நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, October 25, 2011

பீர் குடித்தால் எலும்பு வலுவடையும்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்   பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எலும்பின் உறுதிக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு உறுதி அளிப்பதுடன் புதிய எலும்புகளின் பேரில் வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:

மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் நலமாக  இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம்.

பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும். குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் வலுவாக  வளரவும் உதவும்.

பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பு   என்றே கூறலாம். அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளுக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கைது? தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்??

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களுர் நீதிமன்றத்தில் பல வருடங்களின் பின் நடந்து வருகிறது.

92 சாட்சிகளிடமும் விசாரண முடிந்து , ஜெயா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் பொறுப்பேற்பது? என்பது அ.தி.மு.க வுக்குள் பெரும் மௌனப் புயலை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரிம் வினவியபோது ” கடந்த 14 வருடமாக நடைபெறும் இவ்வழக்கில் அம்மா அவர்கள் தனது தகுந்த பாதுகாப்புக் கருதி பெங்ளுர் நீதிமன்றுக்கு வழக்கை மாற்றும்படி மனுச் செய்தார். அதன் பின் கழகத்தின் வேலைப்பழு காரணமாக ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். தற்போது ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் அம்மாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்தால் அம்மாவால் அவர் ஓர் குற்றவாளி என்ற அடிப்படையில் முதல்வராக இருக்க முடியாது. இவ்வாறான நிலை ஏற்படின் அம்மாவுக்கு விசுவாசமான ஆள் ஒருவரையே அவர் நியமிப்பார் ” என அவர் குறிப்பிட்டார்.
அப்படியாயின் ஜெயாவின் இன்றைய விசுவாசி யார்? இதற்கு கிடைத்த ஒரே பதில் அமைச்சர் சின்னையா என்பது தான். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவையே சிறைக்குள் தள்ளிய நீதித்துறை தமிழக முதல்வரை குற்றவாளி என்று கருதினால் கட்டாயம் தண்டனை வழங்குவார்கள். இதற்கு மேலதிகமாக எடியூரப்பாவின் ஆதரவாளரும் பிரச்சனையை கிளப்புவார்கள் என்கின்றனர் நோக்கர்கள். எது எவ்வாறெனினும் தமிழகத்தின் மானம் பெங்களுர் சிறப்பு நீதிமன்றின் கைகளிலேயே தங்கியுள்ளது.

தீபாவளி ஸ்பெஷல் - மட்டன் மிளகுக் குழம்பு


தீபாவளி ஸ்பெஷல் தேவையானவை- (4 பேருக்கு)

முத்தல் இல்லாத ஆட்டிறைச்சி- ½ கிலோ
n3
சின்ன வெங்காயம்- 100 கிராம் 
நாட்டுத் தக்காளி- 3
இஞ்சி-1 சிறுதுண்டு 
பூண்டு- 10 பல் 
புளி-1 சுளை 
காய்ந்த மிளகாய்- 4
மிளகு- 2 டீஸ்பூன் 
கடுகு,சீரகம்- 1 டீஸ்பூன் 
காய்ந்த மல்லி- 2 டீஸ்பூன் 
தேங்காய்ப் பூ -1 கை பிடியளவு 
ஞ்சள் தூள், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.செய்முறை:-
மிளகாய், மிளகு, சீரகம், மல்லி, தேங்காய் பூ வறுத்து அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, சீரகம், தாளித்து, இஞ்சி பூண்டைத் தட்டிப் போட்டு வதக்கவும். பச்சை வாடை போனவுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். கழுவி வைத்து கறித்துண்டுகளைப் போட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிண்டவும். அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு, 2 டம்ள்ர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் போட்டு 2 சவுண்டு வேக வைத்து இறக்கவும்.
ருசி பார்த்து 1 சுளை புளியைக் கரைத்து ஊற்றி மேலும் ஒரு கொதி கொதிக்க வைத்து பயன்படுத்தவும்

தூக்கமின்மையால் சர்க்கரை நோய்

சர்க்கரை சுவைத்தான் இனிக்கிறது. சர்க்கரையின் பெயரை கேட்டதுமே, நாவில் எச்சில் ஊறுகிறது. ஆனால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டால் கசக்கிறது. ஏன்?

