நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, September 26, 2012

ஏனப்பு, அது ஏன்னு உனக்கு தெரியுமா

வணக்கம்
வாழ்க்கையில் சில சுவராஜ்யமான விடயங்கள்

எதிர்பாரா சமயத்தில் உங்களை பற்றி ஒருவர் இன்னொருவரிடம் நல்லவிதமாக சொன்னதாக கேள்விப்படும் போது

தூக்கத்தில்  இருந்து   விழித்து ஒ.. இன்னும் விடிய நேரமிருக்கா என்று தூங்குவது

முதல் நேசம் கொள்வது 

முதல் முத்தம் கொடுப்பது /பெறுவது 

புதிய நண்பர்கள் பெறுவதும்  மற்றும் பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது.

பாத்ரூமில் பாடுவது

அழகான  கனவுகள் அசைபோடுவது

உச்சி வெயிலில் ஐஸ் கிரீம்  சாப்பிடுவது

குளிர்ந்த அந்த காலை பொழுதில் உங்கள் நேசத்துடன் சேர்ந்து காப்பி பருகுவது

உங்களுக்கு பிடித்தவருடன் கைகோர்த்து நடப்பது

சூரியன் மறைவதை பார்ப்பது 

மனதுக்கு பிடித்தவரின் தோளிலோ /மடியிலோ தலை சாய்ந்து படுப்பது 

நம்மை பிரிந்து ஒரு உள்ளம் ஏங்குது  என தெரியும் போது 

பிறந்த குழந்தையை தடவுவது, முத்தம் கொடுப்பது 

விழும் கண்ணீர் துளி   ஆறுதலுக்கு ஆதரவுக்கோ கட்டி தழுவும் போது. 


இதுல ஒரு நுணுக்கம் எல்லாமே 'து' வில் முடியுது. 
(என்னா ஒரு கண்டுபுடிப்புடா)

(இன்னும் எதாவது இருந்தா சொல்லுங்க இத்துடன் சேர்த்துடுவோம்)
ஸ்டார் பிஷ்க்கு மூளை கிடையாதாம்.


என்னமோ உனக்கு மூளை இருக்குற மாதிரி பில்டப்பை பாரு
  மைன்ட் வாய்ஸ்  கேக்குதுப்பா கேக்குது
 மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

பூங்காக்களில் பார்க்கலாம் இப்படி ராணுவவீரன் / அரசன்  சுமந்தபடி குதிரை சிலைகளை, அதில் உள்ள நுணுக்கமான ஓன்று:

குதிரை இரண்டு கால்களை தூக்கியவாறு சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் போரில் இறந்ததாக அர்த்தம்.

குதிரை ஒரு  காலை தூக்கியவாறு சிலை இருந்தால்
சிப்பாய் / அரசன் போரில் காயம் பட்டு சிரமப்பட்டு இறந்தான்

குதிரை நான்கு கால்களின் பாதங்களும் தரையில் ஊன்றி  சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் இயற்கை மரணம் அடைந்தார்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
 தலைக்கி  குளிச்சி, தலை சீவி  ஜாக்கெட் போட்டு, தாவணியோ சேலையோ கலாச்சாரம்மா உடை அணிந்து, கண்ணுக்கு மை இட்டு, பூ வைச்சி,  பவ்டர் பூசி,
பொட்டும்  வைச்சி, உதட்டுக்கு சாயம் பூசி ,  அலங்காரம் பண்ணி நகை போட்டு நெத்திசூடி அழகு படுத்தி....தேவதை  போல சிங்காரிச்சி.........

கடைசியிலே கொஞ்சூண்டு முன் தலைமுடியை எடுத்து முகத்துல வுட்டுகுறாங்களே...

ஏம்பு அது ஏன்னு உனக்கு  தெரியும்..

அத  தான் சித்தப்பு  பல வருசமா மோட்டு வலய  பாத்து 

ஒசிச்சுட்டு இருக்கேன் ஒரு மண்ணும் புரியல..  

ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா??Monday, September 17, 2012

பதிவுலகத்துக்கு குட் பை

வணக்கம்  

போதும்டா,  பொழப்பத்து போயா பதிவுலகத்துக்கு  வந்தோம்... எம்புட்டு பொலப்புக்கும் இடையில் அப்ப அப்ப   தெரிஞ்சவங்க தளத்துக்கும், புதுசா வர்றவங்க தளத்துக்கும் போய்   முடிஞ்ச வரையில் 
அவுக பதிவுகளை படிச்சிட்டு...படிச்சிட்டு.....

( இருய்யா வாறன்)

நம்மகிட்ட உள்ள கெட்ட பழக்கம்  அட எங்க போனாலும் எந்த பதிவை  படிச்சாலும் கருத்து, பின்னோட்டம், மறுமொழி ( யோவ் தமிழ்ல சொல்லும்வோய்)
ஆங்.. அதாங்க கமண்டு போட்டாதான்  சமாதானம் அடையுது  மனசு.. 

சரி இதுல என்ன பிரச்னை நல்ல விடயம் தானே.....

அதுல தான் பிரச்சனையே....

நம்ம போடுற கமண்டு ஸ்பேம் பாக்ஸ்சில்  போய் ஒளிஞ்சுக்குது அதை அந்த 
ப்ளாக்கின் உடமஸ்தன்  தான்  வெளியவுடனும்.
(ஒ..... பப்ளிக்குட்டி பண்ணனும்)

இது சம்மந்தமா  இப்படியும் ஒரு பதிவர்     அப்படின்னு  ஒரு பதிவும்  போட்டாச்சிங்க....சரி மேட்டர் முடிச்சதுன்னு பார்த்தா.....

முடியல...முடியல ராசா முடியல....


பின்ன என்னங்க, ஒரு பதிவுல ஒரு கமண்டு  போட்டேன் அதை காணோம்.......அவுக மெயில் ஐடியும் இல்ல அதனால,

இன்னொரு கமண்டு இப்படி போட்டேன்

//என்
கமண்டை
காணோம்//

அதுக்கு அவுக பதில் சொன்னாக :  
//ஹிஹி....போடாத கமென்ட் எங்கிருந்து வரும்....//


ஸ்பேம் அப்படின்னா  என்னான்னு தெரியல  சர்தான்.....

இது முழுக்க முழுக்க கூகிள் பிராபளம் தான்.... எப்படின்னா, யாம் இடும்  கமண்டுகள்  பிராப்ள ச்சே  பிரபல பதிவர்களுக்கு மட்டும் ஸ்பேம்  போறதுல்ல.... பிராப்ள ச்சே  பிரபல பதிவராக ஆகி கொண்டு இருப்பவர்களுக்கும்,  பிரபலமா நட்ட நடு சென்டர்ல இருப்பவங்களும், புதியவர்களுக்கும்   மட்டும்  அப்படி  நடக்குதுங்க.

சோ,... அதனால (கொய்யால ரெண்டும் ஒன்னு தான்)


பதிவுலகத்துக்கு குட் பை (ஒழிஞ்சதுடா  ஒரு தொல்லை) .....


அல்லோ இன்னும்  முடிக்கல...... 


அதுக்குள்ளே   என்ன்ன்னா ஒரு சந்தோசம் பக்கி பய புள்ளைக்கி...     ம்.....

குட் பை ஏன்  சொல்லணும் யோசிச்சேன் நின்னு யோசிச்சேன் படுத்து யோசிச்சேன் நடந்து யோசிச்சேன்....இன்னும் பலவாறும் யோசிச்சேன்...


வரும் காலம் ச்சே எதிர்காலத்துல ஒரு எழுத்தாளர (இக்கும் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல) தமிழ்  கூறும்  நல்லுலகம்  இழந்து  வாடுமேன்னு.....  எண்ணத்தை மாத்திகிட்டேன்...


