நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, July 30, 2012

குடி மகளே பெரும் குடிமகளே

வணக்கம்

ஹேர் ஸ்டைல் 2012


குடி மகளே ஹ்ஹா ஹஹா பெரும் குடிமகளே.....

 உங்கப்பன் ஆழ்துளை கிணத்துல  பெட்ரோல் எடுக்குறான் நீ புல் கட்டு கட்ற

தக்காளி செத்தான்  செவிலு.....
  

சிரியா நாட்டு பொண்ணுங்க

டி ஷர்டுல அந்த நாட்டு அரசியல் தலங்க

அதுல எழுதி இருக்குங்க,

நாங்கள் உன்னை விரும்புல
 (மொழிபெயர்ப்பு நண்பனுக்கு நன்றி) 

கொய்யால... அப்புறம் எதுக்கு அந்தாளு படத்தை நீ போட்டுகிற

என்ன ஒரு கற்பனை 

சர்தாரின் தலைப்பாகை....மார்பு கச்சையாக... 

யப்பா எப்பூடி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா

தலை சுத்துதா........ தலை கீழ பாருங்க...
 


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல    அழகு சந்தோஷத்தை கொடுக்கும்
      ஆனால்,
   மகிழ்ச்சி எப்போதும் அழகு சேர்க்கும்.சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் உள்ளன.

உங்களை நீங்கள்  உண்மையிலேயே மேம்படுத்தவும் அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளை குறைக்கவும்.
 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

முந்தய பதிவின் தொடர்ச்சியாக   அடிச்ச அடியில  ஒரு பய புடிக்கல......சரி
வாரீயலா....மாத்தி மாத்தி போட்டு புடுச்சி வெளயாடுவோம்


முக்கிய அறிவிப்பு:

ஸ்பேம் பாக்ஸ் உசார்  

Wednesday, July 25, 2012

போதை ஏறி போச் மாமோய்

வணக்கம்

நண்பர்களே இது சரக்கு பத்திய ஆய்வு  பதிவு - சரக்கு  விரும்பாதவர்ளும்  போதை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்


அதாம்பா, சரக்கு போட்டா சும்மா ஜிவ்வுன்னு ஏறுமே போதை அதை பற்றிய சிறு ஆய்வு.

போதையில மூணு வகை போதை இருக்குங்க

அது என்ன மூணு வகை போதை

அது எந்த விதம் அப்படின்னா... (கொய்யால சீக்கிரம்  சொல்லும்வோய்  நிறைய  இடத்துக்கு  போகணும்..  ஏலேய் என்னல சவுண்டு அங்கே )


ஒக்கே,,. ஒக்கே சொல்றேன்:ஒண்ணு  அற்பபோதை  

ரெண்டு  ஆடம்பர போதை 

மூணு  ராஜபோதை
அற்பபோதை 

அப்படின்னாக்க,

குவாட்டார் சரக்கில் மூடியில் கொஞ்சூண்டு ஊத்தி குடிச்சிட்டு பயபுள்ள பன்ற அளப்பரைக்கு (ஏய் ..இந்த,.. அந்தா..... தெக்கால... வடக்கால... சும்மா
கண்டமேனிக்கு அக்கப்போர் பண்ணி அடிவாங்கி சுருண்டு போய்டுவான்)   விடிஞ்ச என்ன நடந்ததுன்னு ஒரு மண்ணும் புரியாது அதுக்கு பேரு அற்பபோதை 


ஆடம்பர போதை

குவாட்டார் சரக்கை  குடிச்சிட்டு பயபுள்ள பன்ற  பந்தாவுக்கு   (வெய்ட்டரை  அழைத்து சோடா, வாட்டர், சைடிஷ், மீதி பணத்தை கீப் டிப்ஸ்)
அடிச்ச போதை  அரைகுறையா  தின்னுபோட்டு வாந்தி எடுத்து நாசம் பண்ணி  விடிஞ்ச தலைவலியோடு லொளாயே படும்  பய புள்ளக்கு பேரு  ஆடம்பர போதை


ராஜபோதை

சரக்கை புல்லா  (புல் பாட்டல) அடிச்சிட்டு  சும்மா  ஸ்டேடியா...  புல் மீல்ஸ் ஐ ஒரு கட்டு கட்டிட்டு அப்பூடிக்க நடந்து....,டூ வீலோ -போர் வீலோ ஓட்டிகினு வீட்டுல  போய் சத்தமில்லாம  தூங்கிறரான்  விடிஞ்ச ரொம்ப தெளிவா பொழப்பை பார்த்து  தானும்  சந்தோசப்பட்டு   மற்றவர்களையும் தொல்லை பண்ணாமல் இருக்காய்ங்க பாருங்க  அது தான்      ராஜபோதை. 

