நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, November 19, 2011

மாரடைப்பைத் தடுக்கும் ஸ்டெம் செல்கள்!

இதய நோயாளிகளின் ஸ்டெம் செல்களை எடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப் பதாக அமெரிக்காவின் லூயிஸ்வில்லா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்ட 16 நோயாளிகளுக்கு அவர்களின் ஸ்டெம் செல்களை எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓராண்டுக்குப் பின்னர் அவர்களின் இதய செயல்பாடு 12 சதவிகிதம் வரை மேம்பட்டிருந்தது. இந்த ஆராய்ச்சி இப்போது ஆரம்பநிலையில் உள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள் வதன் மூலம் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்ட முடியும்' என்று லூயிஸ்வில்லா பல்கலைக்கழக விஞ்ஞானி ராபர்டோ போலி தெரிவித்தார். நோயாளிகளிடமிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவற்றை 4 மாதங்கள் ஆய்வகத்தில் வளர்க்கிறோம். அதன் பின்னர் தனிச் சிறப்புக்கருவி மூலம் அவற்றை நோயாளியின் பாதிக்கப்பட்ட இதயப் பகுதியில் செலுத்துகிறோம். இந்தச் சிகிச்சை மருத்துவத் துறையில் மிகச் சாதனையாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் 10 கோடி இதய நோயாளிகள் இருப்பதாகவும், உலக இதய நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்றும் அண்மையில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

2 ஜி புதிய வழக்கு - சிபிஐ ரெய்ட்!

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் புதிய வழக்கு ஒன்றை சிபிஐ பதிவு செய்துள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர் மறைந்த பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மகாஜன் காலத்தில் ஒதுக்கீட்டு உரிமம் பெற்ற ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.

முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் ஷியாமல் கோஷ் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. இந்த இருவரும் பாஜக ஆட்சிக் காலத்தில் பதவியில் இருந்தவர்கள்.

இந்த சோதனை குறித்து பாரதி ஏர்டெல் கருத்து தெரிவிக்கையில், "அரசு கொள்கைகளுக்கு உட்பட்டுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றுள்ளோம். இது தொடர்பான எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்க தயார்," என்று கூறியுள்ளது.ராஜபாட்டை திரும்பக் கொடுத்தது சன்

ஆட்சிமாற்றம் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுள்ளன. புதிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்குவதில் பின்தங்கிவிட்டது. சன் கடைசியாக வாங்கிய வாகை சூடவா மற்றும் வெடி ஆகிய இரண்டு படங்கள்தான். தற்போது தெய்வத்திருமகள் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் ராஜபாட்டை படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை வாங்கியது சன். இந்தப் படம் ஒரு பக்கா மசாலா என்பதால் கட்டாய வெற்றி என்பதை அவதாணித்து படத்தை வாங்கியது. முக்கியமாக தெலுங்கு சினிமாவின் லேட்டஸ்ட் கவர்ச்சிப் புயலான தீக்‌ஷா சேத் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாவதை தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதேபோல விக்ரமுடன் ஒரு பாடலுக்கு ஸ்ரேயா, ரீமாசென் ஆகிய இரண்டு கவர்ச்சி நாயகிகள் செமத்தியான குத்தாட்டம் போட்டிருகிறார்கள். இது போதாதென்று  மற்றொரு பாடலுக்கு ஷலோனியுடன் குத்தாட்டம் போட்டு இருக்கிறார் விக்ரம்.

இந்த அம்சங்களை மனதில் வைத்தே ராஜபாட்டை படத்தை வாங்கியது.  ஆனால், சன் பிக்சர்ஸ் விநியோகத்தில் இதற்கு முன்பு  வெளியான படங்களுக்கான கணக்கை சரி செய்யாத வரை, இனிமேல் சன் பிக்சர்ஸ் படங்களை வெளியிட போவதில்லை என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்து , துணிச்சலாக போர்கோடி தூக்கி இருக்கிறார்கள்.

இதனால் ராஜபாட்டை படத்தின் விநியோக உரிமையிலிருந்து  நேற்று திடீரென விலகிவிட்டது சன் பிக்சர்ஸ்.  தற்போது இந்தப் படத்தை ராடன் டிவி வெளியிடலாம் என்கிறார்கள்.

மிக்சி – மின்சாரம்! கிரைண்டர்- பால்! பேன் – பஸ்!

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி வந்தால் எல்லாமே அதிரடி தான். இலவசமாக கொடுத்தாலும் அதிரடியாகவே இருக்கும்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இலவச டிவியை அறிவித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அந்தத் தேர்தலில் இலவசத்தை கடுமையாக விமர்சித்து, ஜெயலலிதா பேசினார். அத்தேர்தலில், தி.மு.க. அடித்துப் பிடித்து ஆட்சிக்கு வந்ததது.

அடுத்த 2011ம் ஆண்டு தேர்தலில், இலவசத்தை எதிர்த்து பேசிய ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன் ஆகிய மூன்றையும் இலவசமாக தருவதாக அறிவித்தார். ஆட்சிக்கும் வந்தார்.

அறிவித்த படி செப்டம்பர் மாதம் 15ம் தேதி பல ஊர்களில் இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் கிடைத்தது. இனி, மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் கிடைக்கப் போகிறது.

இப்படி இலவசமாக மக்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு, மின் கட்டணத்தை ஏற்றினால் எதிர்க்கவா போகிறார்கள்?

பஸ் கட்டணத்தை அதிகரித்தால், ஆர்ப்பாட்டமா செய்யப் போகிறார்கள்?

பால் விலையை உயர்த்தினால், மறியலா நடத்தப் போகிறார்கள்?

இந்த விலையை எப்படியும் மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். ஆமாம், இலவசம் கொடுக்கும் போது ஆர்ப்பரிக்கும் மக்கள், இந்த உயர்வை ஏற்றுக்கொண்டுத்தானே ஆக வேண்டும்.

லோக் "பால்" மவுசு கூடுது

கொஞ்சம் இருங்க... கொஞ்சம் இருங்க... இப்போ எங்களுக்கும் மவுசு கூடும்னு நாங்க எதிர்பார்க்கறோம். நாங்க முன்வைக்கிற மசோதாவோட மதிப்பை உணர்ந்து, தமிழ்நாட்டு முதல்வரும் முழு ஆதரவைத் தருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கறோம். ஏன்னா அவங்க இப்பதான் ஆவின் பால்-க்கு உண்டான மதிப்பை ரொம்ப உயர்த்தி உயரத்துல வெச்சிருக்காங்க. அதுமாதிரி எங்க லோக்பால்-க்கான மதிப்பையும் உணர்ந்து எங்களை உயரத்துல வைப்பாங்க. அப்புறம் பாருங்க... லோக் பால்- வேணும்னு எப்படி எதிர்க்கட்சிங்கள்லா அறிக்கை விடறாங்கண்ணு!!!

நமீதா ரசிகர்களுக்கு!

நடிகை நமீதாவை பார்த்து பலகாலமாகி விட்டதே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நற்செய்தியாக, நமீதா நடிக்கும் புதிய படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஐதராபாத்தில் போட்டனர்.

இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி நமீதா அளித்துள்ள பேட்டியில், எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது. இதுவரை கவர்ச்சி பாத்திரங்கள், போலீஸ் என்று நான் செய்துள்ளேன். ஆனால் இந்தப்படத்தில்தான் கிராமத்து பெண் வேடத்தில் வரப் போகிறேன். என்னைச் சுற்றி நடப்பது போல கதையை வைத்துள்ளனர். பெண்களுக்கான படம் இது. ஆக்ஷனும் படத்தில் உண்டு. எனது திறமையை முழுமையாக வெளிக் கொணரும் வகையிலான கதை இது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்