"என் வேகம் குறையும் வரை நடிப்பேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கர நேத்ராலயா விருது வழங்கும் விழாவில் உருக்கமாகப் பேசினார்.
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் கலைச் சேவையைப் பாராட்டி சங்கர ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கம்பன் கழகத் தலைவர் இராம.வீரப்பன் வழங்கினார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஓய்வு எடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியது:
உடல்நிலை தேறிய பின்பு, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்.
ரசிகர்களின் பிரார்த்தனையாலும், ஆண்டவனின் ஆசிர்வாதத்தாலும் இப்போது முழுவதும் குணமடைந்துள்ளேன். எஸ்.பி.முத்துராமன் வெற்றி படங்கள் கொடுத்ததால் மட்டும் அவருடன் சேர்ந்து படம் செய்யவில்லை. அவருடைய அன்புக்காகத்தான் அவருடன் இனணந்து படத்தில் நடித்தேன்.
ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் எனக் குறிப்பட்டனர். ஆனால் சிவாஜியைப் போலவோ, கமலைப் போலவோ என்னிடம் நல்ல நடிப்பும், திறமையும் இல்லை. எனது பலமே எனது வேகம்தான். அந்த வேகம் குறைந்தால் என்னால் நடிக்க முடியாது. என் வேகம் குறையும் வரை நடிப்பேன் என்றார் ரஜினி
இப்படி வெளிப்படையா கதைப்பதற்கே ஒரு தில்லு வேணும்..
ReplyDeleteநீ எப்பவுமே சூப்பர் இல்ல அதுக்கு மேல ஒரு ஸ்டார்.. ஐ லவ் யூ தலைவா!!!
உனக்கு ஒன்னும் ஆகாது.. கடவுள் ஆசி எப்பவும் இருக்கு
கறுவல் said...
ReplyDeleteஇப்படி வெளிப்படையா கதைப்பதற்கே ஒரு தில்லு வேணும்..
வருகைக்கு நன்றி
ரஜினி ரஜினி தான்