தொடரும்...... 
ரொம்பநாளா விளக்கம் கேட்டு தொந்தரவு பண்ண மக்காஸ்  இதுதம்யா போதையின் உள்குத்து ரகசியம்.

இப்ப இதுல யாரு யாரு எந்த எந்த கேட்டகிரின்னு சண்டை போடாம.... அப்படியே முடிஞ்ச பின்னூட்டத்திலும் செப்பலாம்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

 மக்காஸ்,.... மூன்று போதையும் ஒரே  இடத்துல


இப்பொழுதும் எப்பொழுதும் முப்பொழுதும்

முப்போதையும் மூவர்ணத்தில்

அகர வரிசையில்...அ ,  ஆ , ரா .
முக்கிய குறிப்பு:   ஸ்பேம் பாக்ஸ்  

Monday, July 23, 2012

 எம்புட்டு பேரு கெறங்கி கெடக்குறாங்கஇதுக்கு பேர் தான்.... கிடுக்கு  பிடியோ
வாழ்வா சாவா.... 
 

பிரிந்தவர் கூடினால்.......


ஷ்... ஒரே.. வலிப்பாகீழ் காணும் முன்று மற்றும் நான்காவது (பொள்ளாச்சி) படங்களை எடுத்தது மனசாட்சி தனது காமரவில், எடுத்த இடம் கோவை வ உ சி பூங்கா:  நாங்களும் ப்ரோபஸ்னல் போட்டோகிராபர் தானுங்கோ


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இந்த படம் ஒலக  சிறப்பு மிக்கதுங்க ஏன்னா,

இரு பதிவர்கள் சந்தித்து கொண்டது இங்கு தான். 

பொள்ளாச்சியில் உள்ள  பண்ணை வீடு,  கடந்த ஜூன் (2012) மாதம் ஒரு மாலை  பொழுதில் பிரபல பதிவருடன் நாட்டு நடப்பு பேசி,.. நீராகாரம் முடித்து... சிறப்பான சந்திப்பு.

மனசாட்சியை வந்து சந்தித்த பதிவர் இந்திய புகழ் பெற்ற பிராப்ள ச்சே பிரபல பதிவர்........,. யாருன்னு சொல்.... அவருதான் பிரபலமாச்சே.

(யோவ், யாருன்னு வெளக்கமா சொல்லும்மோய் ஒண்ணும் வெளங்கல..... யாருல அது அங்கிட்டு சவுண்டு உட்றது பிச்சி புடுவேன் பிச்சி)


விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கொய்யால இப்ப தான் புரியுது அம்புட்டு

பெரும் ஏன் கெறங்கி கெடக்குறாங்கன்னு

மல மல கல கல ன்னு...சிரிப்பை சொன்னேன்


முக்கிய குறிப்பு:

பின்னூட்டங்கள், ஸ்பேம் பாக்ஸ்  - விழிப்புணர்வு  

Wednesday, July 18, 2012

பில்லா 2 - தல வழி

காலங்காத்தாலைல இருந்தே நொய்யு நொய்யுன்னு.......அடேய்  நாதாரி இந்த கொசு தொல்லை தாங்கலடா....

என்னதானுங்டா உங்கபிரச்னை?

அண்ணே நீங்க ஒரு மேதைன்னே..

அடேய் ங்கொக்கமக்கா நிர்த்து .....மேட்டருக்கு  வா

அண்ணே சகுனி படத்துக்கு விமர்சனம் பண்ணீங்

கொய்யாலே நா எப்படா பண்னேன்?

இல்லீங்னே கருத்து சொன்னீங்

ஆமா சொன்னேன் - சகுனி - முடிச்சவுக்கி.... அதுக்கு இப்ப என்னாங்கற.?

எப்டீங்ணே?

