நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 24, 2012

பதினைந்து அங்குல! மா.....முடியல

வணக்கம்


கணவன் மனைவியிடம்,  

உனக்கு என் மேல் விருப்பமோ, நேசிப்போ இல்ல   
.
.
.
மனைவி தனது ஐந்து குழந்தைகளையும் 
பார்த்துக்கொண்டே,  

சொன்னால்:  


என்னவோ இவங்களை எல்லாம் நான் கூகுள்ல இருந்து  பதிவிறக்கம் செய்தது மாதிரில்ல பேசுறீக !?


========================================================

ஒரு பெண்  பல்பொருள் அங்காடி செல்கிறாள்.

அங்கு விற்பனையாளரிடம் ஒரு ஜோடி திரைச்சீலை (கர்டன்) இளஞ்சிவப்பு நிறத்தில்  வேணும்  என்கிறாள்.

ஒ....எஸ்... நிறைய விதவிதமாக இருக்குங்க என்கிறான்.

அழைத்து சென்று  காண்பிக்க இளஞ்சிவப்பு திரைச்சீலைகள் அதில் பிடித்த ஒன்றை தேர்வு செய்து... இது வேண்டும் என கூறுகிறாள்.

விற்பனையாளர் "உங்களுக்கு  என்ன அளவுவில் வேண்டும்?", என்று கேட்கிறார்

"பதினைந்து அங்குல," அவள் பதிலளிக்கிறாள்.

"பதினைந்து அங்குல!" மா குழப்பத்தில் விற்பனையாளர்...எந்த அறையில்  இருக்கு?"

"பெண்மணியோ, ஒரு அறையிலும் இல்லை, அது  என் கணினிக்கு  என்று  கூறுகிறார்.

வியப்புடன் விற்பனையாளர் "மிஸ், கணினிக்கு  திரைச்சீலை தேவையில்...",

அந்த பெண்ணோ : ஹல்ல்ல்லோ ......... எங்  கணினியில் விண்டோஸ் இருக்கு.......
 
==============================================================மீன் புடிக்கிறாங்களோ??....ம்..நீங்களே பாருங்களே

முடியல

 


                                                                                           


(இக் காட்சியை  படம் பிடித்த புகைப்பட கலைஞனுக்கு, சபாஷ் ) 

======================================
மனபிராந்தி : காத்துவாக்குல & காதுல

எந்த ஒரு செயலையுமே, உண்மையிலேயே செய்ய வேண்டும் என்றால்,

அதற்கான வழியை கண்டுபிடிப்போம்.., வேணாம் என்று நினைத்தால்,

தவிர்ப்பதற்கான வழியை கண்டுபிடிப்போம்...  

===========================================================
ஆயிரம் நண்பர்களை உருவாக்குவது ஒண்ணும்  பெரிய அதிசயம் அல்ல.

ஆயிரம் பேர்  எதிர் கருத்து கூறும்  போது உங்களுடன் கைகோர்க்க  ஒரு நண்பன் இருந்தால் அதுவே அதிசயம்.  

============================================================

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


மூணு நாள ஜிந்திக்குறேன் இந்த படத்துக்கு என்னானு கமன்டலாமுன்னு
ம்ஹும்.......ஒண்ணுமே தோணலயே..... (சரக்கு தீர்ந்துடுச்சோ....)     
அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
படங்கள்: நன்றி கூகிள்