நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, December 3, 2011

பெங்களூர் சிறந்த நகரம்

இந்தியாவில் மக்கள் வசிக்க சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. அதேசமயம், பாதுகாப்பில் சென்னைக்குதான் முதலிடம் கிடைத்துள்ளது.

உலகில் வாழ தகுதியான நாடு மற்றும் நகரங்களின் வரிசை குறித்து மெர்சர் என்னும் நிறுவனம் நடுத்திய கருத்துகணிப்பில் இது வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள், பாதுகாப்பு சூழல், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் உலக அளவில் மக்கள் வசிக்க சிறந்த நகரமாக ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னா நகரம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூரிச், ஆக்லாந்து போன்ற நகரங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

பெங்களூர் சிறந்த நகரம்

இந்தியாவில் மக்கள் வசிக்க ஏற்ற மிகச்சிறந்த நகரமாக பெங்களூர் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. இது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதன்மை இடத்தை பெற்றுள்ளது. உலக அளவில் பெங்களூர் 141 இடத்தை பெற்றுள்ளது. டெல்லி 143 வது இடத்தையும், மும்பை 144 வது இடத்தையும், சென்னை 150 வது இடத்தையும், கொல்கத்தா 151 வது இடத்தையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பான நகரம்
உலகிலேயே பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் ஐரோப்பாவில் உள்ள லுக்கம்பர்க் நகரம் முதன்மையிடத்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெர்ன்,ஹெல்சின்கி ஜூரிச்,வியன்னா,ஜெனிவா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.
  
சென்னை 108 வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூர் 117 இடத்தையும், டெல்லியும், கொல்கத்தாவும், 127 வது இடத்தை பிடித்துள்ளன. மும்பை 142 வது இடத்தை பிடித்துள்ளது.

‌‌பெங்களூரூவில் அமைந்துள்ள ஐ,டிதுறையி்ன் வளர்ச்சிமற்றும் பாதுகாப்பான வாழக்‌கை தரம் போன்வற்றால் இந்திய நகரங்களின் வரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் டெல்‌லியை ப‌ொறுத்தவரையில் அரசியல் பரபரப்பும் மும்பை வர்த்தகத்துறையில் முதலிடம் பிடித்திருப்பதாலும், சென்னை, ‌கொல்கத்தா ஆகிய நகரங்கள் வளர்ந்து வரும் தொழில் துறையாலும் முக்‌கிய இடத்தை பிடித்துள்ளன.

ஃபிரண்ட்ஷிப் Vs கேப்டன்ஷிப்


வாங்க வாங்க... மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான் அப்படின்னு தத்துவமெல்லாம் கண்டுபிடித்து உலகத்துக்கு கொடுத்த ஊர்க்காரராச்சே!  உங்க ஃபிரண்ட்ஷிப்பாலதான் இப்போ நம்ம கப்பலே ஓடிட்டிருக்குங்கிறாங்க!!


பலமான வரவேற்பு காத்திருக்கிறது

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி 195 நாட்கள் டெல்லி திகார் சிறையிலிருந்து ஜாமீனில் நவம்பர் 29-ம் தேதி விடுதலையாகியிருக்கும் கனிமொழி இன்று டிசம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார்.

அவரை வரவேற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தி.மு.க.வினரை வரும்படி ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் கனிமொழியை தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் வரை ஊர்வலமாக அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியாக விமான நிலையத்திலிருந்து அறிவாலயம் வரை தொடர்ச்சியாக சரம் சரமாக பட்டாசு வெடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அறிவாலயம் வந்த பிறகு 1 மணி நேரம் கட்சியினருடன் அமர்ந்து பேசி அவருக்கு என்ன பதவி தரவேண்டும் என்ற முடிவும் எடுக்கப்படவிருக்கிறது.

சனிக்கிழமை கனிமொழிக்கு மகுடாபிஷேகம் நடந்தாலும் ஆச்சரியம் பட முடியாது?

பின்பு அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக சி.ஐ.டி. காலனிக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கே குடும்பத்தினரின் முக்கியமான நண்பர்களைச் சந்தித்து பேச இருக்கிறார்.

பின்னர், பிற்பகலில் தி.மு.க.வின் ’நிரந்தர’ உணவுத்துறை அமைச்சரான ஏ.வ. வேலு ஏற்பாடு செய்திருக்கும் சரவண பவன் ஹோட்டலின் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.


பேரிக்காயின் மருத்துவம்


பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது உண்மையிலேயே பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.

வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து கணிசமான அளவு உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு: வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.
பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இதயப் படபடப்பு நீங்க: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு: கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

தாய்ப்பால் சுரக்க: பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.
ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வாய்ப்புண் குணமாக: வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

வயிற்றுப் போக்கு: உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

சிறுநீரக கல்லடைப்பு நீங்க: இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது

சின்னத்திரையில் விஜய்


இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய், சின்னத்திரை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன? அதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே இதனை வரவேற்பார்கள்.

வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று பணம் சம்பாதித்த புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும்.

இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் தமிழில் நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தோல்வியில்தான் முடிந்தது.

