நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, September 17, 2012

பதிவுலகத்துக்கு குட் பை

வணக்கம்  

போதும்டா,  பொழப்பத்து போயா பதிவுலகத்துக்கு  வந்தோம்... எம்புட்டு பொலப்புக்கும் இடையில் அப்ப அப்ப   தெரிஞ்சவங்க தளத்துக்கும், புதுசா வர்றவங்க தளத்துக்கும் போய்   முடிஞ்ச வரையில் 
அவுக பதிவுகளை படிச்சிட்டு...படிச்சிட்டு.....

( இருய்யா வாறன்)

நம்மகிட்ட உள்ள கெட்ட பழக்கம்  அட எங்க போனாலும் எந்த பதிவை  படிச்சாலும் கருத்து, பின்னோட்டம், மறுமொழி ( யோவ் தமிழ்ல சொல்லும்வோய்)
ஆங்.. அதாங்க கமண்டு போட்டாதான்  சமாதானம் அடையுது  மனசு.. 

சரி இதுல என்ன பிரச்னை நல்ல விடயம் தானே.....

அதுல தான் பிரச்சனையே....

நம்ம போடுற கமண்டு ஸ்பேம் பாக்ஸ்சில்  போய் ஒளிஞ்சுக்குது அதை அந்த 
ப்ளாக்கின் உடமஸ்தன்  தான்  வெளியவுடனும்.
(ஒ..... பப்ளிக்குட்டி பண்ணனும்)

இது சம்மந்தமா  இப்படியும் ஒரு பதிவர்     அப்படின்னு  ஒரு பதிவும்  போட்டாச்சிங்க....சரி மேட்டர் முடிச்சதுன்னு பார்த்தா.....

முடியல...முடியல ராசா முடியல....


பின்ன என்னங்க, ஒரு பதிவுல ஒரு கமண்டு  போட்டேன் அதை காணோம்.......அவுக மெயில் ஐடியும் இல்ல அதனால,

இன்னொரு கமண்டு இப்படி போட்டேன்

//என்
கமண்டை
காணோம்//

அதுக்கு அவுக பதில் சொன்னாக :  
//ஹிஹி....போடாத கமென்ட் எங்கிருந்து வரும்....//


ஸ்பேம் அப்படின்னா  என்னான்னு தெரியல  சர்தான்.....

இது முழுக்க முழுக்க கூகிள் பிராபளம் தான்.... எப்படின்னா, யாம் இடும்  கமண்டுகள்  பிராப்ள ச்சே  பிரபல பதிவர்களுக்கு மட்டும் ஸ்பேம்  போறதுல்ல.... பிராப்ள ச்சே  பிரபல பதிவராக ஆகி கொண்டு இருப்பவர்களுக்கும்,  பிரபலமா நட்ட நடு சென்டர்ல இருப்பவங்களும், புதியவர்களுக்கும்   மட்டும்  அப்படி  நடக்குதுங்க.

சோ,... அதனால (கொய்யால ரெண்டும் ஒன்னு தான்)


பதிவுலகத்துக்கு குட் பை (ஒழிஞ்சதுடா  ஒரு தொல்லை) .....


அல்லோ இன்னும்  முடிக்கல...... 


அதுக்குள்ளே   என்ன்ன்னா ஒரு சந்தோசம் பக்கி பய புள்ளைக்கி...     ம்.....

குட் பை ஏன்  சொல்லணும் யோசிச்சேன் நின்னு யோசிச்சேன் படுத்து யோசிச்சேன் நடந்து யோசிச்சேன்....இன்னும் பலவாறும் யோசிச்சேன்...


வரும் காலம் ச்சே எதிர்காலத்துல ஒரு எழுத்தாளர (இக்கும் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல) தமிழ்  கூறும்  நல்லுலகம்  இழந்து  வாடுமேன்னு.....  எண்ணத்தை மாத்திகிட்டேன்...


(அப்ப போகலையா...இன்னும் உசிர வாங்கனுமுனு  முடிவு பண்ணிட்ட...
கர்ர்ர்ரர்த்து) 

யோவ் மானிட்டரை தொடங்கைய்யா..இனிமேல் எந்த தளத்துக்கு போனாலும் எந்த பதிவை படித்தாலும், படித்து விட்டு எப்பவும் போல கெட்ட   பழக்கத்தை கைவிடாமல் தொடர முடிவு பண்ணீட்டேன். எப்பூடீ... (அப்ப இந்த மாதிரி இன்னும் பதிவு வரும்னு சொல்லாம சொல்ற... வெளங்கிடும்ல)

ஹே ஹே ஹே ஏங்.. கேரக்டரையே புரிஞ்சுக்கல.