டேய் அதுக்கெல்லாம் லிவர் வேல செய்யணும்டா கோமுட்டிதலையா.... அந்த படத்துல எத்தனை முடிச்சை சகுனி அவுக்காறு (படத்திலும் இடைவேளைக்கு முன்  ஒரு டயலாக் இருக்கே)  அதை தான்டா ஒத்தை வார்த்தையில் சொன்னேன்.

அண்ணே இந்த லிவருன்னா ?..

தெரியலயா? அதுக்குத்தான்டா ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்றது, அடேய் கோமுட்டி தலையா, மூளை மட்டும் வேலை செஞ்சா போதாது, லிவரு அந்த லிவருதான்டா முக்கியம், லிவரு போச்சுன்னா நீயும் போயிருவ ஸ்ட்ரெயிட்டா ஊ ஊஊதான்.

அண்ணே எல்லாம் சரிண்ணே இப்ப தல நடந்திருகற ச்சீ நடிச்சிருக்கற பில்லா - 2 அதுக்கும் உங்க விமர்சனம் ?

டேய் ஸ்டாப்பு நோ விமர்சனம் ஒன்லி சிங்கிள் வேர்டு

பில்லா II - தல வலி 

என்னனே இப்புடி சொல்லிபுட்டீங்க...

வேற எப்பட்றா சொல்லணும் பாஸ்பரஸ் வாயா..?

அடேய் அந்த படம் நீ பார்த்தயில்ல ஆரம்பச்சதுல  இருந்து முடியிற  வரைக்கும் தல போகற வழியெல்லாம் எம்புட்டு வேதனை, ரணம் இவ்வளவு சிக்கல் (படத்துல தலயோட டயலாக் 'என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா”) அதெல்லாம் வலிதானடா கோமுட்டி தலையா அதான் சொன்னேன் பில்லா II  தல வலின்னு .

அண்ணே இன்னும் வேற ஏதோ கருத்துன்னு சொன்னீங்களே?

அதுவாடா,  இங்க பதிவுலகத்துல சினிமா விமர்சனம் பண்றவங்க  கொள்ள பேரு இருக்காங்கடா மொதல்ல அவுங்க எல்லாம் சொல்லட்டும் அப்பறமா நாம சொல்லலாம்..


அண்ணண்ண்ணே ....


என்னடா சவுண்டு?


அண்ணே,, அடுத்து துப்பாக்கி வருது.....

ஓங்கி அப்புனன்னா உங்கன்னத்துல சவுண்டும் வரும், அடுத்து துப்பாக்கி வரும்.....விஸ்வருபம் வரும்... கோச்சடையான் வரும்...... அதுக்கு என்னடா இப்ப? ...               அடேய் கிளிசரின் தலையா எல்லாம் வரட்டும்டா  வச்சிக்கலாம்..

எப்புடின்னே இப்படி எல்லாம் திங் பண்றீங்க?

அதத்தாண்டா சொன்னேன் கோமுட்டி தலையா லிவருன்னு

அண்ணே எனக்கும் சொல்லி தாங்கண்ணே

அடேய் கோமுட்டி மண்டையா  இதெல்லாம் சொல்லி வரக்கூடாதுடா தானா வரணும்,,,.. அதுக்கு நீ ஒரு நாலு விசயத்தை தூக்கி கடாசனும்  முடியுமா?

என்ன அண்ணே அந்த நாலு விஷயம் ?

அப்பூடி  கேளு,

அரசியல், சினிமா, ஜாதி, மதம்  இந்த நாலையும் தூக்கி  அப்பாலிக்கா  வச்சுட்டு  சாதாரணமா எலும்பு,  சதை, ரத்தம்,  மனசாட்சி உள்ள மனுசனா தமிழனா  வா எப்பூடின்னு சொல்லி தாரேன்.

இப்ப அந்த கிளாஸ் எடு  லார்ஜை உத்து..    தொடரும் 


Sunday, July 15, 2012

இப்படியும் ஒரு பதிவர் - நல்லா வருவீக

வணக்கம் நண்பர்களே

ஒரு முறை அடித்தால்  சரி தெரியாமா கை பட்டுடுச்சி, ஒக்கே.

மீண்டும் அடித்தால் என்ன அர்த்தம் கொழுப்புன்னு அர்த்தம்.

மனசாட்சி ஏற்கனவே தனது பதிவில் வலை பூக்களில் கமண்ட்டு போட்ட அதுவாவே டிலிட் ஆவுதே இல்ல டிலிட் பண்றாங்களா புரியலையே  கேட்டு இருந்தது.

