நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, October 30, 2011

3 பேரை தூக்கில் போட வேண்டும் - தமிழக அரசின் நிலையா?

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.


மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணானதாகும்.


3 பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப்பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது.


அப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.


இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்

நடிகைகளின் 'தொடைகளுக்கு' தடை?


பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கம் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் குட்டி, குட்டியாகத் தான் உடை அணிந்து வருகிறார்கள். தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்துவிட்டு பிறகு இப்படி போட்டோ எடுக்காதீர்கள், அப்படி எடுக்காதீர்கள் என்று பத்திரிக்கை புகைப்படக்காரர்களிடம் கோபித்துக்கொள்வது அதிகரித்து வருகிறது.

பார்ப்பவர்கள் மனதை கலவரப்படுத்தும் வகையில் உடை அணிவது அப்புறம் நான் எனக்கு பிடித்த மாதிரி தான் டிரெஸ் போடுவேன் ஆனால் என்னை யாரும் குறை சொல்லக் கூடாது என்று குறை கூறுவது அதிகரித்து வருகிறது. தற்போது அதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் யோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

உங்கள் மண வாழ்க்கை உறுதியானதா ? ஒரு சிறு சோதனை

பொதுவாக நாம் மோதிரத்தை நமது கையின் நான்காவது விரலில் அதாவது மோதிர விரலில் போட்டுக் கொள்கிறோம். திருமண நிச்சயதார்த்தம் அல்லது திருமணத்தின் போது மணமகளின் மோதிர விரலில்தான் மணமகன் மோதிரம் அணிவிக்கிறார்.

இவ்வாறு குறிப்பாக திருமண சடங்குகளின் போது நான்காவது விரலில் மோதிரம் அணிவிப்பதற்கு பின்னணியில் சுவாரஸ்யமான அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கதை ஒன்று உண்டு.

இப்போது நமது கை விரல்களை எடுத்துக் கொள்வோம். முதல் விரலான கட்டை விரல் உங்கள் பெற்றோர்களை குறிக்கிறது. இரண்டாம் விரலான ஆட்காட்டி விரல் உங்களுடன் பிறந்த சகோதர, சகோதரிகளை குறிக்கிறது. மூன்றாம் விரலான நடு விரல் உங்களை குறிக்கிறது. நான்காம் விரலான மோதிர விரல் உங்கள் இல்வாழ்க்கை துணையை குறிக்கிறது. ஐந்தாம் விரலான சுண்டு விரல் உங்கள் குழந்தைகளை குறிக்கிறது.

இப்போது உங்கள் இரண்டு கைகளையும் எடுத்து கீழ்வரும் படத்தில் உள்ளவாறு வைத்துக் கொள்ளுங்கள்.அதாவது ஒரு கையில் உள்ள நடு விரல் தவிர மற்ற எல்லா விரல்களையும் நீட்டி வைத்து அவ்வாறே மற்றொரு கையிலும் செய்து கொண்டு இப்போது இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். நடு விரல் நீங்கள் என்பதால் அது இந்த விளையாட்டிற்கு ஒரு ஒப்புக்கு சப்பா. எனவே அந்த விரலை மடக்கி ஒட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி இருக்கும் உங்கள் கட்டை விரல்களை மட்டும் மெல்ல விலக்கவும். (கவனிக்க : இவ்வாறு செய்யும் போது ஒட்டி இருக்கும் மற்ற விரல்களை பிரித்து விடக்கூடாது.) அவற்றை உங்களால் விலக்க அதாவது பிரிக்க முடியும். கட்டை விரல் என்பது உங்கள் பெற்றோர்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் அரவணைப்பாக இருப்பார்கள்.

அடுத்து ஆட்காட்டி விரல்கள் . இவற்றையும் அவ்வாறே விலக்க முடியும். ஏற்கனவே சொன்னவாறு ஆட்காட்டி விரல் என்பது உங்களுடன் பிறந்தவர்கள். இவர்கள் நாளாவட்டத்தில் தங்களுக்கென ஒரு குடும்பம் அமைத்துக் கொண்டு பிரிந்து விடுவார்கள்.

தொடர்ந்து வருவது நடு விரல்கள் . இவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் இவை நீங்கள்.

இதை அடுத்து மோதிர விரல்கள் . இவற்றை பிரிப்பதற்கு முன் இதற்கு பிறகு வரும் சுண்டு விரல்களை பிரிக்க முடிகிறதா என்று பாருங்கள். இதையும் பிரிக்கலாம். அதாவது சுண்டு விரல் என்பது உங்கள் குழந்தைகள். இவர்கள் வளர்ந்து தங்களுக்கென கணவன்/மனைவி என்று அமைத்துக் கொண்டு சென்று விடுவார்கள்.

