நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, June 20, 2012

திருமணத்துக்கு பின் இது சகஜமா

ஒரு காலத்தில், ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டுவிழா  கொண்டாடினார்கள்

அவர்கள் இருவருக்குள்ளும் 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு மோதல், சண்டை சச்சரவு,  குக்கர் மூடி வீசுறது, பூரி கட்டை எறிவது இது எல்லாம் நடந்ததே இல்லை. இந்த செய்தி நகரில் பிரபலமாக,
 
உள்ளூர்  செய்தித்தாள் ஆசிரியர் இந்த ரகசித்தை  கண்டு  பிடிக்க  ஆவல் கொண்டு, தம்பதிகளை சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

அதன் பின் நடந்த உரையாடல்:


ஆசிரியர்:.. "ஐயா, இது அதிசயமாகவும்  நம்பமுடியாததும்  எப்படி இந்த சாதனை செய்ய முடிந்தது?

தனது பழைய தேனிலவு நாட்கள் நினைவுக்கு வர  கணவர் கூறினார்:


"நாங்கள்  திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு ஊட்டி போயிருந்தோம் .
இறுதியாக  குதிரை சவாரி செய்யாலாம் என்று  இரண்டு வெவ்வேறு குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாங்கள் சவாரி தொடங்கினோம்.


என் குதிரை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் என் மனைவி சவாரி செய்த குதிரை ஒரு   பைத்தியக்காரன் போல் தெரிந்தது.


போகும்  வழியில் அந்த குதிரை என் மனைவியை  திடீரென்று குதித்து
 கவிழ்த்தது, நிலத்தில் இருந்து தனது நிலையை மீட்டு,
என் மனைவி மீண்டும் குதிரை  சவாரி செய்யும் முன்  "இது உனக்கு முதல் முறை ஆகும்" என்றார்.


அவள் மீண்டும் குதிரை அமர்ந்து  சவாரி தொடர்ந்தது.  பிறகு
அதே போன்று மீண்டும் நடந்தது.
அவள் இந்த முறை மீண்டும் அமைதியாக வந்து  "இது உனக்கு இரண்டாவது முறை ஆகும்" என்று தொடர்ந்தார்...

குதிரை அவளை  மூன்றாவது முறை கைவிடப்பட்ட போது, அவள்  அமைதியாக பர்ஸ் இருந்து சுழல் துப்பாக்கி எடுத்து குதிரையை சுட்டு விட்டார் !


நான் என் மனைவிடம்  கத்தினேன்: "நீ என்ன காரியம் செய்தாய் ஒரு அப்பிராணியை கொன்று விட்டாயே . நீ என்ன பைத்தியமா? 

அவள் ஒரு அமைதியான பார்வை பார்த்து விட்டு  கூறினார்:.

"! இது உங்களுக்கு முதல் முறை" "

கணவன்:  "அது தான்..... அதன் பிறகு நாங்கள் இப்போது வரை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்."

டிஸ்கி :  ஹி ஹி ஹி இதிலிருந்து அறியப்படும் நியதி என்னவெனில்....திருமணத்துக்கு பின் இதுவெல்லாம் சகஜமப்பா.
கட்டிக்கிட்டு ஆடுறது கட்டாம ஆடுறது அதான் சலங்கை இது எல்லாம் கல்யாணத்துக்கு முன்.....கால் கட்டு போடணும் கால் கட்டு போடணும் சொல்வாங்களே அதன் இதா ம்விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

ஏய்ய்ய்   வர்றீய்யா... ஒத்தைக்கு ஒத்த போட்டு பார்த்திடுவோம்
 
நம்புங்க, இந்த பதிவுக்கு அடிப்படை காரணம் மச்சி வீடு சுரேஷ்  இங்கே . இது  எதிர் பதிவு,.. இல்ல   ஆதரவு பதிவு,... எப்பூடீ வேணாலும் எடுத்துக்கோங்க  அது  உங்கள்  விருப்பம். 

66 comments:

 1. பிடி!!! பிய்த்துவிடு!!!
  விடாதே!! குத்து!!!!!