இதுக்கு நண்பர் குருவியார் கூட நான் அப்படி அல்ல என்று விவரமாக விளக்கமாக காமடியாக ஒரு பதிவே போட்டார் மனசாட்சி உள்ள குருவி .

சரி மேட்டருக்கு வாரேன்.... சரின்னு அமைதியா  விட்டுட்டேன்.

சமீபத்தில், சில பதிவுகளை  படித்து விட்டு   கமண்டு  போட்டேன்  கொய்யாலா மீண்டும் பழைய அதே சம்பவம், ஒரு வேளை ஸ்பேம் பொட்டில விழுந்து இருக்கும்னு,  நினச்சி   -  மீண்டும் கமன்ட் போட்டேன்  (please release my comments from your spam box )  தமிழ்  மற்றும்  ஆங்கிலத்தில்  போட்டேன்... கொன்னியாள அதுவும்   வரல....கமன்ட் போட்டதும் இருக்கும் ரீ பிரெஸ்  பண்ணா  ஓடி  போய்டும்.
  
சில   பதிவர்கள் செவி சாய்த்தார்கள் ஆனா சில  பதிவர்கள்்.?!  தொடர்ந்து கூறியும் செவி சாய்க்காத... அந்த ஆணியே புடுங்கவேண்டாம் என முடிவு செய்து தெரிஞ்சவங்களா   போனதால் தூக்கி  விட்டேன்  என் தெரிஞ்சவங்க லிஸ்ட்ல இருந்து,    இல்லைனா,..... 

அவர்களின் பதிவு லிஸ்ட்ல வரும்  போய்  படிக்கணும் கமண்டனும்  அவுக    டெலீட்  பண்ணுவாக  தேவையா?????  என்ன மக்காஸ் சர்தானே. (எதோ நம்மால் முடிந்தது)  ஏன்னா எந்த பதிவு படிச்சாலும் மனசாட்சி வந்து போன சுவடு விட்டு வருவது வாடிக்கை.

(மனசாட்சி போட்ட காமன்டுகள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சிருக்கேன் தேவைனா ரீலிஸ் பண்ண வேண்டியது தான்... நண்பர்கள் வேண்டுதலுக்கு இணங்கி இப்ப வெளியிடல)

அதே நேரத்தில் புரிந்து கொண்ட அன்பு உள்ளம்  பதிவர் சிட்டுகுருவி

மனசாட்சி கமண்டு ஸ்க்ரீன் ஷாட் :

புரிந்து கொண்ட அன்பு நெஞ்சம் பதிவர் கலாகுமரன்

இதோ அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்:மனசாட்சியின் வேண்டுதல் என்னான்னா - தயவு கூர்ந்து உங்களின் பதிவை வெளியிடும் முன் உங்களின் முந்தைய பதிவு கமன்டுகள் எதாவது ஸ்பேம் பெட்டியில்...பாருங்கள்.....ரீலிஸ் பண்ணுங்கள்..

இல்லை என்றால்  உங்கள் விருப்பம் டிலிட்...... எப்படியோ... அதுக்கு  கமன்ட் பெட்டியே நீக்கிவிடலாமே!!??   நல்லா வருவீக.கொசுறு: ஏலேய் மாப்ளைங்களா உங்களுக்கு அந்த பதிவரின் லிங்க் அனுப்புறேன்.

Saturday, July 14, 2012

இப்பெண்ணின் பார்வையால்

வணக்கம்

   
பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய் ஒரு துளி 25 லிட்டர் தண்ணீரை மாசுபடுத்த முடியும்

மிக உயரமாக வளரும் கற்றாழை (saguaro cactus)  20 மீட்டர் உயர் வரை வளர்ந்து 300 ஆண்டுகள் வரை வாழும்

சராசரி வாடிக்கையாளர் எதையும் வாங்கும் முன்பு பேரங்காடியில் 15 நிமிடங்கள் செலவழிக்கிறார்கள்


நாக்கு தான் உடலில் வலுவான தசைநெருப்புக்கோழி மட்டுமே  சிறுநீர்ப்பை கொண்ட பறவை
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


எல்லோரும்  சொல்கிறார்கள்  காதல் இல்லாமல்
வாழ முடியாது என்று..??!!