நாட்டில் இருக்கும் அத்தனை வியாதிகளுக்கும் மூல வியாதி சர்க்கரை நோய் என்றே சொல்லலாம். ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் காரணமாக  இருதய நோய் வரலாம். புற்று நோய் வந்தால், அது உடலில் ஏதாவது ஒரு பகுதியை பாதிக்கும். ஆர்த்தோ மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் வந்தாலும், அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன.

ஆனால், ஒரு முறை சர்க்கரை வந்தால்... அவ்வளவுதான். மேலே சொன்ன அத்தனை வியாதிகளும் வந்துக் கொண்டே இருக்கும். சர்க்கரை நோய் கண்ணை பாதிக்கும். கொழுப்பை அதிகரிக்கச் செய்து, ரத்த அழுத்தத்தை உருவாக்கும். இதனால், இருதய நோய் வர வாய்ப்புண்டு. நரம்பு மண்டலத்தை பாதித்து, கோமா நிலைக்கு தள்ளிவிடும். நாள் பட்ட சர்க்கரை வியாதிக்காக மருந்துகளை தொடர்ந்து எடுப்பதால், புற்று நோயும் வர ஆபத்து அதிகம். அதையெல்லாம் விட,  நினைத்ததை சாப்பிட முடியாது. அளவோடு சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டும். குறைந்த அளவு உணவு மட்டுமில்லாமல், இத்தனை மணி நேரம் தூங்கியாக வேண்டும்.

என்னடா... இத்தனை தொல்லை. ஏன் இந்த சர்க்கரை நோய் வருகிறது. முதலில் சர்க்கரை நோயை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரச்னையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் சர்க்கரை நோய் அல்லது நீரழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம்.

இந்த சர்க்கரை நோய் எதனால் வருகிறது. குடும்பத்தில் தாய், தந்தை ஆகிய யாராவது ஒருவருக்கு அல்லது தாத்தா, பாட்டிக்கு சர்க்கரை இருந்தாலும் பரம்பரை வியாதியாக வரும் நிலை இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடின்றி இருக்கும் நபர்களை சர்க்கரை தாக்கும். இதில் எதுவுமே இல்லாமலும் கணையம் பழுதுபட்டால், சர்க்கரை நோய் வரும்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. ஸ்டெரஸ் அதாவது மன அழுத்தம் காரணமாக கூட சர்க்கரை வருகிறதாம். டாக்டர்கள் சொல்கிறார்கள். இதுமட்டுமா, குறைந்த நேரமே தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கும் சர்க்கரை நோய் தாக்குவது தான் கொடுமை.

சமீப காலங்களில் 30 முதல் 45 வயதுக்குள் சர்க்கரை நோய் தாக்கும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக டாக்டர்கள் கூறுவது, தூக்கமின்மை. அடுத்து மன அழுத்தம்.
மனிதர்களுடைய தினசரிச் செயல்களில் தூக்கம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி, ஓய்வெடுக்காமல் இருந்தால் மறுநாள் மனிதனால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத் தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது.

எனவே ஒவ்வொருவருக்கும் தூக்கம் கொள்வது மிக முக்கியமானது. சாப்பிடாமல் கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்து விடலாம். ஆனால் தூக்கம் கொள்ளாது விழித்திருக்க முடியாது. ஒருவேளை தூக்கம் கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்?

சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால் மனித ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்னை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும். தூக்கமின்மையால், ரத்தச் சோகை ஏற்படும். மலச்சிக்கலும் வரும். மேலும் தூக்கமின்மையால் ரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு அதிகரிக்கும்.

இதனால் ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு  பிரச்னைகள் ஏற்படும். உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்

கடாபி கொலை - ராஜபக்சே அதிர்ச்சி

லிபிய அதிபராக இருந்து மக்களாலும், புரட்சிப் படையினராலும் விரட்டப்பட்டு வீழ்த்தப்பட்ட மும்மர் கடாபியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடாபியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ராஜபக்சே. கடந்த 2007ம் ஆண்டு இவர் லிபியாவுக்குப் போயிருந்தார். அப்போது கடாபியை சந்தித்துப் பேசினார். அதேபோல அவரது மகன் நமல் ராஜபக்சேவும் கடந்த ஆண்டு லிபியா போய் கடாபியை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் கடாபியை புரட்சிப் படையினர் நடு ரோட்டில் இழுத்துச் சென்று கொலை செய்த செயல் இலங்கை அரசை அதிர வைத்துள்ளதாம், பீதியடைய வைத்துள்ளதாம்.