  #ங்கொய்யாலே, என்னைய்யா எழுதி இருக்க?

  அம்மாவப் பாத்த அமைச்சராட்டம், அரைவாசிக்கு மேலே தூக்க முடியல...

  :-)

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டாருய்யா விளங்கிடும்.....அரை அடித்தால் தூக்கிவிட ஆள் வேணும் அப்பு இல்லைன்னா குப்பறைக்கா விழுந்து தான் கிடக்கணும்

   Delete
 2. தொப்புள் தெரியாத படம் போட்டதுக்கு வன்கண்டனங்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. நொள்ள கண்ணா உத்து பாரும்வோய்

   Delete
  2. யோவ்... அந்த தொங்குற கயிறு மறைக்கிதுய்யா!

   Delete
 3. //ஏய்ய்ய் வர்றீய்யா... ஒத்தைக்கு ஒத்த போட்டு பார்த்திடுவோம்///

  எங்க எங்க?

  எப்போ எப்போ?

  :-)

  ReplyDelete
  Replies
  1. ஏன் இம்புட்டு பரபரப்பு

   Delete
  2. ஏன்யா, ஒரு பொட்டப்புள்ள ஒத்தைக்கு ஒத்தை வாறியானு கேக்குது! பொறவு எங்கனு கேக்கலைன்னா, நானெல்லாம் ஆம்பிளையா?

   Delete
  3. முடிவோட களம் இறங்கிடீங்க போல

   Delete
 4. கால்கட்டு பற்றி நல்ல விளக்கம்ங்க...

  நல்லவேளை மனுசன் ஒரு முறை மட்டும் தான் வார்னிங் வாங்குனார்!

  ReplyDelete
  Replies
  1. ஆமா நண்பா அதான் 25 ஆண்டுகள் ஹிம்

   Delete
 5. ஒத்தைக்கு ஒத்தையா நான் ரெடிங்கோ மக்கா...!

  ReplyDelete
  Replies
  1. மக்கா என்னாது ரெடி ஆஆ

   Delete
  2. பின்னே ஒத்தைக்கு கூப்பிட்டாங்களே ஹி ஹி....

   Delete
 6. சரியான கதைதான் போங்க ஹ ஹ ஹ ம் (:

  யாரையோ சண்டைக்கு இலுகேறீங்க போல
  ஜொள்ளு & சொல்லில்

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க தோழா

   ஆடு இன்னும் சிக்கல

   Delete
 7. அண்ணேன்!! அக்கா!!
  கொலைவெறில திரியுறேன்...

  யாராச்சும் சண்டைக்கு வாங்களேன்!!!

  #இங்கே யாரேனும் அடுத்த கமண்ட் போட்டால், அவர்களுடன் சண்டை நடக்கும் என்பதைத் தெரிவித்துக்கொல்கிறேன்!

  ReplyDelete
 8. போட்டாச்சி கமண்டு
  #ங்கொய்யாலா....வாயா வா வா போட்டு பார்த்துடுவோம்

  ReplyDelete
  Replies
  1. யோவ்! போய்யா!!!
   போயி முறுக்கு வாங்கிட்டு வந்து, ஓரமா ஒக்காந்து வேடிக்கை பாரும்!!

   Delete
  2. யோவ் பொருயா...அடுத்த ரவுண்ட போட்டுட்டு வாழேன்

   Delete
  3. மிக்ஸ்ர் தான் இருக்கு

   Delete
  4. போய்யா! போயி தண்ணியக் குடியும்!!!

   Delete
 9. Replies
  1. வாங்க மச்சி வாங்க

   Delete
 10. என் மேல இம்புட்டு பாசமா...?நெனைச்சா அழுகையா வருது ஆனா நான் அழுது அந்த சோகம் உங்களை தாக்கிருமோன்னு...ச்சீ டயலாக் மாறிப் போச்சு

  ReplyDelete
  Replies
  1. அப்ப சொல்ல வந்த டயலாக்கு

   Delete
 11. குக்கர் மூடி வந்தாலும்
  குனிய வைத்து கும்மினாலும்....!
  பூரிக்கட்டையில் மாத்து
  கோக்குமாக்காக வாங்கினாலும்
  யாம்...அஞ்சலி புகழ் பாடுவதில் இருந்து
  பின்வாங்கமாட்டோம்!