(அப்ப போகலையா...இன்னும் உசிர வாங்கனுமுனு  முடிவு பண்ணிட்ட...
கர்ர்ர்ரர்த்து) 

யோவ் மானிட்டரை தொடங்கைய்யா..இனிமேல் எந்த தளத்துக்கு போனாலும் எந்த பதிவை படித்தாலும், படித்து விட்டு எப்பவும் போல கெட்ட   பழக்கத்தை கைவிடாமல் தொடர முடிவு பண்ணீட்டேன். எப்பூடீ... (அப்ப இந்த மாதிரி இன்னும் பதிவு வரும்னு சொல்லாம சொல்ற... வெளங்கிடும்ல)

ஹே ஹே ஹே ஏங்.. கேரக்டரையே புரிஞ்சுக்கல.

எஸ் ஜூஸ் மீ    ஒரு விடயம்,...


ஒரு புத்தகம் போடலாமுன்னு இருக்கேன். புத்தகத்தின் தலைப்பு

'லோலாய்'  


சரி நம்ம கடைக்கு வந்துட்டு,,, ஸ்பெசல் ஐட்டம்:  வாங்க பாஸ்விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
சத்தியாமா தான் புள்ள நீ ஒரு ரவுண்டு வருவ நம்பு..


அட இது வேற ஆருமுல்ல  நம்ம சிலுக்கு இல்ல சிலுக்கு, சிலுக்குவோட வாழ்க்கை வரலாறை ஹிந்தி படத்துல எடுத்தாங்க அதுல சிலுக்கா  நடிச்ச  வித்யா பாலன்.....

என்னா  ஒரு ஹாப்பி லுக்கு....

கண்களில் சிரிப்பு என்பது இதுதானோ

 நம்ம கடைல ஜொள்ளு தூக்கலா இருக்காம்.. அப்படியா மக்கா'ஸ்??? ஙே.

 டிஸ்கி :
சமீபத்தில் பதிவுலகில் ஹிட்டுக்காக (அது என்ன ஹிட்டோ)என்னவெல்லாமோ  நடக்குது அவுக அவுகளுக்கு அவுக அவுக பிரச்னை என்ன நான் சொல்றது - எப்படி எல்லாம் சமாளிக்க  வேண்டி இருக்கு ஸ்...யபா..ஏதோ நம்மால முடிஞ்சது  ஹி  ஹி  ஹி...ஏம்பா நா சரியா தான் பேசுறேனா.

Monday, September 10, 2012

எப்படி எல்லாம் பதிவ தேத்துறாங்..

வணக்கம்


உன்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
உன்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
என்னை போல.


கண்ணில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில்  இடம் பிடித்த அனைத்தும் அருகில்  இருப்பதில்லை
இது தான் வாழ்க்கை.


நீ தேடும் போது  உன் அருகில் நான் இல்லை ஆனால்,
நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன்
உன் அன்பு நிஜம் என்றால்


மேலே படித்தவை எனக்கு வந்த  குறுஞ்செய்திகள் (SMS)... (எப்படி எல்லாம் பதிவ தேத்தற -அய்....தலைப்பு)


அலைக்கு குதிரையின்  வேகம்

குதிரைக்கு அலையின் வேகம்

ஒ...அலைக்குதிரையோ....
 முகநூலில் பெண் போடும் ஸ்டேடஸ்:

நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.

லைக் 91

கமெண்ட்:
 1. அவேசொம்
 2. அடுத்த வாட்டி நாம சேர்ந்து போலாம்
 3. என்னை விட்டு தனியாவா போன
 4. வாவ் - அருமையான அனுபவம்
 5. என்ன ஒரு அற்புதமான அனுபவம்

முகநூலில் ஆண்  போடும் ஸ்டேடஸ்:

நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.

