நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, August 13, 2012

அவளது பார்வை

வணக்கம்


மனசாட்சியின் பஜ்ஜிகடையில், பஜ்ஜியை (பதிவுகள்)  சுவைத்து    விரும்புவோர்கள்   இதுவரையில் 100..

ஆரம்பித்து வைத்த முதல்வர்   எங்கள்  சித்தப்பு சி.பி.செந்தில் குமார் (அட்ரா சக்க) அவர்களுக்கும், அதை தொடர்ந்து 98 உறுப்பினர்கள்  அனைவருக்கும்   மற்றும் 100 வது உறுப்பினராக  இணைந்த மாணவி சிவரஞ்சனி சதாசிவம் (சிவரஞ்சனி சதாசிவம்) அவர்களுக்கும் கோடி நன்றிகள்.

ஒரு சிறப்பான ஆச்சரியம் என்னவென்றால்....உங்களுக்கே தெரியும் மனசாட்சிக்கு  கோவை தான்  பூர்வீகம்.  மனசாட்சியின் பஜ்ஜியை (பதிவு) விரும்புவோர் வரிசையில் முதல் மற்றும் 100 வது  இருவரும் அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் (ஈரோடு)  மிக்க மகிழ்ச்சி.

இது வரை நம்ம கடைக்கு வந்து சுவைத்து சென்றவர்கள் மற்றும் விரும்பி  சுவைத்து கொண்டு இருப்பவர்கள் - காரம், மணம், குணம், உப்பு, குறை, நிறைகளை பின்னூட்டங்களில் கூறி  செம்மை படுத்தும் அனைத்து நட்புகளுக்கும் கோடான கோடி நன்றிகளை மகிழ்ச்சியுடன்  இங்கே பதிவு செய்கிறது  மனசாட்சி.  எல்லாம் உங்கள் வரவாலே... ஆதரவாலே.


பொன்வண்டு:  ஊருக்குள்ள ஒரு வதந்தி தெரியுமா?

தவளை: கொய்யால, அதனால தானே நான் இங்கே வந்து தொங்கிட்டு இருக்கேன்.


எப்போதும் நினைவில் கொள்ளவும்

உங்களை ஒருவர் முட்டாள் ஆக்குகின்றார் எனில்

அவரது முன்னிலையில் சிரித்து விடுங்கள்
  
நிச்சயமாக, நீங்கள்  அவர் இல்லாத போது அழுவீர்கள்

ஏனெனில்,

அந்த முட்டாள்கள் நமது உண்மையான நண்பர்கள்



மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல  

அவளது பார்வை:

உலகின் மிக சரியான மனிதன் அவளுடைய தந்தை

உலகின் மிக தவறாக பயன்படுத்தபடுபவன் அவளுடைய சகோதரன்

உலகின் மிக அழகான மனிதர் அவளுடைய  மகன்

உலகத்திலேயே அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் அவளுடைய சகோதரியின்  கணவன்

உலகின் மிக நன்றி உள்ள, நம்பிக்கை உள்ள   மனிதன் அவளுடைய மரூமகன்

ஆனால், உலகின் மோசமான நடத்தை மற்றும்  மிகவும் சுயநலமான, இதயமற்ற, மொத்த இழுபறியா  மனிதன் அவளுடைய  கணவர்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

ஆடி மாசத்துல பிரிச்சி வச்சிபுடாங்கலேன்னு

எம்புட்டு சோகம், வருத்தம் பயபுள்ள முஞ்சில

ஏக்கத்துல்ல உர்ருன்னு........... அடி.....ஆத்தி....





Sunday, August 12, 2012

உங்களுக்கு தெரியுமா அஞ்சலி

வணக்கம்

இந்த பதிவுக்கான  செய்தி சேகரித்து எழுதி சில மாதங்களாகவே
டிராப்டில் இருந்தது இன்று நண்பர் மணிமாறன் (மனதில் உறுதி வேண்டும்)
அவர்களின் பதிவு வாசித்தேன,மிகவும் வேதனையாக இருந்தது மனமோ பாரமானது.

உங்களுக்கு தெரியுமா??

10% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு
மணிக்கட்டு, வெப்ப நோய்த்தாக்கம் போன்ற  நோய்கள் பாதிக்க பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

20% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்கள்  அவர்களது துறையை சார்ந்தவர்களேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்/விரும்புகிறார்கள். 

30% மென்பொருள் தொழில் நிபுணர்கள்  இருபாலரும் அலுவலகம் மற்றும் வீட்டு  பொறுப்பை வெறுக்கிறேன்.

40% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள்  இந்தியா அல்லது வெளிநாடு எங்கு செட்டில் ஆவது என்ற குழப்பத்திலேயே வாழ்கிறார்
கள் 

50% மென்பொருள் நிபுணர்கள் தங்களின் வங்கி கணக்கில் எந்த சேமிப்பும் இல்லை.

60% மென்பொருள் தொழில் நிபுணர்கள்  அவர்கள் பெரும்  தற்போதைய ஊதியங்கள் திருப்தி இல்லை

70% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள்  உலகம் முழுவதும்  8 மணி நேரத்துக்கும் மேலேயே வேலை செய்கிறார்கள்

80% மென்பொருள் தொழில்துறை சார்ந்தோர்கள் பெற்றோர்கள் விட்டு விலகி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்


90% மென்பொருள் தொழிலில்  அவர்களின் வாழ்க்கை கட்டமைப்பில் - காலக்கெடுக்கள்,  திருப்தி, ஊக்க தொகை, பதவி உயர்வுகள், சம்பள உயர்வு, ஆன்சைட் பயணங்கள், மனைவி, குழந்தைகள், விசா  மற்றும் கடமைகள் பற்றி மகிழ்ச்சியாக இல்லை.

100% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது குறைந்தது ஒரு முறையாவது கணினியை விடுத்து வேறு ஏதாவது செய்யனும் விருப்பம் / மற்றும் நினைகிறார்கள்  



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு 
அஞ்சலி! மச்சி........ அஞ்சலி மச்சி......... அய்யோ! அஞ்சலி! மச்சி!

ஷ்.........யபா முடியல

Saturday, August 11, 2012

மானு சிக்குமா

வணக்கம்


மானை காரில் (Toyota -land cruiser)  விரட்டி பிடிக்கும் மஹாபுருசர்கள்...

புட்ரா புட்றா....மவனே...மாட்டுனா, பிரியாணி தான்..  





புது வகையான ஆடை அறிமுகம்.....

இந்த உடை போடுறதும், போடாம இருப்பதும்...அட போங்கப்பா..





                                               மாடும்  மானபங்க படுத்தும்.....



மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

நீங்கள் காலையில் நினைக்கும்  முதல் நபர்


மற்றும் இரவு நினைக்கும் கடைசி நபர்

ஒன்று உங்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்


அல்லது உங்கள் மனதில் வலி ஏற்படுத்தும்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


குளிச்சா இந்த மாதிரி குளிக்கணும்......இது குளியல் 

(மாப்ஸ்...இப்பூடி எங்கே போனா  குளிக்கலாம்)




குறிப்பு: ஸ்பேம் பாக்ஸ் தெரியுமா

Wednesday, August 8, 2012

முந்தானை முடிச்சி

வணக்கம்


   ஒரு நாட்டில்........, மிகவும் குழப்பமான நாள்

தந்தையர் தினம் 

80%  யாருக்கு வாழ்த்து தெரிவிப்பதுன்னு தெரியாது

20%  பயந்து நிலையில்.. யாரேனும் வந்து வாழ்த்தி விடுவார்களோன்னு.



புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா

 பின்னாமாக்கும்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எல்லோரும், நேசத்தால் காயம்/ரணம்   என்கிறார்கள் 

ஆனால் அது உண்மை இல்லை

தனிமை காயப்படுத்துகிறது

நிராகரிப்பு காயப்படுத்துகிறது

யாரோயோ இழந்தது காயப்படுத்துகிறது

பொறாமை காயப்படுத்துகிறது

எல்லோரும்   இந்த விஷயங்களால்  குழப்பி, பலியோ நேசத்தின் மேல்


ஆனால் உண்மையில்

நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது


( குறிப்பு _ நேசம் = அன்பு ஆனால், இங்கு காதலை  குறிப்பிடவில்லை)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்...

