நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, July 25, 2012

போதை ஏறி போச் மாமோய்

வணக்கம்

நண்பர்களே இது சரக்கு பத்திய ஆய்வு  பதிவு - சரக்கு  விரும்பாதவர்ளும்  போதை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்


அதாம்பா, சரக்கு போட்டா சும்மா ஜிவ்வுன்னு ஏறுமே போதை அதை பற்றிய சிறு ஆய்வு.

போதையில மூணு வகை போதை இருக்குங்க

அது என்ன மூணு வகை போதை

அது எந்த விதம் அப்படின்னா... (கொய்யால சீக்கிரம்  சொல்லும்வோய்  நிறைய  இடத்துக்கு  போகணும்..  ஏலேய் என்னல சவுண்டு அங்கே )


ஒக்கே,,. ஒக்கே சொல்றேன்:ஒண்ணு  அற்பபோதை  

ரெண்டு  ஆடம்பர போதை 

மூணு  ராஜபோதை
அற்பபோதை 

அப்படின்னாக்க,

குவாட்டார் சரக்கில் மூடியில் கொஞ்சூண்டு ஊத்தி குடிச்சிட்டு பயபுள்ள பன்ற அளப்பரைக்கு (ஏய் ..இந்த,.. அந்தா..... தெக்கால... வடக்கால... சும்மா
கண்டமேனிக்கு அக்கப்போர் பண்ணி அடிவாங்கி சுருண்டு போய்டுவான்)   விடிஞ்ச என்ன நடந்ததுன்னு ஒரு மண்ணும் புரியாது அதுக்கு பேரு அற்பபோதை 


ஆடம்பர போதை

குவாட்டார் சரக்கை  குடிச்சிட்டு பயபுள்ள பன்ற  பந்தாவுக்கு   (வெய்ட்டரை  அழைத்து சோடா, வாட்டர், சைடிஷ், மீதி பணத்தை கீப் டிப்ஸ்)
அடிச்ச போதை  அரைகுறையா  தின்னுபோட்டு வாந்தி எடுத்து நாசம் பண்ணி  விடிஞ்ச தலைவலியோடு லொளாயே படும்  பய புள்ளக்கு பேரு  ஆடம்பர போதை


ராஜபோதை

சரக்கை புல்லா  (புல் பாட்டல) அடிச்சிட்டு  சும்மா  ஸ்டேடியா...  புல் மீல்ஸ் ஐ ஒரு கட்டு கட்டிட்டு அப்பூடிக்க நடந்து....,டூ வீலோ -போர் வீலோ ஓட்டிகினு வீட்டுல  போய் சத்தமில்லாம  தூங்கிறரான்  விடிஞ்ச ரொம்ப தெளிவா பொழப்பை பார்த்து  தானும்  சந்தோசப்பட்டு   மற்றவர்களையும் தொல்லை பண்ணாமல் இருக்காய்ங்க பாருங்க  அது தான்      ராஜபோதை. 

தொடரும்...... 
ரொம்பநாளா விளக்கம் கேட்டு தொந்தரவு பண்ண மக்காஸ்  இதுதம்யா போதையின் உள்குத்து ரகசியம்.

இப்ப இதுல யாரு யாரு எந்த எந்த கேட்டகிரின்னு சண்டை போடாம.... அப்படியே முடிஞ்ச பின்னூட்டத்திலும் செப்பலாம்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

 மக்காஸ்,.... மூன்று போதையும் ஒரே  இடத்துல


இப்பொழுதும் எப்பொழுதும் முப்பொழுதும்

முப்போதையும் மூவர்ணத்தில்

அகர வரிசையில்...அ ,  ஆ , ரா .
முக்கிய குறிப்பு:   ஸ்பேம் பாக்ஸ்