நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 24, 2012

பதினைந்து அங்குல! மா.....முடியல

வணக்கம்


கணவன் மனைவியிடம்,  

உனக்கு என் மேல் விருப்பமோ, நேசிப்போ இல்ல   
.
.
.
மனைவி தனது ஐந்து குழந்தைகளையும் 
பார்த்துக்கொண்டே,  

சொன்னால்:  


என்னவோ இவங்களை எல்லாம் நான் கூகுள்ல இருந்து  பதிவிறக்கம் செய்தது மாதிரில்ல பேசுறீக !?


========================================================

ஒரு பெண்  பல்பொருள் அங்காடி செல்கிறாள்.

அங்கு விற்பனையாளரிடம் ஒரு ஜோடி திரைச்சீலை (கர்டன்) இளஞ்சிவப்பு நிறத்தில்  வேணும்  என்கிறாள்.

ஒ....எஸ்... நிறைய விதவிதமாக இருக்குங்க என்கிறான்.

அழைத்து சென்று  காண்பிக்க இளஞ்சிவப்பு திரைச்சீலைகள் அதில் பிடித்த ஒன்றை தேர்வு செய்து... இது வேண்டும் என கூறுகிறாள்.

விற்பனையாளர் "உங்களுக்கு  என்ன அளவுவில் வேண்டும்?", என்று கேட்கிறார்

"பதினைந்து அங்குல," அவள் பதிலளிக்கிறாள்.

"பதினைந்து அங்குல!" மா குழப்பத்தில் விற்பனையாளர்...எந்த அறையில்  இருக்கு?"

"பெண்மணியோ, ஒரு அறையிலும் இல்லை, அது  என் கணினிக்கு  என்று  கூறுகிறார்.

வியப்புடன் விற்பனையாளர் "மிஸ், கணினிக்கு  திரைச்சீலை தேவையில்...",

அந்த பெண்ணோ : ஹல்ல்ல்லோ ......... எங்  கணினியில் விண்டோஸ் இருக்கு.......
 
==============================================================



மீன் புடிக்கிறாங்களோ??....ம்..நீங்களே பாருங்களே

முடியல

 


                                                                                           






(இக் காட்சியை  படம் பிடித்த புகைப்பட கலைஞனுக்கு, சபாஷ் ) 

======================================
மனபிராந்தி : காத்துவாக்குல & காதுல

எந்த ஒரு செயலையுமே, உண்மையிலேயே செய்ய வேண்டும் என்றால்,

அதற்கான வழியை கண்டுபிடிப்போம்.., வேணாம் என்று நினைத்தால்,

தவிர்ப்பதற்கான வழியை கண்டுபிடிப்போம்...  

===========================================================
ஆயிரம் நண்பர்களை உருவாக்குவது ஒண்ணும்  பெரிய அதிசயம் அல்ல.

ஆயிரம் பேர்  எதிர் கருத்து கூறும்  போது உங்களுடன் கைகோர்க்க  ஒரு நண்பன் இருந்தால் அதுவே அதிசயம்.  

============================================================

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


மூணு நாள ஜிந்திக்குறேன் இந்த படத்துக்கு என்னானு கமன்டலாமுன்னு
ம்ஹும்.......ஒண்ணுமே தோணலயே..... (சரக்கு தீர்ந்துடுச்சோ....)     




அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்




படங்கள்: நன்றி கூகிள்

Monday, December 17, 2012

திறமைசாலிங்க....

வணக்கம்

15.12.2012 அன்று எனது பிறந்தநாளுக்கு என்னை வாழ்த்திய பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்:




இப் படங்கள் வரைந்தவர் திறமைசாலிங்கோ இது உண்மையான படம் அல்ல:    பெயிண்டிங்  ஆர்ட்:








ஐ கேருக்கு போகணும் போலேயே




எப்பூடீ:

ஒண்ணும் சொல்றதுக்கில்ல





மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

தவறு என்பது தவறு தான் அது  யாரு செய்தாலும்

சரி என்பது சரிதான் யாரும் செய்யாமல் நீங்கள் மட்டும் செய்தாலும். 

============================================================

உங்கள்  மீது நம்பிக்கை வரவேண்டுமா?

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்

நேர்மையாக நடக்க வேண்டுமா?

உண்மையாக நடந்து  கொள்ளுங்கள்

உண்மையாக நடக்க வேண்டுமா?

நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். 



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


வீட்டிலோ, விடுதியிலோ தனியா இருக்காங்களாமா...

ஓவரா ஆடுனா ஒடம்புக்கு ஆகாதுங்க 




விரைவில் வர இருக்கும் பதிவு : -  அ........ஆ   (ழகும் பாசமும்)

படங்கள் : நன்றி கூகிள் மற்றும் முகநூல்

Wednesday, December 12, 2012

என்னாது ஜிந்திக்கணுமா

வணக்கம்




கணவன் தன்  மனைவியுடன்  கிளப்புக்கு சென்றான்

அங்கு ஒருத்தன்   செமைய ஆடிக்கிட்டு  இருந்தான்

அவனை பார்த்த மனைவி, தன்  கணவனிடம்

 ஏங்க, அந்த ஆடுறானே அந்த ஆளு 25 வருசத்துக்கு முன் என்கிட்டே வந்து உன்னை கல்யாணம் பண்ணிகிறேன்னு  சொன்னான் நான்தான் சீ...ன்னு..... நிராகரித்து  விட்டேன்.....