இந்தப் பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில், கடாபி பிடிபட்ட விதம், அவரது மரணம் தொடர்பான சூழல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே இதுகுறித்து விளக்கம் தேவைப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கடாபியின் நண்பனான ராஜபக்சேவின் அறிவுரைப்படியே இந்த அறிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

நீண்ட காலமாகவே இலங்கையுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் இந்த கடாபி. 1976ம் ஆண்டு கொழும்பில் நடந்த அணி சேரா நாடுகள் மாநாட்டுக்காக வந்திருந்தார். இப்போது அவரது மரணத்தால் ராஜபக்சே ஆடிப் போயுள்ளதாக தெரிகிறது

இறங்கி வந்த பாஜக!

கடந்த சில தேர்தல்களாக 2 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாங்கி வந்த பாஜக, உள்ளாட்சித் தேர்தலில் அதிலிருந்து சரிந்து விட்டது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றிகளைப் பெற்றிருந்தது. 2 நகராட்சித் தலைவர் பதவி, 4 மாநகராட்சிக் கவுன்சிலர்கள், 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 கவுன்சிலர்கள், 2 வார்டு உறுப்பினர்கள் என அனைத்திலும் பாஜக சொல்லிக் கொள்ளும்படியாக பிரிநிதிகளைப் பெற்றிருந்தது.

அதிமுக, தி்முக என தலா ஒருமுறை கூட்டணி அமைத்து தமிழகத்திலும் பாஜக பிரபலமானது. ஆனால் அதன் பின்னர் இரு திராவிடக் கட்சிகளும் பாஜகவை தூரத்தில் வைத்து விட்டன. இதனால் தொடர்ந்து அது தனியாகவே போட்டியிட்டு வருகிறது.

தனியாக போட்டியிட்டாலும் தலா 2 சதவீத வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் அது பெறத் தவறியதில்லை. கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் தனக்குள்ள செல்வாக்கை அது தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 2.02 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, 2009 லோக்பா தேர்தலில் 2.34 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 1.35 சதவீத வாக்குகளையே அது பெற்றுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலின்போது பெற்ற வாக்குகளை இந்த முறையும் வாங்கியிருந்தால் இன்னும் கூடுதலான உள்ளாட்சிப் பதவியிடங்களைஅது கைப்பற்ற முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவைப் பொறுத்தவரை எது வந்தாலும் அதற்கு லாபம்தான். காரணம், யாரும்தான் அவர்களை கூட்டணிக்குக் கூப்பிடப் போவதில்லையே...!

எரியும் தீ - 'பிரா'வைத் தேடி ஓடிய நடிகை

சமீபத்தில் இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் வீட்டுக்கு விருந்தினராக சென்றிருந்தபோது திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய அவரது 90 வயது தாயாரை கைகளில் தூக்கிக் கொண்டு ஓடி வந்து காப்பாற்றி பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து நடிகை கேட் வின்ஸ்லெட், அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரஹாம் நோர்ட்டன் ஷோவின்போது கேட் அளித்த பேட்டியில், அதிகாலை மணி 4.30 மணிக்கு நாங்கள் அனைவரும் எழுந்தோம். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு விட்டதாக சத்தம் கேட்டது. இதனால் நான் பயந்து போய் விட்டேன்.

தீவிபத்து நடந்த இடத்தை நோக்கி நான் விரைவாக ஓடினேன். அப்புறம்தான் யோசித்தேன், நம் மீது தீ பரவி விட்டால் என்ன செய்வது என்று. பிறகு எனது குழந்தைகளிடம் சென்று உள்ளே போய் கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை வந்தது.+

உடனே பெட்ரூமுக்கு ஓடினேன். ஒரு பிராவை எடுத்து அணிந்து கொண்டேன். அது எனக்கே வித்தியாசமாக இருந்தது. பின்னர் பிரா நம்மை காப்பாற்றாமல் போய் விடுமோ என்று நினைத்து ஒரு டி சர்ட்டை எடுத்து அணிந்தேன். பிறகு எனது குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓடினேன். பின்னர் பிரான்சனின் தாயாரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தேன் என்றார் கேட்.