  மண்டைவீங்கியசாத்தனார்!

  ReplyDelete
 12. யோவ் வெளங்காதவன் இப்ப வாய்யா பாக்கலாம்

  ReplyDelete
 13. வாங்குக சினிமாபுக்கு அதிலிருக்கும் -அஞ்சலி
  படம் வெட்டிச்சுவற்றில் ஒட்டு

  ஜொள்ளுவர்

  ReplyDelete
 14. யோவ் வெளங்காதவன் இப்ப வாய்யா பாக்கலாம்
  //////////////////////////////
  பயபுள்ள மட்டையாகி ரொம்ம நேரமாச்சு மாம்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. இம்புட்டுதானா வீரவசனமெல்லாம் ஹே ஹே ஹே

   Delete
 15. நடத்துங்க...

  ReplyDelete
 16. பயபுள்ள இருபத்தைந்து வருசமா சிக்காம தப்பிருக்கான் பாருங்க :D

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா பயபுள்ள உசாரா இருந்துருக்கு

   Delete
 17. உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?


  Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை
  மேலும் விபரங்களுக்கு  http://www.tamilpanel.com/  நன்றி

  ReplyDelete
 18. மாம்ஸ் உங்க சொந்த கதை, நொந்த கதையா???

  ReplyDelete
  Replies
  1. யோவ் மாப்ளே இது என்ன புது கதை

   Delete
 19. இது உனக்கு முதல்முறை மாம்ஸ்...புரிந்தால் சரி....ஹா...ஹா...ஹா....

  ReplyDelete
  Replies
  1. ஆமா குருவியாரே நல்லாவே புரியுது

   Delete
 20. வீட்டுக்குள் தோல்வியை ஒப்புக் கொள்பவன்
  வெளியில் ஜெயித்ததாகத் தெரிகிற மாய விளையாட்டே
  திருமணம்.அதைச் சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு

  ReplyDelete
  Replies
  1. சரியா புரிந்து கொண்டீர்கள் நன்றி

   Delete
 21. இப்பத் தெரியுது ..நாங்க அன்யோன்யமா இருக்கோம் சண்டையே போட்டுக்கிறதில்ல னு சொல்றவங்க வீட்ல என்ன நடக்குதுன்னு..

  ReplyDelete
 22. ஹி,..ஹி...எங்க வீட்ல துப்பாக்கிக்கு பதில் பூரிக்கட்டை

  ReplyDelete
  Replies
  1. இப்படி எல்லாம் ரகசியத்தை வெளியில் போட்டு உடைக்க படாது ஒக்கே

   Delete
 23. யாரிந்த ஈஸ்வரி....திமிரு-2 எடுத்தா அந்த ஈஸ்வரி கேரக்டருக்கு பொருத்தமா இருப்பார்.

  ReplyDelete
 24. உண்மையாலுமே என்னை மறந்து சிரிச்சேன் .அருமை .உங்கள் வீட்டிலும் இதே நிலைமையோ ! ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. சந்தோசமா சிரிசீங்களா அதான் அதைத்தான் எதிர்பார்த்தேன் - எங்க வீட்டிலா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 25. குடும்ப உறவுகள், குதூகலங்கள் -பிண்ணனி தெரிந்தால் பிரச்சனைதான்! நல்லா சொல்லிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றி ஆபிசர்

   Delete
 26. மாம்ஸ்...அம்மணி...ஒத்தைக்கு ஒத்தைக்கு போட்டு பார்த்துடுவோம்னு கூப்பிடுது....இருங்க ...... வாரேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாப்ளே,, ஏன்....? சர்தான்.... குந்திகிட்டு இருக்கேன் வாரும்

   Delete
 27. nice, good enjoyable comments.

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...