நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 5, 2011

இந்தியர்களிடம் 1 கோடியே 80 லட்சம் கிலோ தங்கம்

"இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது' என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும்.

 இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம். கடந்த 2009 -10ம் ஆண்டில், இந்தியர்களின் சேமிப்பில், 7 முதல் 8 சதவீதம் தங்கமாக இருந்தது.

தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதை ஒரு சொத்தாக சேமித்து வைப்பதில், இந்தியர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐய்யோ சாமி - பதிவர்களே உங்களுக்காவது புரியுதா??

முல்லை பெரியாறு விவகாரத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது :

முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம்; முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக 1998ம் ஆண்டு நாள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தேன்; அந்த வழக்கில் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அணையின் நீர் தேக்கும் உயரத்தை 124 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; இதனை எதிர்த்து இதுவரை யாரும் தடை வாங்கவில்லை; அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தற்போது அணை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது;

இதே போன்று கூடங்குளம் அணுமின் நிலையம் வர கூடாது என சிலர் பிரச்னை செய்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்;

தமிழக, கேரள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது;

சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது; அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்;

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எந்த அளவிற்கு குற்றம் செய்துள்ளாரோ அதே அளவிற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் செய்துள்ளார்.

 இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

மிக மிக அவசரம்

சார்வாள்... சார்வாள்... ரொம்ப அவரசம்... நம்ம கப்பலுக்குள்ள ஊழல் ஒண்ணா கலந்துட்டா மாதிரி கடல் தண்ணி புகுந்திடுச்சாம்... எப்பன்னாலும் கப்பலை மூழ்கடிச்சிடும்னு நம்ம ஆளுங்க ரொம்ப பயப்படறாங்க... எதுனாச்சும் வழி இருந்தா சொல்லுங்க...


அட அதுனால என்ன... இந்த சில்லறை பிரச்னையைப் போயி இப்படி கிளப்பிக்கிட்டு.........?! அடடே... நல்ல யோசனையா இருக்கே! இந்த சில்லறைப் பிரச்னையை வெச்சே சமாளிச்சிடலாமே... இருங்க அதுக்கு ஒரு வழி செய்யறேன்!

கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்


நீங்கள் ஒரு வேலையை செய்யக் கோரி உங்கள் கணவரிடம் கேட்ட உடனேயே அவர், ஓகே சொல்ல வேண்டுமா? அப்படியானால், அவரது வலக்காதில் உங்கள் கோரிக்கையை வையுங்கள்.

அப்போது அவரும் மறுக்காமல் சரி என்று சொல்லிவிடுவார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இதுதான் உண்மை என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. இதுகுறித்து இத்தாலி நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்த குழுவின் தலைவரான டாக்டர் லூக்கா டொமாசி கூறுகையில், 176 ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், வலதுகாதில் கேட்ட 39 சதவீத ஆண்கள், மனைவியின் பேச்சுக்கு மதிப்பளித்து, உடனே ஓகே சொன்னது தெரிந்தது.

அதேநேரத்தில் இடதுகாதில் கேட்ட 19 சதவீதத்தினர் மட்டுமே ஓகே சொல்லியுள்ளனர். வலது காதில் கேட்கப்படும் ஒலி அனைத்திற்கும், இடப் பக்க மூளை செயல் வடிவம் கொடுக்கிறது. இதன் பணியே, நேர்மறையான செயல்பாடுகளை வடிவமைப்பது தான்.

எனவே, காரியம் நடக்க வேண்டும் எனில், வலது காதில் சொல்லுங்கள். இடது காதில் கேட்கப்படும் ஒலிகள், வலது பக்க மூளையில் செயல்வடிவம் பெறுகின்றன. இது, எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. எனவே, நோ சொல்லுங்க இடது காதுக்கு.

புகையை பற்றிய சில உண்மைகள்!!

இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.

4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.

6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.

7. உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.

8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.

