நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, August 26, 2014

அந்த ஏழு இரவுகள்

திங்கள் இரவு
 
 
மனைவி : இன்னைக்கு என்ன குடிச்சிட்டு வந்தீங்களா? 

கணவன் : ஆமான்டா செல்லம் ஆபிஸ்ல வெளிநாட்டு வாடிக்கையாளருடன் சந்திப்பு அப்படியே குடிக்க வேண்டியதா போச்சி


  
செவ்வாய் இரவு
மனைவி: என்ன இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்களே
 
கணவன் : ஆமான்டா செல்லம் நண்பனுக்கு நிச்சயம் பண்ணியதுக்கு பார்ட்டி கொடுத்தான் அதான் அப்படியே தவிர்க்க முடியல...


 
புதன் இரவு
 

மனைவி: இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்க
 
கணவன் : ஒரு நண்பனுக்கு டிவேர்ஸ்...மனஉளைச்சல் அவனை ஆசுவாச படுத்தி அப்படியே....

 
 
வியாழன் இரவு
 
மனைவி: இன்னைக்குமா..... இப்ப எந்த நண்பனுக்கு டிவேர்ஸ் ஆச்சு
 
கணவன் : டிவோர்ஸ் இல்லமா...ஆபிஸ்ல வேலை பளு ஒரே டென்சன் அதனால...


 
வெள்ளி இரவு
 

மனைவி : இன்னைக்கு ஏங்..
 
கணவன் : செவ்வாகிழம நண்பனுக்கு நிச்சயம் பண்ணாங்களா இன்னைக்கு அவனுக்கு கல்யாணம்,,, மகிழ்ச்சியில் பார்ட்டில கலந்துகிட்டு குடிச்சி...


 
சனி இரவு
 

மனைவி : ம்ம்ம்...இப்ப
 
கணவன் : பழைய நண்பனை சந்தித்தேன்..என்னை விடாபிடியாக டிஸ்கோவுக்கு அழைத்து சென்று வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க...முடியாமல் குடிச்சி...


 
ஞாயிறு இரவு

மனைவி : சரி இன்னைக்கு என்னாச்சி

கணவன் : என்னடா இது மனுசன்  ஒரு நாளாவது...... எங் இஸ்ட்படி குடிக்க கூடாதா.............ச்சே என்ன மாதிரி சமூகத்துல வாழுறோம் 


&&&


மனைவி : ஏங்க...ஏனுங்க தோட்டத்துல கூடமாட ஒத்தாச பண்ணுங்களேன் ?
 
கணவன் : என்ன நெனச்சுட்டு இருக்கே ஓங் மனசுல நாங் என்ன தோட்டகாரனா..?
 
மனைவி :என்னங்க இந்த கதவுல கைப்பிடி ஒடஞ்சுடுசி மாட்டி கொடுங்களேன்?
 
கணவன் : என்ன நீயீ, என்னைய தச்சுவேலை செய்யரவன் மாதிரியா தெரியுது ஒனக்கு
 
மாலையில் ஊர்சுற்றி விட்டு வீடு திரும்பிய கணவன்....  எல்லாமே சரி செய்யப்பட்டு இருப்பதை கண்டு 
 
கணவன் : ஏய்....என்னாதிது ஆரூ செய்தது இந்த வேலை எல்லாம்
 
மனைவி : பக்கத்து வீட்டுகாரார்....ஆனா பாருங்க ஒரு  கண்டிசன் போட்டாரு
 
முட்ட புரோட்டா அல்லது முத்தம் வேணும்னு கேட்டாரு 
 
கணவன் : ஹா ஹா எனக்கு நிச்சயமா தெரியும் முட்ட புரோட்டா கொடுத்து இருப்பேன்னு
 
மனைவி : என்ன நெனசிகிட்டு இருக்கீக என்னைய பத்தி...நா என்ன புரோட்டா கடையா வச்சிருக்கேன்..
 
கணவன் : ங்..ஞே