எஸ் ஜூஸ் மீ    ஒரு விடயம்,...


ஒரு புத்தகம் போடலாமுன்னு இருக்கேன். புத்தகத்தின் தலைப்பு

'லோலாய்'  


சரி நம்ம கடைக்கு வந்துட்டு,,, ஸ்பெசல் ஐட்டம்:  வாங்க பாஸ்விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
சத்தியாமா தான் புள்ள நீ ஒரு ரவுண்டு வருவ நம்பு..


அட இது வேற ஆருமுல்ல  நம்ம சிலுக்கு இல்ல சிலுக்கு, சிலுக்குவோட வாழ்க்கை வரலாறை ஹிந்தி படத்துல எடுத்தாங்க அதுல சிலுக்கா  நடிச்ச  வித்யா பாலன்.....

என்னா  ஒரு ஹாப்பி லுக்கு....

கண்களில் சிரிப்பு என்பது இதுதானோ

 நம்ம கடைல ஜொள்ளு தூக்கலா இருக்காம்.. அப்படியா மக்கா'ஸ்??? ஙே.

 டிஸ்கி :
சமீபத்தில் பதிவுலகில் ஹிட்டுக்காக (அது என்ன ஹிட்டோ)என்னவெல்லாமோ  நடக்குது அவுக அவுகளுக்கு அவுக அவுக பிரச்னை என்ன நான் சொல்றது - எப்படி எல்லாம் சமாளிக்க  வேண்டி இருக்கு ஸ்...யபா..ஏதோ நம்மால முடிஞ்சது  ஹி  ஹி  ஹி...ஏம்பா நா சரியா தான் பேசுறேனா.

51 comments:

 1. நான் தாங்கள் ஒரு முறை
  ஈமெயிலில் தகவல் சொன்னது முதல்
  தவறாமல் ஒரு நாளில் ஒருமுறஒ
  ஸ்பேர்ம் ஏதும் உள்ளதா என பார்த்துவிடுகிறேன்
  நல்லவேளை நீங்க்கள் நிஜமாக டாடா சொல்லவில்லை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நம்ம வடிவேல் மாதிரி சொல்லனும்னா
  ஸ்ஸ்ஸ் ப்பா கண்ண கட்டுது முடியல சாமி

  நான் என்னமோ எதோ என்று ஓடிபிச்சு வலைக்கு வந்தா
  .
  .
  .
  .
  ?
  இதுதான் கோயம்பத்தூர் குசும்பா தோழரே

  எப்படியோ காலையிலேயே வயிறு குலுங்க சிரிக்க வச்சுடீங்கோ ம் (:

  ReplyDelete
  Replies
  1. காலையீலேயே....அது அதுதான் நம்ம பஜ்ஜியின் ஸ்டைல்

   Delete
 3. குட் பை தான் சொல்றீங்கன்னு காரணம் கேட்டு தேத்தி திரும்பிக் கொண்டு வந்திடலாம்னு பார்த்தா ஏமாத்திட்டீங்களே. ஃபீல்டுல தான் இருக்கீங்க வாழ்த்துக்கள். நீங்க சொன்னதிலே இருந்து ஸ்பேம் பாக்ஸை பார்த்துக்கிட்டேதான் இருக்கேன் அப்பப்ப கமெண்ட் அங்கேதான் மாட்டிக்குது. நன்றி

  ReplyDelete
 4. தலைப்பு..ம்க்கும். நான் கூட பயந்துட்டேன். தொடர்ந்து கலகலப்பு ஊட்டி வாருங்கள் சகோ.

  ReplyDelete
 5. தொடர்கிறேன் சார்... :-)

  ReplyDelete
 6. தலைப்பைப் பார்த்துட்டு பாராட்டலாம்னு வந்தேன்.
  ஏமாத்திட்டீங்களே..
  அடப் போங்கப்பா.

  ReplyDelete
 7. பதிவுலகை விட்டு போகலையா.....? சே.....ஏமாற்றம்!

  ReplyDelete
 8. யோவ் ஆஃப் அடிச்சிட்டு எழுதுனியா...இல்ல ஆப்பு அடிச்சிட்டாங்கன்னு எழுதினியா...ராசுகோலு...