இப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான  முந்தானை

Monday, August 6, 2012

திருட்டு முழியிலும் திர்ல் இருக்கு

வணக்கம்


யாரோ ஒருவர் கேட்டார் ஒரு பெண்ணிடம்:

நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா?


அந்த பெண் பதிலளித்தார்:

மனைவி - ஆமாம்,   24 மணிநேரம்  வீட்டில் முழு நேரம் வேலை செய்பவள்.



நான் ஒரு அம்மா ,ஒரு மனைவி, மகள் மற்றும் மருமகள்.

நான் ஒரு அலாரம் வைத்த கடிகாரம் தான்

ஒரு சமையல்காரி

வேலைக்காரி

ஒரு ஆசிரியர்

ஒரு பணியாளராக

ஒரு ஆயா

ஒரு நர்ஸ்

ஒரு பாதுகாப்பு அதிகாரி

ஒரு ஆலோசகரும்

ஒரு இன்ப நலம் பேணுபவர்

எனக்கு   விடுமுறை இல்லை

மருத்துவ விடுமுறையோ  அல்லது பாதி நாட்கள் வேலை அப்படி  எதுவும் இல்லை......

முழுவதும் வேலை வேலை மற்றும் இரவு பகல்  இல்லாமல், சொற்சொடர் தான் நான் வாங்கும் சம்பளம்..

நீங்கள் வீட்டில் எல்லா நாளும் என்ன பண்ணுவீர்கள் என இனி எவரேனும் கேட்டால்........................??       கேட்பாங்க...

எல்லா அம்மாக்களும், மகள்/மருமகளுக்கும் , சகோதரிககளுக்கும்
இது சமர்ப்பணம்.



மனபிராந்தி : காத்துவாகில & காதுல

வரலாற்று உண்மை,  உள்நாட்டு போர்கள் நடந்த போது,

அனைவரும் வாசித்து தெரிந்துக்கொள்ள, படைகள் எந்த சேதம் இல்லாமல் திரும்பி வந்தது என எழுதி வைப்பார்கள். 
 
O பேர் பலி (O கொல்லப்பட்டார்கள்), அதாவது O Killed இங்கிருந்து நாம் OK  என்ற சொல்லை பயன் படுத்த ஆரம்பித்தோம்.

அதாவது ஆல் இஸ் வெல்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

                             திருட்டு முழியிலும் திர்ல் இருக்கத்தான் செய்து...

தூக்கமோ  கண்ணுக்கு எட்டா தொலைவு ... 



முக்கிய குறிப்பு: 

Wednesday, August 1, 2012

என் இதயம் என்ன சீனா தயாரிப்பா?

வணக்கம்


யாரு யாரை பிடிச்சிருக்காங்க


தற்கொலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்


கேர்ள் பிரண்டு போய்ட்டா...என் இதயம் ஓடைஞ்சிடுமா.. 

ஹே.. என் இதயம் என்ன சீனா தயாரிப்பா?

அப்பா சொல்லி இருக்கார் - பெண்களை நம்பாதேன்னு


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உதடுகளால் செய்ய முடிந்த  இரண்டாவது 
சிறப்பு மிக்க  விஷயம் புன்னகை


விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கோடம்பாக்கமே திரண்டு  காலண்டர்  தயாரிப்பில் அதுவும் கவர்ச்சியான காலண்டர்  தயாரிப்பில் ஈடுபட்டது...  நம்ப முடிகிறதா?

சினிமா கிரிக்கெட்டுக்காக....அமலா பால், சமீராரெட்டி, ஸ்ரேயா, பிரியாமணி, ரிச்சா, சார்மி, பாவனா போன்ற தமிழ்சினிமாவில் ஜொலிக்கும் கனவுக் கன்னிகளின் போட்டோ சூட்டிங் காட்சிகளை நீங்களும் பாருங்கோ:


இலியானாவ  பாத்தாலே கடுப்பாகிடும் , குளிச்சிட்டு ஒரு துண்ட கட்டிட்டு  படுத்திற பாடு இருக்கே:


முக்கிய குறிப்பு: