நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, October 25, 2011

கடாபி கொலை - ராஜபக்சே அதிர்ச்சி

லிபிய அதிபராக இருந்து மக்களாலும், புரட்சிப் படையினராலும் விரட்டப்பட்டு வீழ்த்தப்பட்ட மும்மர் கடாபியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடாபியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ராஜபக்சே. கடந்த 2007ம் ஆண்டு இவர் லிபியாவுக்குப் போயிருந்தார். அப்போது கடாபியை சந்தித்துப் பேசினார். அதேபோல அவரது மகன் நமல் ராஜபக்சேவும் கடந்த ஆண்டு லிபியா போய் கடாபியை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் கடாபியை புரட்சிப் படையினர் நடு ரோட்டில் இழுத்துச் சென்று கொலை செய்த செயல் இலங்கை அரசை அதிர வைத்துள்ளதாம், பீதியடைய வைத்துள்ளதாம்.

இந்தப் பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில், கடாபி பிடிபட்ட விதம், அவரது மரணம் தொடர்பான சூழல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே இதுகுறித்து விளக்கம் தேவைப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

கடாபியின் நண்பனான ராஜபக்சேவின் அறிவுரைப்படியே இந்த அறிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

நீண்ட காலமாகவே இலங்கையுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் இந்த கடாபி. 1976ம் ஆண்டு கொழும்பில் நடந்த அணி சேரா நாடுகள் மாநாட்டுக்காக வந்திருந்தார். இப்போது அவரது மரணத்தால் ராஜபக்சே ஆடிப் போயுள்ளதாக தெரிகிறது

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...