  ReplyDelete
  Replies
  1. ஆஃப்பும் சரி ஆப்பும் சரி நானா தேடி போனாதான் மாம்ஸ்

   Delete
 9. நல்லவேளை பதிவுலகை விட்டு போவதில்லை என ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்...இல்லையெனில் பவர் ஸ்டார் தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி மீண்டும் உங்களை எழுத வைத்து இருப்போம்.........அவ்வ்வ்வவ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. யப்பா நமக்காக ஆர்ப்பாட்டம் பண்ண கூட...தமிழ் உலகில்.....நண்பன்(டா)

   Delete
 10. அட...வயித்தில பால வார்த்தீங்க போங்க... அப்பப்போ நீங்க போடுற கமென்ட வச்சிதான் நான் பொழைப்ப ஓட்டிகிட்டு இருக்கேன்...அதான பார்த்தேன்.ஹிட்ஸ்,ராங்கிங் பத்தி கண்டிப்பா உங்களுக்கு கவலை இருக்காதுன்னு நெனைக்கிறேன்.ஏன்னா திரட்டில இணைக்காத (எனக்கு தெரிந்து) ஒரே பதிவர் நீங்கதான்....நோ டென்சன்... பதிவு எழுதறத ஜாலியான விசயமா எடுத்துப்போம்....

  ReplyDelete
  Replies
  1. //ஹிட்ஸ்,ராங்கிங் பத்தி கண்டிப்பா உங்களுக்கு கவலை இருக்காதுன்னு நெனைக்கிறேன்//

   எப்பவுமே கிடையாது பாஸ்.

   //ஏன்னா திரட்டில இணைக்காத (எனக்கு தெரிந்து) ஒரே பதிவர் நீங்கதான்....//

   மன்னிக்கணும் பாஸ்

   இது வரை நம்ம பதிவுகள் 295 அதில் திரட்டிகளில் இணைத்தது இதுவரை பின் வருமாறு:

   இன்டலி - 98

   udanz - 60

   தமிழ்வெளி -

   Hotlinksin - 39


   மனசாட்சி பாஸ் மனசாட்சி

   Delete
 11. நீங்கள் எப்போதோ சொன்னது போல் ஸ்பேம் பாக்ஸை தினமும் செக் செய்வதுண்டு...

  ReplyDelete
 12. அண்ணாச்சி பதிவு அருமை. அழகான சொல்லாடல்கள். ஆகச்சிறந்த கருத்துக்கள்.
  இந்த பதிவின் தாக்கத்தில் தங்களுக்கு ஃபாலோவர் ஆகிவிட்டேன். நன்றி. :-)))

  ReplyDelete
  Replies
  1. பார்ரா, நம்ம கடை பஜ்ஜி அதன் சுவை பட்டிகாட்டான் விரும்பிட்டாரே - நன்றி நண்பா

   Delete
 13. தல "பட்டிக்காட்டான் ஜெய்" சொல்வது போல்.... அருமையான பதிவு மனப்பாடம் செய்துகொள்கிறேன்! :D :D :D

  ReplyDelete
  Replies
  1. எதிர்கால சந்ததிக்கு யூஸ் ஆகும்ன்னு காப்பி எடுத்து வெச்சுக்கிட்டேன்.

   Delete
  2. ஆமா வரலாறு - மனபாடம் பண்ணிக்கோங்க காலத்தின் கட்டாயம்

   Delete
  3. நல்ல காரியம் பண்ணுனீங்க சகோ - பாராட்டுக்கள்

   Delete
 14. கண்கலங்க வைச்சிட்டிங்க உங்களை போன்ற மேதைகள் பதிவுலகுற்கு தேவை.!!

  ReplyDelete
  Replies
  1. யோவ் மாமா இதானே வோனங்கிறது

   Delete
 15. வழக்கமா உங்க கமெண்ட் எனக்கு ஸ்பேம் பாக்ஸ்ல விழும் ஒரு வாரமா பாக்ஸ் காலி. இதில எனக்கென்ன ஆச்சரியம்னா ? இன்னிக்கு நீங்க போட்ட கமெண்ட் கரெக்டா கரெக்டான பாக்ஸ்ல விழுந்தது தான்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல செய்தி சொன்னீர்கள் நண்பா

   Delete
 16. “மனசாட்சி“... நீங்கள் எனக்கு கமண்ட் பேட்டு இருப்பிங்களான்னு
  சந்தேகத்துல கருத்து பாக்ஸ்சையும் ஸ்பேன் பாக்சையும் நான் அடிக்கடி திறந்து பார்க்கிறது உண்டு....
  எனக்கு ஏமாற்றம் தான்.
  பரவாயில்லை.... நமக்கு அவ்வ்வ்வளோ தான் .

