நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, October 19, 2011

ஆண்களை கடத்தி பாலியல் சகோதரிகள் கைது

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சகோதரிகள் 3 பேரை பொலீசார் கைது செய்தனர்.
ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர்கள் ரோஸ்மேரி சாக்விசிரா(28), சோபியா(26), நெட்காய் கோக்வாரா(24). இவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவர். அவர்கள் ஆண்களைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் காரில் சென்று கொண்டிருந்த சகோதரிகள் 19 வயது வாலிபருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். 3 பெண்கள் லிப்ட் கொடுத்ததால் சந்தோஷமாக காரில் ஏறிய வாலிபரை தங்கள் வீட்டுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.

அதேபோல ராணுவ வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று தங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் பொது மக்களை காக்கும் பொலிஸ் ஒருவரையே கடத்திச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களின் செயல் குறித்து பொலீசாருக்குத் தெரிய வரவே அவர்களை பொலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறல்

கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்துகொண்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை நடிகர் நவ்தீப்பும் நண்பர்களும் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக நவ்தீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அறிந்தும் அறியாமலும், இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன் அஆஇஈ, சொல்லச்சொல்ல இனிக்கும் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நவ்தீப். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.

ஐதராபாத் அருகே மாதாபூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நவ்தீப், அவரது நண்பர் ஜெயவர்த்தன், அவர்களது கேர்ள் பிரெண்ட்கள் உள்ளிட்டோர் சென்றனர். ஓட்டலில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் இருந்தனர்.

அவர்கள் நவ்தீப்பின் கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்து அவர்களை தேடினார் நவ்தீப். அதற்குள் அவர்கள் அருகே உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றுவிட்டனர். நவ்தீப் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நவ்தீப்பின் நண்பர் ஜெயவர்த்தன் ஒரு மாணவரின் செல்போனை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். இதையடுத்து மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே மாதாபூர் போலீசில் புகார் அளித்தனர். நவ்தீப், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெ.வுக்கு திடீர் ஆதரவு

காவிரி நதி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதி நீர்ப் பங்கீடுபற்றி நாம் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நடுவர் மன்றம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதித் தீர்ப்பினை காவிரி நதி நீர் நடுவர் மன்றம் நமக்கு 2007ல் வழங்கியது.

அதன்படி நமக்கு ஆண்டுதோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு, சில, பல ஆண்டுகளில் தவறுவதும், கிருஷ்ண சாகர், கபினி போன்ற அணைகள் நிரம்பி வழியும் போது அணைகளைப் பாதுகாக்க, தண்ணீரைத் திறந்து விடுவதும் அதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்புவதும், அந்த கணக்கினையும் காட்டி, தர வேண்டிய பாக்கி நீரைக் கணக்கிட்டு கர்நாடகம் கூறுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

2007ல் வெளியிட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிடாமல் இருப்பது மிகவும் வியப்பையும், வேதனையையும் நமக்கு அளிக்கிறது. மத்திய அரசு இதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து, கடந்த 4 ஆண்டு காலம் காலதாமதம் செய்துவருவது ஏன் என்று புரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு நாம் சலுகை கேட்கவில்லை. நீதிமன்ற ஆணையை சட்டப்படி அரசிதழில் வெளியிட வேண்டிய கடமையை ஏன் செய்யவில்லை என்றுதான் மத்திய அரசிடம் நமக்குள்ள உரிமையை வற்புறுத்துகிறோம்.

முதல்வர் ஜெயலலிதா இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி வற்புறுத்தியிருப்பதற்கு அரசியல் கட்சி கண்ணோட்டமின்றி தமிழ்நாட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து நம் ஒன்றுபட்ட ஒருமித்தகுரலை எழுப்பிடத் தவறக் கூடாது.

கர்நாடக அரசியலில் ஒரு கட்சியை எதிர்த்து மற்றொரு கட்சி நடத்தினாலும், காவிரி நதி நீர்ப் பிரச்சனை போன்ற அவர்களது மாநிலப் பிரச்சனைகளில் ஒரே அணியில் நின்று குரல் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் மாத்திரம், இதுபோன்ற பொது உரிமைப் பிரச்சனைகளில் ஏன் ஒற்றுமை இல்லை?.

அரசியல் பார்வைகளால் ஒருவரை மற்றொருவர் விமர்சிப்பது- வாதங்கள்- எதிர்வாதங்களுக்கே நமது நேரம் செலவழிக்கப்பட்டு, ஒற்றுமையே காணாமற் போய்விடும் வேதனையான நிலை - இனி மேலாவது இருக்கக்கூடாது.

ஆளுங்கட்சியும் முதல்வரும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவினையும் திரட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர, கடந்த கால குற்றச்சாட்டுகளைப் புதுப்பித்து, பொது எதிரிகள் மகிழும் வண்ணம் நமது நதிகள் உரிமை பறிபோக இடமளிக்காது சிறப்பாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அரசு எடுக்கும் நல் முயற்சிகளை திராவிடர் கழகம் வரவேற்று, விரைந்து செயலாக்க துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.