நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, October 30, 2011

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்


வெங்காயம் இல்லாமல் உணவுப் பண்டங்கள் சுவையாக இருக்காது. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் இருக்கும் எமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் என்பன உடம்புக்கு ஊட்டச்சத்தினைத் தருகிறது. வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பார்ப்போம்.

நான்கைந்து வெங்காயத்தின் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

 வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விடுவதால் காது இரைச்சல் நீங்கும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக வெட்டி சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து அதனுடன் சேர்த்து சிறியளவு கற்கண்டுடன் பாலைச் சேர்த்து அருந்திவர எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

 வெங்காயச் சாற்றையும், சுடுநீரையும் கலந்து வாய் கொப்பளித்து வரலாம் அல்லது வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். 

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும்.

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் சாப்பிட வேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

தேள்கடித்த இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

3 comments:

  1. பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!


    எனது வலையில் இன்று:

    தமிழ்நாடு உருவான வரலாறு

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  2. ஃபாலோவராகவும் ஜாய்ன் பண்ணிட்டேன்.. எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கு?

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி

    பஜ்ஜி விரும்புவோர் - இணைந்தமைக்கு மகிழ்ச்சி

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...