ஆக்சிஜன் மிகவும் முக்கியமானது
என்று  மனசாட்சி  நினைக்கிது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இந்த பார்வையால் தான் பல பேர் செத்து செத்து பொழைக்கிறான்   

Wednesday, July 11, 2012

நெஞ்சில மாஞ்சா இருக்கா

வணக்கம் 


அரசியல்வியாதிகள் 

நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க

பொது கணக்கு

ஏன் நம்பர் எல்லாம் ஒண்ணு ரெண்டுன்னு இருக்கு?  அப்படின்னு என்னைக்காவது தோணுச்சா.. 


1 அப்படின்னா ஒண்ணு, 2  அப்படின்னா இரண்டு, இதுக்கு ஏதாவது காரணம் இருக்கணுமே.... இருக்கு எல்லாமே கோணங்களை  அடிப்படையாக கொண்டு,, எத்தனை கோணம்  இருக்கோ அதை பொறுத்தே, 
எப்பூடி 
1 க்கு ஒரு கோணம் 
2 க்கு  இரண்டு கோணங்கள் 
3 க்கு மூன்று கோணங்கள்  
பாருங்கள் இந்த படத்தை:வணிக கணக்கு 

 

ஆண்  : தேவையான  ஒரு பொருளுக்கு ரூ 2 கொடுத்து வாங்குவான்.

பெண் : தேவையில்லாத இரு பொருள்களை  ரூ 2 கொடுத்து வாங்குவாள்.


அலுவலக கணக்கு

புத்திசாலி  முதலாளி + புத்திசாலி ஊழியர் = இலாபம்

புத்திசாலி முதலாளி + மொக்க  ஊழியர் = உற்பத்தி

மொக்க  முதலாளி + புத்திசாலி ஊழியர் = பதவி உயர்வு
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

நெஞ்சில மாஞ்சா இருந்தா புட்றா பாப்போம்....   

Monday, July 9, 2012

எளங்குட்டி....மூடுக்கு பாமாயிட்டேன்

வணக்கம் 


இந்த பதிவில் விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு,

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல - எல்லாம் கலந்த கலவையாக 

இரவில் படுக்கையில் தூக்கம்  வராமல் புரளுகையில் ஏதேதோ நினைத்துக்கொண்டு...ஒரு எண்ணம்  முளைத்தது அதை படாத பாடு பட்டு அடக்கி கொண்டேன். (அந்த மிருகம் அடங்க வில்லை பாக்கலாம் பாக்கலாம் எம்புட்டு நேரத்து அடக்கி வைக்கிறாய் என்று)

 எப்பவும் போல் அன்றும் விடிந்தது காலை உணவுக்கு பின் எந்த வேலையும் இல்ல (ஆணிக்கு விடுமுறை) என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் போது தனிமை கொடுமையானது  பொசுக்குன்னு ஒரு எண்ணம்  (அதான் அந்த மிருகம் விழித்துக்கொண்டது) மனதுள் வந்தது வந்த எண்ணமோ  நேரம் ஆக ஆக கூடியதே தவிர குறைந்த பாடில்லை சரி ஆசை பட்டுட்டோம் அனுபவித்து விட வேண்டியதுதான் இருந்தாலும், அம்மணிகிட்ட ஒரு வார்த்தை கேட்ருவோமே என உள்ளம் சொல்ல ச்சே இதை எல்லாம் எவனாவது போய் கேட்பானா தேவை இல்லை என மனமும் மூளையும் ஒரே போராட்டம் கடைசியில்  மனசாட்சி வென்றது -(எதையும் மறைப்பதில்லை.. நம்ம பாலிசி) 

அம்மணிக்கு போனை போட்டேன் (அம்மணி அருகில் இல்லை, இருந்தால் இந்த ஆசையே வந்து இருக்காது) திடீர் எண்ணத்தை  மெதுவா சொன்னேன்.

அம்மணி : நீங்க என்ன லூசா ஏன் உடம்பை கெடுத்துக்க...போறீங்களா???? அடங்க ........................? கொ.............? டை..................?..........................?...........................???
ஆசையாம் ஆசை.....ஏகப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் கூறி (காரியம் ஆவணும்னா) முடிவில் என்னமோ பண்ணி தொலையுங்கள்.

ஷ்..யபா..அப்புறம் என்ன,.. அம்மணியை  சமாதானம் பண்ணியாச்சி...(நினைப்புதான்)  ஒக்கே சொன்ன பிறகு, அடங்குவானா இன்னும் கூடுதலாக  எண்ணம்  வெறியானது.