9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது முதலே Passive Smoking என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.

10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும்.

11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட்(Packet) புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட்டை புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்களை ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.

12. 20 வயது முதல் சுமார் 40 வயது வரை தினமும் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்.

அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தைக் கைப்பற்றியது ஈரான் ராணுவம்

அமெரிக்க விமானப்படையின் ட்ரோன் விமானத்தை கைப்பற்றியிருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க விமானம் கைப்பற்றப்பட்டதாகவும், தற்போது அது தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இதுகுறித்து அரபி மொழி டிவி சேனலான அல் ஆலம் கூறுகையில், ஈரானின் கிழக்கு எல்லைப் பகுதியில் இந்த விமானம் பிடிபட்டது. விமானத்தை ராணுவத்தினர் கைப்பற்றியபோது அதில் லேசான சேதம் ஏற்பட்டது. விமானம் தற்போது ஈரான் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

ஈரான் எல்லைக்குள், சட்டவிரோதமாக ஊடுறுவியதால் இந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க ட்ரோன் விமானம் தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் வரவில்லை என்றும், அதில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேற்கு ஆப்கானிஸ்தான் நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது இந்த விமானம் மாய்மானது. அதைத்தான் ஈரான் ராணுவம் பிடித்திருக்கலாம் என்று அமெரிக்க் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அந்த விமானம் கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்து இயக்கி வந்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விட்டது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் அது ஈரான் பிடியில் சிக்கியிருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது.

முதலில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் கூறின. இருப்பினும் ஈரான் ராணுவத்திற்கு நெருக்கமான பார்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், விமானத்தை ஈரான் ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டனர். விமானத்தில் லேசான சேதமே ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

ட்ரோன் என்பது ஆளில்லாத, ரிமோட் கன்ட்ரோலில் இயங்கக் கூடிய சிறிய வகை தாக்குதல் விமானமாகும். இத்தகைய விமானங்களைக் கொண்டுதான் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் வேட்டையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

“டைட்டானிக்” கப்பலை காப்பாற்றி இருக்க முடியும்

டைட்டானிக் கப்பலை மூழ்காமல் காப்பாற்றி இருக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.  கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி டைட்டானிக்என்ற பயணிகள் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்ற அந்த கப்பலில் 2,223 பேர் பயணம் செய்தனர்.

அக்கப்பல் புறப்பட்ட 4 நாட்களில் ராட்சத பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதை தொடர்ந்து கப்பலில் துளை ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த சுமார் 1496 பேர் உயிரிழந்தனர். இந்த மிகப்பெரிய விபத்தை அப்போது தவிர்த்து இருக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கப்பல் செல்லும் வழியில் ராட்சத பனிப்பாறை இருப்பதை கப்பலின் தலைமை அதிகாரி வில்லியம் முர்டோக் பார்த்து எச்சரிக்கை தகவல் கொடுத்தார். ஆனால் கப்பலை கட்டுப் படுத்தி ஓட்டிச் செல்வதற்காக மேற்புறத் தளத்தில் பணியில் இருந்த மற்றொரு பொறுப்பு அதிகாரியிடம் இருந்து மாலுமிகளுக்கு தகவல் வர 1/2 நிமிடம் தாமதமாகி விட்டது.

அந்த 1/2  நிமிட நேரமே கப்பல் ராட்சத ஐஸ் பாறையின் மீது மோதி விபத்து ஏற்பட காரணமாகி விட்டது. அந்த அதிகாரி ராட்சத ஐஸ் பாறை இருக்கும் தகவலை உடனடியாக தெரிவித்து இருந்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இதை பேன்ற மிகப்பெரிய விபத்துக்களும், இயற்க்கை சீற்றங்களின் போது ஏற்படும் பேரிழப்புகளும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் காலத்தாமதத்தாலும், கவனக்குறைவாலுமே நடக்கிறது என்பது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அட்ரா சக்கை.. அட்ரா சக்கை