நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, November 19, 2011

2 ஜி புதிய வழக்கு - சிபிஐ ரெய்ட்!

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் புதிய வழக்கு ஒன்றை சிபிஐ பதிவு செய்துள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர் மறைந்த பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மகாஜன் காலத்தில் ஒதுக்கீட்டு உரிமம் பெற்ற ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது.

முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் ஷியாமல் கோஷ் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. இந்த இருவரும் பாஜக ஆட்சிக் காலத்தில் பதவியில் இருந்தவர்கள்.

இந்த சோதனை குறித்து பாரதி ஏர்டெல் கருத்து தெரிவிக்கையில், "அரசு கொள்கைகளுக்கு உட்பட்டுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றுள்ளோம். இது தொடர்பான எல்லா ஆவணங்களையும் ஒப்படைக்க தயார்," என்று கூறியுள்ளது.No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...