லைக் 0

கமெண்ட்:
 1. இதே பொழப்ப போச்சுடா உனக்கு
 2. அதுக்கு நாங்க என்ன பண்றது
 3. ஓசில பயணம் அதையும் ஸ்டேடஸ் வேற போடுறீயா
 4. அடேய் நாதாரி பேசாம, அந்த பஸ்ஸில் கண்டக்டர் ஆயிடு.
 5. மவனே அப்படியே போயிடு..திரும்ப வராதே


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

சந்தோசமான வாழ்க்கைக்கு  ஏழு வழிகள்
 1. நேரம் தவறாமை
 2. எளிமை
 3. ஏமாத்த கூடாது
 4. எதிர்பார்ப்பை குறைக்கவும்
 5. கடின உழைப்பு
 6. எப்பவும் முகத்தில் புன்னகை
 7. நல்ல உறவுகள்/நட்புகளை உடைக்காதே  

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இதுக்கு எந்த மாதிரி கமன்டலாம்னு யோசிச்சேன்.....சேன்.

பிங்கி பிங்கி பாங்கி....
இதழோ  மொத்த வங்கி 
 கரு விழியில் மயங்கி 
சொல்ல வந்தேன்  தயங்கி..
பிங்கி பிங்கி பாங்கி

போடா மங்கி (மைன்ட் வாய்ஸ்...கேக்குதுப்பா)


Monday, September 3, 2012

மயக்கமா...கிறக்கமா...மடி சாயலாமா...

வணக்கம்
 கரப்பான் பூச்சி அதன் தலை இல்லாமல் 9 நாட்கள் வாழ முடியும்

சாப்பிட முடியாமலே மரணம் அடைகிறது 

சீட்டு விளையாடில் ஒவ்வொரு மன்னரும் உண்மையான வரலாற்றில் ஒரு அரசன் பிரதிநிதித்துவம்:

ஸ்பைடு : கிங் டேவிட்      -   கிளப் : அலெக்சாண்டர் தி கிரேட் 

ஆட்டின் : சார்ல்மனேயில்   -  டைமன்ட் : ஜூலியஸ் சீசர்

மனித இதயத்தில் உள்ள  தசைகள் பத்து  மீட்டர்  தூரத்துக்கு  காற்றில்  ரத்தத்தை பீச்சி அடிக்கும்  வலிமை கொண்டது.


கண்ணை திறந்து கொண்டு ஒருக்காலும் தும்ப முடியாது


நண்பன் ஒருவன் (நினைப்பு  ரொம்பவே ஸ்மார்ட்ன்னு) ஒரு நாள் சொன்னான்:

வெங்காயம் என்ற ஒன்றே  உணவு  வகையில்  கண்ணீர்  வரவைப்பது  என்று,.....


நா என்ன பண்ணுனேன் தெரியுமா?

தேங்காய  எடுத்து ஓங்கி முஞ்சுல எறிஞ்சேன்....ஹி ஹி கண்களில்  கண்ணீரு..    எப்பூடீ


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

ஆங்கில குடியேறிகள் ஆஸ்திரேலியா சென்ற போது

அவர்கள் மிக உயர்ந்த மற்றும் இதுவரை குதித்து கண்டிராத ஒரு வித்தியாசமான விலங்கை கவனித்தனர்

அவர்கள், உடல் மொழியை பயன்படுத்தி பழங்குடி மக்களிடம் கேட்டதற்கு,

பழங்குடி மக்களோ  kan ghu ru  என்று பதிலளித்தார்கள்..

அதி மேதாவியான ஆங்கலேயர் அது  கங்காரு என புரிந்து கொண்டு விட்டார்கள் நடை முறைக்கும் வந்து விட்டது


உண்மையில் சொல்ல வேண்டுமானால்  பழங்குடியினர்...  ஆங்கிலேயர்  கேட்டது  புரிய வில்லை என்று கூறி உள்ளனர் 
அதாவது "kan ghu ru" (நீங்கள் கேட்டது புரியவில்லை)விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

மயக்கம்மா......., இல்ல

 ஏன் இந்த கிறக்கம்மோ?


குறிப்பு: