நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, April 18, 2012

பெரியாரின் விடுதலை

     மனசாட்சியின்  250வது  பதிவு:


 


 

 இணைய தளங்களின்  வாயிலாக....., 

அண்மையில்  பெரியாரின் விடுதலையை வாசிக்க நேர்ந்தது..

அதில் இருந்து சில துளிகள்:  

 


 

       தமிழனுக்குத் தலைமை தாங்க யோக்கியதை இல்லை; தமிழன் பொறாமைக்காரன்; தன் இனத்தான் தலைமைப் பதவிக்கு வந்தால் தன் சுயநலத்திற்குக் காலை வாரிவிடவே பார்ப்பான்; அதனால்தான் தமிழ்த் தலைவன் இதுவரை ஏற்படவில்லை." - [பெரியார், 01.07.1954]

 
    "உள்ளபடியே வயிறு எரிந்து பேசுகிறேன் இவ்வளவு நடந்த பிறகும் மானமுள்ள தமிழன் எவனாவது காங்கிரசில் இருப்பானா? சும்மா சுயநலத்துக்கும், புகழுக்கு இருப்பவர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மற்றவர்களைக் கேட்கிறேன்." - [பெரியார், 28.08.1953]

 

 
   இந்த அரசியல் கட்சி என்னும் நோய்க்கு ஆட்படாமல் தப்பித்து உள்ள மனிதர்களே மிக மிகக் குறைவு! எவனை எடுத்துக் கொண்டாலும் நான் அந்தக் கட்சி! நான் இந்தக் கட்சி! வெங்காயம் இப்படித்தான் கூறுவான்! இந்த அரசியல் கட்சிகளால் இந்த நாட்டுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படவில்லை என்றாலும் - தீமைதான் மிகுதியாக ஏற்படுகின்றன. - [பெரியார், 'விடுதலை', 22.07.1960]  
      

 

பெண்களுக்கும் ஆண்களைப் போல சரி சமமான உரிமைகள் அத்தனையும் இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் சமுதாயம், உலக சமுதாயத்திற்குப் பயன்பெற முடியும். இப்போது பெண்கள், சமுதாயத்திற்கு பயன்படாமல் போய் விட்டார்கள். இது மாறினால் தான் நாடு முன்னேற்ற மடைய முடியும். - பெரியார், ['விடுதலை' 06.12.1968]


 
பெண்ணிற்குத் தான் பத்தினி, பதிவிரதை என்றானே ஒழிய, ஆணிற்குப் பதிவிரதன் - பத்தினன் என்று வரம்பு சொல்லக் கிடையாது. - பெரியார், ['விடுதலை' 06.12.1968]

 

நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது? 100-க்கு 90-தாலி அறுப்பதற்குத்தானே! பெண்ணை "முண்டச்சி"யாக்கவும், சகுனத் தடையாக்கவும், ஆண்கள் பெண்களை மிரட்டவும், அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும் தான் பயன்படுகின்றன. - பெரியார், ['விடுதலை' 15.11.1968]

 

 
கண்ணகி : "நம் நாட்டிலிருக்கிற கோடிக்கணக்கான பெண்களில் அவள் ஒருத்திதான் பத்தினி என்றால் மற்ற பெண்கள் எல்லாம் யார்? உன் தாய், என் தாய், உன் தங்கை, என் தங்கை, மற்ற பெண்கள் அனைவரும் பத்தினித் தன்மை அற்ற விபசாரிகளா? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ஒருத்தியை மட்டும் பத்தினி என்று புகழ வேண்டுமென்று கேட்கிறேன்." - பெரியார், ['விடுதலை' 15.11.1968]

 
நான் கடவுள் மறுப்புக் கூறுவது மனிதனின் அறிவைத் தூய்மைப்படுத்தி அவனது அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். மனிதனின் அறிவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவே கூறுகின்றேன். - பெரியார், ['விடுதலை' 15.11.1968]



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இல்லை.!  மனசாட்சி இடம் தரல....