சர்க்கரை சுவைத்தான் இனிக்கிறது. சர்க்கரையின் பெயரை கேட்டதுமே, நாவில் எச்சில் ஊறுகிறது. ஆனால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டால் கசக்கிறது. ஏன்?
நாட்டில் இருக்கும் அத்தனை வியாதிகளுக்கும் மூல வியாதி சர்க்கரை நோய் என்றே சொல்லலாம். ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் காரணமாக இருதய நோய் வரலாம். புற்று நோய் வந்தால், அது உடலில் ஏதாவது ஒரு பகுதியை பாதிக்கும். ஆர்த்தோ மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் வந்தாலும், அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன.
ஆனால், ஒரு முறை சர்க்கரை வந்தால்... அவ்வளவுதான். மேலே சொன்ன அத்தனை வியாதிகளும் வந்துக் கொண்டே இருக்கும். சர்க்கரை நோய் கண்ணை பாதிக்கும். கொழுப்பை அதிகரிக்கச் செய்து, ரத்த அழுத்தத்தை உருவாக்கும். இதனால், இருதய நோய் வர வாய்ப்புண்டு. நரம்பு மண்டலத்தை பாதித்து, கோமா நிலைக்கு தள்ளிவிடும். நாள் பட்ட சர்க்கரை வியாதிக்காக மருந்துகளை தொடர்ந்து எடுப்பதால், புற்று நோயும் வர ஆபத்து அதிகம். அதையெல்லாம் விட, நினைத்ததை சாப்பிட முடியாது. அளவோடு சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டும். குறைந்த அளவு உணவு மட்டுமில்லாமல், இத்தனை மணி நேரம் தூங்கியாக வேண்டும்.
என்னடா... இத்தனை தொல்லை. ஏன் இந்த சர்க்கரை நோய் வருகிறது. முதலில் சர்க்கரை நோயை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரச்னையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் சர்க்கரை நோய் அல்லது நீரழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம்.
இந்த சர்க்கரை நோய் எதனால் வருகிறது. குடும்பத்தில் தாய், தந்தை ஆகிய யாராவது ஒருவருக்கு அல்லது தாத்தா, பாட்டிக்கு சர்க்கரை இருந்தாலும் பரம்பரை வியாதியாக வரும் நிலை இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடின்றி இருக்கும் நபர்களை சர்க்கரை தாக்கும். இதில் எதுவுமே இல்லாமலும் கணையம் பழுதுபட்டால், சர்க்கரை நோய் வரும்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. ஸ்டெரஸ் அதாவது மன அழுத்தம் காரணமாக கூட சர்க்கரை வருகிறதாம். டாக்டர்கள் சொல்கிறார்கள். இதுமட்டுமா, குறைந்த நேரமே தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கும் சர்க்கரை நோய் தாக்குவது தான் கொடுமை.
சமீப காலங்களில் 30 முதல் 45 வயதுக்குள் சர்க்கரை நோய் தாக்கும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக டாக்டர்கள் கூறுவது, தூக்கமின்மை. அடுத்து மன அழுத்தம்.
மனிதர்களுடைய தினசரிச் செயல்களில் தூக்கம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி, ஓய்வெடுக்காமல் இருந்தால் மறுநாள் மனிதனால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத் தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது.
எனவே ஒவ்வொருவருக்கும் தூக்கம் கொள்வது மிக முக்கியமானது. சாப்பிடாமல் கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்து விடலாம். ஆனால் தூக்கம் கொள்ளாது விழித்திருக்க முடியாது. ஒருவேளை தூக்கம் கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்?
சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால் மனித ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்னை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும். தூக்கமின்மையால், ரத்தச் சோகை ஏற்படும். மலச்சிக்கலும் வரும். மேலும் தூக்கமின்மையால் ரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு அதிகரிக்கும்.
இதனால் ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்

No comments:
Post a Comment
இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...