கணவனோ, அதனால தான் அவன் இன்னமும் சந்தோசமா வாழ்க்கையை 
என்ஜாய் பண்றான்...  ம் (ஹி ஹி எப்பூடீ)
(சிந்திக்கணும்)



ஏலேய் ஆத்தாங்கரை, கொளத்துமேடு,  கம்மாய்கரல, ஏங்.. கடகரைல  ஒக்காந்து பேசி பாத்துருக்கேன்.....

பயபுள்ளைக ஒக்காந்து பேச எடமாட கிடைகல  

எலேய் பாக்கும் போதே  அடிவைரு கலங்குதுல
(சிந்திக்கணும்)
 

முச்சந்தி மழை காலத்தில்.....இதுவெல்லாம் சகஜமோ??

ஒண்ணு    மட்டும் புரியல.....எப்பூடீ ??  இப்பூடீ எல்லாம்!!
(சிந்திக்கணும்)



என்ன்ன சின்னம்.......ஆங், அதே தான்
(சிந்திக்கணும்)





எல்லாமே பயன்படுத்தலாம்.......என்ன கொஞ்சம் சிந்திக்கணும்
(என்னாது ஜிந்திக்கணுமா,, ஹே ஹே ஏம்யா இந்த வேண்டாத வேலயெல்லாம்  அந்த பயக்கமே   நம்மகிட்ட இல்லையே) 




மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எல்லோரிடமும் அமைதியும் /சுமூகத்தையும்  கையாளுவோம்...

ஏன், உங்களிடம் முரட்டுத்தனமாக நடப்பவரிடம் கூட

ஏன்னா, அவர்கள்  அழகாகவோ நல்லவராகவோ இல்லைதான்

ஆனா நீங்க நல்லவர் அழகானவராச்சே என்பதால்..


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ரொம்ப ஜிந்திக்கவேணாம்...என்னன்னு சொல்லீர்றேன்

ஒரு  'ஈ' படுத்துறபாடுதேன்...    ஹி ஹி ஹி.....  





நன்றி படங்கள் கூகிள்

Saturday, December 1, 2012

மனம் விட்டு பேசுங்கள் மகிழ்ச்சி தழைக்கும் !

கூட்டுக்குடும்பங்களால் வாழ்ந்தவர்கள் பலரும் இன்றைக்கு கருத்து வேறுபாடுகளினால் தனித் தனி குடும்பமாய் மாறிவருகின்றனர். இதற்கு காரணம் அவசர யுகத்தில் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளமுடியாததே. ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாத காரணத்தினால் இடைவெளிகள் ஏற்படுகின்றன. இந்த இடைவெளிகளே நாளடைவில் விரிசலுக்கு காரணமாகின்றன. ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரமே. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் விழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். குடும்ப உறவுகளை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்கள்.

விட்டுக்கொடுங்கள்

குடும்பம் என்றாலே ஏதாவது சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான்.

சூழ்நிலையை சமாளிங்க

குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.

பாசமான சந்திப்புகள்

குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களை சந்திக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.

மனம் விட்டு பேசுங்கள்

குடும்ப உறவுகளோடு அடிக்கடி ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும். அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம். அவ்வாறான தருணங்களில் ஒன்றாக அமர்ந்து பேசி அவரவர்களுக்கு இடையே தோன்றும் எண்ணங்களை மனம் விட்டு பேசலாம். இதனால் கசப்பான கருத்து வேறுபாடுகள் மறையும்.

இதனால் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் அதிகரிக்கும்.

கோபத்தை மறக்கலாம்

புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.

உறவுகளுக்கு முதலிடம்

குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் ஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.

உறவுகளை நேசியுங்கள்

குடும்பத்தில் பிரச்சினைகள் எழாமல் இருக்க முதலில் உறவுகளை நேசியுங்கள். அன்பும், நேசமும் இருந்தாலே சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. அப்புறம் அவர்களின் கருத்தை நாம் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளலாம். நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்றுபோல் இருப்பதில்லை. நமது கையின் விரல்கள் ஐந்தும் ஐந்துவிதமாய் இருக்கின்றன. அதேபோல்தான் குடும்ப உறவுகளும். இதனை உணர்ந்து உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.

எனவே குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும். இவ்வாறான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் நமது சந்ததியினருக்கும் குடும்ப உறவுகளின் பெருமை தெரியும். நமக்கும் வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கும்.




படித்தேன் அதை உங்களுடன் பகிர்கிறேன்...

நன்றி தட்ஸ்தமிழ்