இப்போது மோதிர விரல்களுக்கு வருவோம். ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கும் மோதிர விரல்களை பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெறால் மோதிர விரல்கள் உங்கள் இல்வாழ்க்கை துணைவி/ துணைவரை குறிக்கின்றது.

இல்வாழ்கை பந்தம் பிரிந்து விடக் கூடாது, உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமணத்தின் போது மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்படுகின்றது

தி(ரு).மு.க கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை!

""கருணாநிதியின் கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை, என, தி.மு.க., துணை பொதுச் செயலராக இருந்த பரிதி இளம்வழுதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபைத் தேர்தலின் போது, கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து புகார் அளித்தேன். அதன்படி, அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், எவ்வித விளக்கமும் பெறாமல் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகார் கொடுத்த என்னிடமும், விளக்கம் பெறவில்லை.

இதுபோல, மாநிலம் முழுவதும் கட்சி மீது அதிருப்தி கொண்டவர்கள் உள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, என் பிரச்னை உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை செய்வேன்.

என் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் முடிவை, கட்சித் தலைவர் கருணாநிதி மனப்பூர்வமாக செய்திருக்க மாட்டார். அவரைத் தாண்டி உள்ள அதிகார மையம் தான், இதைச் செய்துள்ளது. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. இப்பிரச்னை எழுந்த நிலையில், பொருளாளர் ஸ்டாலினை சந்திக்க நான்கு முறை முயற்சித்தேன். ஆனால், அவர் என்னை சந்திப்பதை தவிர்த்து விட்டார். அதற்கு காரணம் என்வென்று தெரியவில்லை.

கட்சித் தலைமையை சந்தித்து, விளக்கம் கொடுக்கவும் நான் செல்லவில்லை. கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். எழும்பூர் தொகுதி தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சி பேச்சாளர் ஆகிய பொறுப்புகளில் உள்ளேன். கட்சியில் தொடர்ந்து என் பணியைச் செய்வேன்.

என் போன்றவர்களையும், அடக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் கைதூக்கி விடவே தி.மு.க., துவங்கப்பட்டது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக என் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டனர் என சொல்ல முடியாது.

அ.தி.மு.க., அரசு வழக்கு தொடரும் என பயந்து, கட்சியை விமர்சிப்பதாகக் கூறுவதை ஏற்க மாட்டேன். கடந்த 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக தனியொரு நபராகச் செயல்பட்டவன். எனவே, அ.தி.மு.க., அரசு வழக்கு தொடரும் என்பதற்கு பயந்து, கட்சியை விமர்சிக்கவில்லை. இவ்வாறு பரிதி இளம்வழுதி கூறினார்

வேகம் குறையும்வரை நடிப்பேன்: ரஜினிகாந்த் உருக்கம்

 "என் வேகம் குறையும் வரை நடிப்பேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கர நேத்ராலயா விருது வழங்கும் விழாவில் உருக்கமாகப் பேசினார்.
 
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் கலைச் சேவையைப் பாராட்டி சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கம்பன் கழகத் தலைவர் இராம.வீரப்பன் வழங்கினார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஓய்வு எடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியது:
உடல்நிலை தேறிய பின்பு, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்.
ரசிகர்களின் பிரார்த்தனையாலும், ஆண்டவனின் ஆசிர்வாதத்தாலும் இப்போது முழுவதும் குணமடைந்துள்ளேன். எஸ்.பி.முத்துராமன் வெற்றி படங்கள் கொடுத்ததால் மட்டும் அவருடன் சேர்ந்து படம் செய்யவில்லை. அவருடைய அன்புக்காகத்தான் அவருடன் இனணந்து படத்தில் நடித்தேன்.
ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் எனக் குறிப்பட்டனர். ஆனால் சிவாஜியைப் போலவோ, கமலைப் போலவோ என்னிடம் நல்ல நடிப்பும், திறமையும் இல்லை. எனது பலமே எனது வேகம்தான். அந்த வேகம் குறைந்தால் என்னால் நடிக்க முடியாது. என் வேகம் குறையும் வரை நடிப்பேன் என்றார் ரஜினி

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்


வெங்காயம் இல்லாமல் உணவுப் பண்டங்கள் சுவையாக இருக்காது. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் இருக்கும் எமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் என்பன உடம்புக்கு ஊட்டச்சத்தினைத் தருகிறது. வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பார்ப்போம்.

நான்கைந்து வெங்காயத்தின் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

 வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விடுவதால் காது இரைச்சல் நீங்கும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக வெட்டி சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து அதனுடன் சேர்த்து சிறியளவு கற்கண்டுடன் பாலைச் சேர்த்து அருந்திவர எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

 வெங்காயச் சாற்றையும், சுடுநீரையும் கலந்து வாய் கொப்பளித்து வரலாம் அல்லது வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். 

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும்.

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் சாப்பிட வேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

தேள்கடித்த இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.