அதன்பின் இதே மாதிரியான நிகழ்ச்சிகளை வெவ்வேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும், முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.
அதன்படி, நிகழ்ச்சியை பிரபலமான ஒருவரை வைத்துதான் நடத்த வேண்டும் என்பது நிகழ்ச்சியாளர்களின் ஒரே எண்ணம். நிகழ்ச்சியை நடத்த பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அவர்களின் ‌ஒ‌ரே சாய்ஸ் விஜய் மட்டுமே.

எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் என்று விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இறங்கி வந்தாராம் விஜய்.

இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.

நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு

நான் செத்தால், அதற்கு காங்கிரஸ் கட்சிதான் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் கிராம மக்களிடையே பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

 
அவர் மேலும்,   ‘’நான் டெல்லி ராம்லீலா மைதானத்தில், வருகிற 27-ந் தேதியில் இருந்து 8 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.

அந்த போராட்டத்தின்போது, நான் செத்தால் அதற்கு காங்கிரசே பொறுப்பு. ஜன லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் கோடிக்கணக்கான சாதாரண மக்கள் என் பின்னால் நிற்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியோ, அதன் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி போடும் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடுகிறது. அவர் லோக்பால் மசோதாவை ஆராயும் பாராளுமன்ற நிலைக்குழுவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்’’என்று கூறினார்.

அரசியலில் இது எல்லாம் சகசமப்பா

`தந்தையும் தம்பியும்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.


சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

புத்தகத்தை பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன்,

தி.மு.க.வில் இருந்து விலகி நிற்கும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் தாமிரா தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் நாளந்தா பதிப்பக ஆசிரியர் பொ.தங்கபாண்டியன் நன்றியுரை வழங்கினார்.


முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, வேல்முருகன் ஆகியோர் கைக்குலுக்கி வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றனர்.

சேரனுடன் பானு


தாமிரபரணி தண்ணீருக்கு அபார ருசி, அதே நேரத்தில் அந்த தண்ணீரை பருகியவர்களுக்கு மூக்கு முட்ட கோபமும் வருமாம்.

அப்படியொரு பெயர் ராசியுடன் தமிழ்சினிமாவில் அறிமுகமாகிய பானுவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் ஆறாகவும் ஓடவில்லை, அடி தொண்டையையும் நனைக்கவில்லை.

இத்தனைக்கும் விஷாலுடன் அவர் நடித்த இந்த தாமிரபரணி ஹிட்! அதன்பின் எடைக்கு எடை சம்பளம் கேட்டு இன்டஸ்ட்ரியையே அதிர வைத்த பானுவை சினிமாவும் மறந்தது.

ரசிகர்களும் மறந்தார்கள். அவர் மீண்டும் திரும்பி வந்தபோது யாரும்மா நீ என்று கேட்காத குறையாக வரவேற்றது தமிழ்சினிமா.

அடுத்தடுத்து அவர் நடித்த இரு படங்களும் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிக் கொள்ள, பானுவின் எதிர்காலம் பரவசமாக இல்லை.

இந்த நேரத்தில்தான் வசந்த் நடிக்கும் மூன்று பேர், மூன்று காதல் படத்தில் நடிக்க அழைத்தார்களாம். முன்னொரு காலத்தில் சம்பளத்தை கறாராக பேசிய பானு, இந்த முறை கப்சிப்பென்று ஒப்புக் கொண்டார்.

இந்த புதிய படத்தில் வசந்தின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆனாலும் பானு அவருக்கு ஜோடியில்லை. படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சேரனுக்குதான் ஜோடி.

ஜாடியும் மூடியும் சரியாதான் இருக்கு!

ஒய் திஸ் கொல வெறி....??


“ஒய் திஸ் கொல வெறிடி..” பாடலுக்கு ரஜினியை நடனம் ஆட கேட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இயக்கும் “3” படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இப்படத்துக்காக தனுஷ் எழுதி பாடிய “ஒய் திஸ் கொல வெறிடி” பாடல் சூப்பர் ஹிட்டாகி விட்டது. இப்பாடலை சிரித்தபடி கேட்டு ரசித்தார் ரஜினிகாந்த்.

பாடலுக்கான சூழல் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார். அதை அவர் விளக்கினார்.  ஏற்கனவே “3” படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினியை நடிக்க கேட்க எண்ணி இருந்தார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் “ஒய் திஸ் கொல வெறிடி” பாடல் பிரபலமாகிவிட்டதால் அந்த பாடலுக்கு வலு சேர்க்கும் விதமாக ரஜினியை நடனம் ஆட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லி இருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிப்பது உறுதியானால் படத்தில் 2 முறை இப்பாடலை இடம்பெற செய்ய ஐஸ்வர்யா திட்டமிட்டிருக்கிறார்.
சோலோவாக தனுஷ் பாடுவதுபோல் ஒரு முறையும், ரஜினியுடன் சேர்ந்து மற்றொரு முறை பாடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.

ஒஸ்தி படத்துக்கு சிக்கல்


இந்தியில் சல்மான்கான் நடித்து ஹிட்டான “டபாங்” படம் தமிழில் சிம்பு நடிக்க “ஒஸ்தி” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

தரணி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 8-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
இந்த படத்தின் “சாட்டி லைட்” உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்தும் முடிவு ஏற்படவில்லை.

இன்னும் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் மாலை முடிவு தெரியும் என்றும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.