க்ளோஸ் நண்பர்களுக்கு தொலை பேசியில் தகவல் சொன்னதும்.........தல, மாப்ளே,,,இதை இதை தான் எதிர்பார்த்தோம் காஞ்சி போய் இருக்கோம் ஒக்கே ஒக்கே.

எம்புட்டு சந்தோசம் பய புள்ளைங்களுக்கு...ம்    சரி ரெடி பண்ணிட்டு கூப்டறேன்..


எனது நெருங்கிய (உங்க பாசையில் அல்லக்கை)  நண்பனை (அவன் என்னை சார் என்று தான் அழைப்பான்) அழைத்தேன் விடயம் சொன்னேன் - உடனே புறப்பட்டு வருவதாக  சொன்னான்.(பயபுள்ள அவனும் ஏங்கித்தான் கிடக்காம் போல)    சரி...

அவன்  வருவதால் என் காருக்கு வேலை  இல்லையே என்று ரெண்டு லார்ஜ் போட்டு மூடுக்கு பாமாயிட்டேன்...( சரக்கை தொட்ட கைகளினால் கார் ஸ்டீரிங் தொட மாட்டேன்....)

இனி நண்பனது வண்டியில்:


சார் எங்கே போகணும்? இளங்குட்டியா  இருக்கணும்  அப்பத்தான்  நல்லா   இருக்கும்  எங்கே இருக்கோ  அங்கே போ.. எங்கோ யாருக்கோ போனை போட்டான்....ஒக்கே ஒக்கே இரண்டு  இடங்களில் விசாரித்து முடிவில் இருக்கும் இடம் தெரிந்து,.... இளசுதான்....ம்  குட்டி கிடைத்து விட்டது. 

சார் எங்கே போகணும்? நேர வீட்டுக்கு போ - வரும் வழியில்  ஏதோ  ஞாபகம் வர....செல்லம் முக்கியமான ஒரு ஐட்டம்   இல்ல அது வேணும்...

கண்டிப்பா வேணுமா சார் - ஆமா அது இருந்தான் ரொம்ப நல்லா  இருக்கும், எனக்கு அது இல்லாம முடியாது. எதை பண்ணுனாலும் தெளிவா முறையா பண்ணனும்.

மீண்டும் கார் அது இருக்கும் இடம்   நோக்கி பயணித்தது பல கடைகளில் கேட்டும் அது  இல்லை வெறுத்துட்டேன் (என்ன சோதனை) முடிவில் பழைய ஞாபகம் வர சரி... நேர அங்கே போ என்று கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் பயணம் செய்து..... வாங்கி கொண்டு வீடு வந்து......யப்பா போதும்டா சாமி இப்பூடி ஆசை படுவானேன்  இபூடி அலைவானேன்.... இதுக்கு பேசாம....!?%#. ச்சே என்ன வாழ்க்கைடா..


அம்மணியிடம் இருந்து அழைப்பு, என்ன முடிஞ்சுடுச்சா? சந்தோசமா ஆசை அடங்கிடுச்சா??

இல்லைடா செல்லம் கேப் விட்டு போச்சா  அதான்   கொஞ்சம்   பயமா  இருந்துச்சி ஆனா ஹி ஹி நல்லா...ஹி ஹி.

ஏது  கேப் விட்டு போச்சா, இந்த விசயத்தில்,... உங்களுக்கு தான் கைவந்த கலையாச்சே..சரி சரி போதும் இந்த மாதிரி அடிகடி பண்ணி உடம்பை கெடுத்துக வேணாம்    என்னை கூப்பிட்டு அனுமதி கேட்டதால் இன்னைக்கு மட்டும்  மாப்பு... (மவராசி நீ நல்லா இருக்கோணும்) அப்பாடா...அப்புறம் என்ன, எல்லாம் முடிச்சிட்டு...!!!!! நண்பர்களை அழைத்தேன் வந்தார்கள் ரெண்டை வீசினார்கள் முறையா சுவைத்தார்கள் ரொம்ப நாளாச்சி தல இந்த மாதிரி பிரியாணி சாப்பிட்டு மனதார வாழ்த்தி சென்றார்கள்.

