான் நான் அங்கேயே சொன்னேன்ல பெண்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று (அவ்வ்வ்வ்வ்)

மனைவியை சமாளிப்பது எப்புடி?

அப்படின்னு கூகுளே தேடினாலும், தேடிய விடை அப்புடிதேன் வருது

நல்வரவு, நாங்களும் அதை தான் தேடுகிறோம்

எப்புடி ஹி ஹி ஹி ஹி ......வர்ர்ர்ட்டா

19 comments:

 1. பத்து மடங்கு தானா..?

  ReplyDelete
 2. பிறந்த நாள் பரிசு அருமை....

  ReplyDelete
 3. பெண் புத்தி எப்பொழுதுமே
  பின் (கூர்மையான) புத்திதான்
  என்பதை உணர்ந்தால் சரிதான்.

  அடுத்து...
  மனைவியைச் சமாளிக்க வழி தெரியலையா?
  சிம்பிள் வழி சொல்லவா...?
  அவள் வழிக்கே நீங்களும் சென்று விடுங்கள்.
  இதுக்கெல்லாம் கூகுளில் தேடனுமா.. முத்தரசு? உங்கள் மனைவி சொல்லித்தர வில்லையா?)

  ReplyDelete
 4. நீங்க வர வேணான்னு சொன்னா தான் மீறி வருவாங்க

  ReplyDelete
  Replies
  1. பெண்களின் அகராதியில "வராத"னு சொன்ன "வா"னு அர்த்தம்.

   நண்பரே! உங்களுக்கு பெண் தோழிகளே இல்லையோ?

   Delete
 5. ஒருவேளை பிராத்தனை உண்மையாக இருக்குமோ...? ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. ஏன் சார்? உங்களுக்கு அடிக்கடி இதயவலி வருதோ?

   Delete
 6. தங்களின் இந்த பதிவு மிக மிக அருமை. மேலும் வளர வாழ்த்துக்கள். by: 99likes

  ReplyDelete
 7. வித்தியாசமான கதை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 8. மிகவும் ரசித்தேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. ஆமா வருவோம்ல...

  ReplyDelete
 10. அருமை தான் இருந்தாலும் பெண்கள் பெண்கள் தான் ஆண்கள்
  ஆண்கள் தான்

  ReplyDelete
 11. இதெல்லாம் உண்மையிலேயே கொடுமை பா. பாவம் பெண்கள்.

  ஆனால் பகிர்வு ரசிக்கும்படியாக இருந்தது. மிகவும் அருமை.

  ReplyDelete
 12. பதிவு மிக மிக அருமை

  ReplyDelete
 13. பாவம்,3வது கேள்விக்கு அந்த தேவதைக்கே இதய வலி வந்திருக்கும்...

  ReplyDelete
 14. ஹா ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 15. நல்ல கற்பனை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...