நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, September 10, 2012

எப்படி எல்லாம் பதிவ தேத்துறாங்..

வணக்கம்


உன்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
உன்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
என்னை போல.


கண்ணில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில்  இடம் பிடித்த அனைத்தும் அருகில்  இருப்பதில்லை
இது தான் வாழ்க்கை.


நீ தேடும் போது  உன் அருகில் நான் இல்லை ஆனால்,
நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன்
உன் அன்பு நிஜம் என்றால்


மேலே படித்தவை எனக்கு வந்த  குறுஞ்செய்திகள் (SMS)... (எப்படி எல்லாம் பதிவ தேத்தற -அய்....தலைப்பு)


அலைக்கு குதிரையின்  வேகம்

குதிரைக்கு அலையின் வேகம்

ஒ...அலைக்குதிரையோ....
 முகநூலில் பெண் போடும் ஸ்டேடஸ்:

நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.

லைக் 91

கமெண்ட்:
 1. அவேசொம்
 2. அடுத்த வாட்டி நாம சேர்ந்து போலாம்
 3. என்னை விட்டு தனியாவா போன
 4. வாவ் - அருமையான அனுபவம்
 5. என்ன ஒரு அற்புதமான அனுபவம்

முகநூலில் ஆண்  போடும் ஸ்டேடஸ்:

நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.

லைக் 0

கமெண்ட்:
 1. இதே பொழப்ப போச்சுடா உனக்கு
 2. அதுக்கு நாங்க என்ன பண்றது
 3. ஓசில பயணம் அதையும் ஸ்டேடஸ் வேற போடுறீயா
 4. அடேய் நாதாரி பேசாம, அந்த பஸ்ஸில் கண்டக்டர் ஆயிடு.
 5. மவனே அப்படியே போயிடு..திரும்ப வராதே


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

சந்தோசமான வாழ்க்கைக்கு  ஏழு வழிகள்
 1. நேரம் தவறாமை
 2. எளிமை
 3. ஏமாத்த கூடாது
 4. எதிர்பார்ப்பை குறைக்கவும்
 5. கடின உழைப்பு
 6. எப்பவும் முகத்தில் புன்னகை
 7. நல்ல உறவுகள்/நட்புகளை உடைக்காதே  

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இதுக்கு எந்த மாதிரி கமன்டலாம்னு யோசிச்சேன்.....சேன்.

பிங்கி பிங்கி பாங்கி....
இதழோ  மொத்த வங்கி 
 கரு விழியில் மயங்கி 
சொல்ல வந்தேன்  தயங்கி..
பிங்கி பிங்கி பாங்கி

போடா மங்கி (மைன்ட் வாய்ஸ்...கேக்குதுப்பா)