டிஸ்கி : இளங்குட்டி   வெள்ளாடு  - அலைந்து வாங்கிய ஐட்டம் மல்லி இலை.. பொதுவாக கடைகளில் நான்வெஜ்  சாப்பிடுவது இல்லை அத்துடன் கடந்த ஒரு வருடமாக மட்டன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். எல்லாமே எதுனாலும்  சொந்த சமையல் தான்.


இந்த பதிவில் இருக்கும் படங்கள் சும்மா கலர் புல்லா இருக்குமேன்னு ஹி ஹி ஹி நன்றி கூகிள்.

Wednesday, July 4, 2012

ரசிக்க.. சிரிக்க.... சிந்திக்க - 18+

வணக்கம்


இந்த பதிவு முழுக்க முழுக்க வீடியோ கிளிப்கள் ஒரு மாறுதலுக்காகயானை மசாஜ் செய்ய ஆசையா? தாய்லாந்தில் இது எல்லாம் சகஜம்

பாருங்கள் வீடியோ:

இந்த ஆட்டத்தை நேரில் பாக்க ஆசையா? ஆப்பிரிக்கா தான் போகணும் இல்லைனா ஆப்பிரிக்கா பப் உள்ள ஹோட்டலுக்கு போகணும்.

ஏதோ இப்படியாவது பாப்போமே..

பாடல் அரபி மொழியில் ஆடலோ ஆப்பிரிக்கா வழியில்:

பாருங்களேன்:
இந்த வீடியோ கிளிப் நீங்க தான் கருத்து சொல்லணும்

மனசாட்சி மிரண்டு போச்சி.... எப்பூடீ இப்பூடி??
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

வாழ்ந்தா இப்படி வாழனும் - சிந்திக்கவும்  பாருங்க:விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

எம்புட்டு நாளைக்கு புகை படங்காட்றது ஒரு மாறுதலுக்கு படம் காட்டுவோமே எச்சரிக்கை 18 + (மன்னிச்)
Tuesday, July 3, 2012

அந்த பதிவுக்கு எதிர் பதிவு அல்ல

வணக்கம்


எலி பிடிப்பது எப்பூடின்னு மாப்ளே ஜீவா (கோவை நேரம்) ஒரு பதிவு போட்டாருங்க எலிய புடிச்சி காக்காவுக்கு போடணுமாம் சின்ன்ன புள்ள தனமாலே இருக்கு,          மாப்ளேயே, எலி வேட்டை ன்னு ஒரு பதிவ தேத்தும் போது  நாங்கெல்லாம்  யாரு  விடுவோமா  தேத்திடோம்ல ஒரு பதிவ ஹி ஹி ஹி.,

எலிய  புடிச்சி பயபுள்ள என்ன பண்ணுது வாங்க பாக்கலாமா:

இதயம் பலகீனம் உள்ளவர்கள்  நேரடியாக,..

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல பகுதிக்கு செல்லவும்


(வழக்கம் போல் படங்களை பெரிது பண்ணி  பார்க்கவும்)

புடிச்சாச்.....


கிழிச்சாச்

யப்பா... சுத்தம் செய்தாச்

குச்சியில் சொறுகியாச் அதான்  கப்பாப்  கப்பாப்...

சுட்டாச்...... அப்பறமென்ன ஹி ஹி ஹி


இப்பூடி  சுட்டு  மக்காள்,  சைனாக்காரன் சாப்புடுறான்.
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


உங்களை நேசிக்கும் ஒருவர் தான் நித்தம் உங்களுடன் சண்டை போடுவார் எந்த காரணமும் இல்லாமலே,..

ஆனால்,

எப்ப எல்லாம் நீங்கள் கவலையுடன் சோர்வுற்று இருப்பிர்களோ

அப்போதெல்லாம் உங்களை நேசிப்பவர் உலகத்துடன் போராடி உங்களின் கவலையை போக்குவார்.

அதுக்கு பெயர் தான் உண்மையான நேசிப்புவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

எலி பதிவுல என் படமா மனசாட்சியே இது முறையா???

விழியே  விழியே உனக்கிந்த கோபம்

விருந்துக்கு வாரீய்யா எலிக்கறி சாதம் 
டிஸ்கி : விரைவில் உங்கள் மனசாட்சி வெளியீடும் பதிவுகள்  


காமம் காதல்  சிறப்பு பதிவு.

போதை சரக்கு  ஆய்வு பதிவு.