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கணும்... உங்களுக்கு வலைபூ இருப்பதே எனக்கு தெரியாது நண்பரே - உங்கள் பெயரை சுட்டினால் (ப்ரோபைல்) திறப்பதில்லை குழம்பி போனதுண்டு இன்று உங்கள் பெயரை சுட்டினேன் G+ போனது அப்படியே உங்கள் வலைபூ பக்கம்... பிடித்து விட்டேன். தங்களுக்கு ஃபாலோவர் ஆகிவிட்டேன். நன்றி.

   Delete
 17. தலைப்ப பார்த்துட்டு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்........
  தொடர்ந்து எழுதுங்க... டைம்பாஸ்க்கு படிப்போம்ல

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே டைம் பாஸ்க்கு ஆவது படிக்கிறீங்களே சந்தோசம்

   Delete
 18. எங்கலெல்லாம் விட்டுட்டு எங்கேயோ ஓடி போகப் போறிங்கன்னு சந்தோஷமா ஓடிவந்தா....பழையபடி ஸ்பாம் பாக்ஸ் பார்க்க வச்சிடீங்களே.....

  ReplyDelete
  Replies
  1. என்னது ஓடி போவதா ஹா ஹா ஹா - பாருங்கள் ஸ்பேம் பாக்ஸ் அடிக்கடி

   Delete
 19. //வரும் காலம் ச்சே எதிர்காலத்துல ஒரு எழுத்தாளர (இக்கும் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல) தமிழ் கூறும் நல்லுலகம் இழந்து வாடுமேன்னு..... //

  ஆமாண்ணே நாமெல்லாம் ஒதுங்கிட்டா இந்த பதிவுலகை யாரு காப்பாதுரதாம்.. அதை விடுங்கண்ணே இந்த இலங்கைய யாரு காப்பாதுரதாம்.. இந்தியாவ யாரு காப்பாதுரதாம்.. அதையும் விடுங்கண்ணே இந்த உலகத்த யாரு காப்பாதுரதாம்..

  நாம எழுதணும்னே..

  ReplyDelete
  Replies
  1. >>>இந்தியாவ யாரு காப்பாதுரதாம்<<<

   யோவ் ஹாரி விஜயகாந்த், அர்ஜீன் எல்லாம் எதுக்கு இருக்காங்களாம்? :D

   Delete
  2. ஹாரி தம்பி ராசா நா என்ன சொல்லிட்டேன்னு இம்புட்டு உணர்ச்சி வசப்பட்டு வேணாம் தம்பி வோணாம்.

   Delete
  3. யோவ் வரலாறு - அந்த பட்டியலில் எங்கள் பவர் ஸ்டார் இல்லாததை வன்கண்டனங்கள்

   Delete
  4. //யோவ் ஹாரி விஜயகாந்த், அர்ஜீன் எல்லாம் எதுக்கு இருக்காங்களாம்? ://

   இதில் டுப்பாக்கி டாகுடர் விஜய் பெயர் இல்லாததற்கு எனது வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

   Delete
 20. நான் ஸ்பெம் பாக்ஸ் போவதே நீங்கள் போட்ட கமெண்ட்ஸ் ஏதாவது இருந்தா ப்ளிஸ் பண்ணதான்

  ReplyDelete
 21. என்ன மாம்ஸ் இப்படி ஒரு தலைப்ப குடுத்து பயபடுதிடிங்களே !

  ReplyDelete
  Replies
  1. என்னாது பயமா அதுவும் நீங்க - இந்த லொள்ளு தானே வொனம்கிறது

   Delete
 22. என்னா பாஸ் சந்தோஷமான முடிவ சொல்லிட்டு திடீர்ன்னு முண்ட அட சீ குண்ட தூக்கிப் போட்டுட்டீங்க.... ஸ்பேம் மேட்டரின்னமும் முடியாமத்தான் இருகில்ல...........

  ReplyDelete
  Replies
  1. வாங்க குருவியாரே

   அட இன்னும் முடியல போங்க

   Delete
 23. நாங்க எல்லாம் இளகின மனசுக்காரங்க பா இப்படி தலைப்ப வச்சி கதைய முடிச்சிடாதிங்க...என்னமா யோசிக்கிறாங்க பா.

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்களா சரிங்க

   யோசிகவெல்லாம் இல்லைங்கோ அதுவா வருது

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...