நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, October 23, 2011

சர்வாதிகார மன்மோகன் அரசு- ஜெயலலிதா

தமிழக அரசுக்கு தேவையான நிதியினை விடுவிக்காத மத்திய அரசினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
நேற்று புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சிலில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பாராமுகத்தைக் குறிப்பிட்டு, மத்திய அரசு ஜனநாயக விரோதமாக நடக்கிறது, இது ஒரு சர்வாதிகார அரசு என்று குற்றம் சாட்டினார்.

இந்த தேசிய வளர்ச்சி கவுன்சிலில் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். நாட்டின் வளர்ச்சியில், சரிவிகித சமான நிலையினை எட்டுவதற்கான கொள்கைகளை வரைவு செய்யும் முக்கியப் பணியினை இந்த கவுன்சில்தான் மேற்கொள்கிறது. இந்தக் குழுவின் கூட்டமானது, எந்தவிதத்திலும் பயனற்ற, சம்பிரதாயமான ஒரு கூட்டம்தான் என்று ஜெயலலிதா கூறினார்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது என்று கடுமையாகச் சாடினார். இதற்கு சான்றாக, மத்திய ஆளும் கூட்டணியின் மிக முக்கிய கூட்டணிக் கட்சியான திரிணமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்துக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை எடுத்துக் கூறினார் ஜெயலலிதா. இவை தமிழ்நாட்டுக்கு மறுக்கப்படுவதன் காரணத்தையும் வினவினார்.

ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படம்

தமிழ்ப் படங்களின் வசூலையே மிஞ்சும் அளவுக்கு ஆங்கிலப் படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்துகொண்டு வருகிறது. அதன் விளைவாக ஜுராஸிக் பார் என தொடங்கி அவதார் என்று அத்தனை ஆங்கிலப்படங்களும் தமிழ்ப் பேசுகின்றன. இந்த நிலையை மாற்றி ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படங்களை நாம் அவர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜேஷ் கண்ணா.

டீலா நோ டீலா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா, இயக்கும் முதல் படம் 'பெருமான்'. இந்த படத்தின் துணை தலைப்பாக தி ரஜினிகாந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த படத்திற்கும் ரஜினிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம். சொல்லப்போனால் ரஜினிதான் இந்த படத்தின் ஹீரோவாம். இதை ரஜினியிடம் கூறி அவருடைய பெயரை பயன்படுத்த அவரிடம் அனுமதியிம் பெற்ற பின்புதான் இந்த வார்த்தையை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். அது சரி, ரஜினிக்கும் இந்த படத்திற்கும் என்ன தொடர்பு என்றால், அதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். என்று மற்ற இயக்குநர்களைப் போலவே பதிலளித்தார் ராஜேஷ்.

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இப்படத்தை வெளியிடப்போகிறார்கள். ஆங்கிலத்தில் 'சிக்ஸ் மில்லியன் டாலர்' என்ற தலைப்பில் பல நாடுகளில் இப்படம் வெளியாகப்போகிறது. எதற்கு இந்த முயற்சி என்று இயக்குநரிடம் கேட்டால், "எத்தனை நாள் தான் தமிழ்ப் பேசும் ஆங்கிலப் படங்களை நாம் பார்த்துகொண்டிருப்பது. ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படங்களை அவர்களுக்கு காட்டுவோம் என்ற எண்ணத்தில்தான் இந்த முயற்சி. இது ஆங்கிலப் படம் என்பதற்காக, கிராமருடன் கூடிய ஆங்கிலத்தில் யாரும் பேச மாட்டார்கள். தமிழ்நாட்டில் இளைஞர்கள் எப்படி ஆங்கிலம் பேசுவார்களோ அதே முறையில் தான் இருக்கும். மேலும் இதில் ஐந்து ஆறு காட்சிகளில் தமிழிலும் பேசுவார்கள். பொதுவாக ஆட்டோ டிரைவர், தெருவில் இட்லி விற்கும் பாட்டி போன்றோர்கள் தமிழில்தான் பேசுவார்கள் அதை அப்படியே ஆங்கிலப் படத்திலும் இணைத்திருக்கிறோம். அவர்களுக்கும், நமக்கும் இடையே கம்யூனிகேசனை வலுப்படுத்த இது உதவும்.

தமிழகத்தில் உருவான ஆங்கிலப் படமாக இருந்தாலும், ஆங்கிலப் படங்களில் உள்ள விறுவிறுப்பு இப்படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை இருக்கும். அதே சமயம் கமர்ஷியல் ஃபார்மூலாவில் ஒரு தரமான படமாகவும் ரசிகர்களை திருப்தி படுத்தும்." என்று கூறுகிறார்.

இப்படத்திற்காக 'பிம்பிளிக்கா பிளாப்பி' என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு புரோமோசன் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் அந்த பாடலை படமாக்கியிருக்கும் இயக்குநர் படத்தையும் அப்படித்தான் இயக்கியிருப்பார் என்று நம்பலாம்.

வெற்றி தேடித் தந்தவர்களுக்கு - ஜெ. ரகசிய திட்டம்

உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அரசின் நியமன பதவிகளை வழங்க, முதல்வர் முடிவு செய்துள்ளார்.முதல்கட்டமாக, மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிக்கான நபர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான நபர்களின் பெயர்கள், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதையடுத்து, தமிழக அரசால் நியமனம் செய்யப்பட உள்ள கோவில் அறங்காவலர் குழு பதவி, வணிகர் நல வாரியம் உட்பட அரசின், 32 வாரியங்களின் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை வெளியிட்டு, தீபாவளி பரிசு வழங்க முடிவு செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 38 ஆயிரத்து 421 கோவில்களின் அறங்காவலர்கள் குழு பதவிகளுக்கான பட்டியல் முதலில் வெளியாகிறது.தொடர்ந்து, தமிழ்நாடு முதலீட்டுக் கழகம், சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சி), சமூக நல வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உட்பட, அரசின் 31 கழகங்களுக்கு, தலைவர் உட்பட மற்ற பதவிகளுக்கான நபர்களின் பட்டியல் வெளியாக உள்ளது. வணிகர் நல வாரியம், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம், ஆடு வளர்ப்போர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு நல வாரியங்களுக்கான நியமன பதவிகளுக்கான நபர்களின் பட்டியலும், இந்த வாரத்தில் வெளியாக உள்ளது.

எம்.ஜி.ஆர்., விசுவாசிகள், இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை, ஜெயலலிதா பேரவை ஆகிய அமைப்புகளில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.இது குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது: இந்த பதவிகளுக்கு மாவட்ட செயலர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள பட்டியல், உளவுத்துறை மூலம் தணிக்கை செய்யப்பட்டு, முதல்வரின் பார்வைக்கு சென்று விட்டது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு முன், நியமன பதவிகளுக்கான பட்டியல் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.