நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, July 9, 2012

எளங்குட்டி....மூடுக்கு பாமாயிட்டேன்

வணக்கம் 


இந்த பதிவில் விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு,

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல - எல்லாம் கலந்த கலவையாக 

இரவில் படுக்கையில் தூக்கம்  வராமல் புரளுகையில் ஏதேதோ நினைத்துக்கொண்டு...ஒரு எண்ணம்  முளைத்தது அதை படாத பாடு பட்டு அடக்கி கொண்டேன். (அந்த மிருகம் அடங்க வில்லை பாக்கலாம் பாக்கலாம் எம்புட்டு நேரத்து அடக்கி வைக்கிறாய் என்று)

 எப்பவும் போல் அன்றும் விடிந்தது காலை உணவுக்கு பின் எந்த வேலையும் இல்ல (ஆணிக்கு விடுமுறை) என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் போது தனிமை கொடுமையானது  பொசுக்குன்னு ஒரு எண்ணம்  (அதான் அந்த மிருகம் விழித்துக்கொண்டது) மனதுள் வந்தது வந்த எண்ணமோ  நேரம் ஆக ஆக கூடியதே தவிர குறைந்த பாடில்லை சரி ஆசை பட்டுட்டோம் அனுபவித்து விட வேண்டியதுதான் இருந்தாலும், அம்மணிகிட்ட ஒரு வார்த்தை கேட்ருவோமே என உள்ளம் சொல்ல ச்சே இதை எல்லாம் எவனாவது போய் கேட்பானா தேவை இல்லை என மனமும் மூளையும் ஒரே போராட்டம் கடைசியில்  மனசாட்சி வென்றது -(எதையும் மறைப்பதில்லை.. நம்ம பாலிசி) 

அம்மணிக்கு போனை போட்டேன் (அம்மணி அருகில் இல்லை, இருந்தால் இந்த ஆசையே வந்து இருக்காது) திடீர் எண்ணத்தை  மெதுவா சொன்னேன்.

அம்மணி : நீங்க என்ன லூசா ஏன் உடம்பை கெடுத்துக்க...போறீங்களா???? அடங்க ........................? கொ.............? டை..................?..........................?...........................???
ஆசையாம் ஆசை.....ஏகப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறி (காரியம் ஆவணும்னா) முடிவில் என்னமோ பண்ணி தொலையுங்கள்.

ஷ்..யபா..அப்புறம் என்ன,.. அம்மணியை  சமாதானம் பண்ணியாச்சி...(நினைப்புதான்)  ஒக்கே சொன்ன பிறகு, அடங்குவானா இன்னும் கூடுதலாக  எண்ணம்  வெறியானது.


க்ளோஸ் நண்பர்களுக்கு தொலை பேசியில் தகவல் சொன்னதும்.........தல, மாப்ளே,,,இதை இதை தான் எதிர்பார்த்தோம் காஞ்சி போய் இருக்கோம் ஒக்கே ஒக்கே.

எம்புட்டு சந்தோசம் பய புள்ளைங்களுக்கு...ம்    சரி ரெடி பண்ணிட்டு கூப்டறேன்..


எனது நெருங்கிய (உங்க பாசையில் அல்லக்கை)  நண்பனை (அவன் என்னை சார் என்று தான் அழைப்பான்) அழைத்தேன் விடயம் சொன்னேன் - உடனே புறப்பட்டு வருவதாக  சொன்னான்.(பயபுள்ள அவனும் ஏங்கித்தான் கிடக்காம் போல)    சரி...

அவன்  வருவதால் என் காருக்கு வேலை  இல்லையே என்று ரெண்டு லார்ஜ் போட்டு மூடுக்கு பாமாயிட்டேன்...( சரக்கை தொட்ட கைகளினால் கார் ஸ்டீரிங் தொட மாட்டேன்....)

இனி நண்பனது வண்டியில்:


சார் எங்கே போகணும்? இளங்குட்டியா  இருக்கணும்  அப்பத்தான்  நல்லா   இருக்கும்  எங்கே இருக்கோ  அங்கே போ.. எங்கோ யாருக்கோ போனை போட்டான்....ஒக்கே ஒக்கே இரண்டு  இடங்களில் விசாரித்து முடிவில் இருக்கும் இடம் தெரிந்து,.... இளசுதான்....ம்  குட்டி கிடைத்து விட்டது. 

சார் எங்கே போகணும்? நேர வீட்டுக்கு போ - வரும் வழியில்  ஏதோ  ஞாபகம் வர....செல்லம் முக்கியமான ஒரு ஐட்டம்   இல்ல அது வேணும்...

கண்டிப்பா வேணுமா சார் - ஆமா அது இருந்தான் ரொம்ப நல்லா  இருக்கும், எனக்கு அது இல்லாம முடியாது. எதை பண்ணுனாலும் தெளிவா முறையா பண்ணனும்.

மீண்டும் கார் அது இருக்கும் இடம்   நோக்கி பயணித்தது பல கடைகளில் கேட்டும் அது  இல்லை வெறுத்துட்டேன் (என்ன சோதனை) முடிவில் பழைய ஞாபகம் வர சரி... நேர அங்கே போ என்று கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் பயணம் செய்து..... வாங்கி கொண்டு வீடு வந்து......யப்பா போதும்டா சாமி இப்பூடி ஆசை படுவானேன்  இபூடி அலைவானேன்.... இதுக்கு பேசாம....!?%#. ச்சே என்ன வாழ்க்கைடா..


அம்மணியிடம் இருந்து அழைப்பு, என்ன முடிஞ்சுடுச்சா? சந்தோசமா ஆசை அடங்கிடுச்சா??

இல்லைடா செல்லம் கேப் விட்டு போச்சா  அதான்   கொஞ்சம்   பயமா  இருந்துச்சி ஆனா ஹி ஹி நல்லா...ஹி ஹி.

ஏது  கேப் விட்டு போச்சா, இந்த விசயத்தில்,... உங்களுக்கு தான் கைவந்த கலையாச்சே..சரி சரி போதும் இந்த மாதிரி அடிகடி பண்ணி உடம்பை கெடுத்துக வேணாம்    என்னை கூப்பிட்டு அனுமதி கேட்டதால் இன்னைக்கு மட்டும்  மாப்பு... (மவராசி நீ நல்லா இருக்கோணும்) அப்பாடா...



அப்புறம் என்ன, எல்லாம் முடிச்சிட்டு...!!!!! நண்பர்களை அழைத்தேன் வந்தார்கள் ரெண்டை வீசினார்கள் முறையா சுவைத்தார்கள் ரொம்ப நாளாச்சி தல இந்த மாதிரி பிரியாணி சாப்பிட்டு மனதார வாழ்த்தி சென்றார்கள்.

டிஸ்கி : இளங்குட்டி   வெள்ளாடு  - அலைந்து வாங்கிய ஐட்டம் மல்லி இலை.. பொதுவாக கடைகளில் நான்வெஜ்  சாப்பிடுவது இல்லை அத்துடன் கடந்த ஒரு வருடமாக மட்டன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். எல்லாமே எதுனாலும்  சொந்த சமையல் தான்.


இந்த பதிவில் இருக்கும் படங்கள் சும்மா கலர் புல்லா இருக்குமேன்னு ஹி ஹி ஹி நன்றி கூகிள்.