நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, June 24, 2014

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும்...

பத்து கேள்விகள்  எ'மது'  பதில்கள்
 
 
இந்த களத்தில் எம்மை எறக்கிவிட்ட ச்சே கோத்துவிட்ட தோழர் இல்யாஸ்.....வாழ்க வளமுடன்.
 
 
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்கொண்டாட விரும்புகிறீர்கள்? 
 
எ'மது'  ஆரோக்கியத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றிகள் - ஒங்களுடன் சேர்ந்து கொண்டாடவே விருப்பம்.
 
 
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
 
தெனம் தெனம் புதுசு புதுசா கத்துக்கிட்டுதான்  இருக்கேன் - (இந்தா, 10 கேள்வி 10 பதில்கள் புதுசு தானே)
 
 
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
 
 
மணி நேரத்துக்கு  முன்னாடி - கடந்த 21.9.2013  நீச்சல் குளத்தில் போட்டா எடுத்தது அதை இன்று காண நேர்ந்து அதை பேஸ்புக்குல பதிவு பண்ணுனேன்.
 
 
4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
 
 ஹிக்கும் அப்படி ஒரு நெலமை வராதுங்க 
 
 
5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
 
(எனது மகளுக்கும் - மருமகளுக்கும்) பொறந்த வீட்டு குல  பெருமையை பீத்திக்காம மனதில் நிறுத்தி, புகுந்த வீட்டு குல பெருமையை நிலைநாட்டு - வாழ்க வளமுடன்.
 

 
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 
எல்லாப்பிரச்சனையும்.....

 
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
 
சூழ்நிலை, காரண காரியங்களை பொருத்து மாறுபடும்
 

 
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 
பரப்புவோரின்  இயலாமை எண்ணி வருந்தும் அதே வேளையில்......,
எம்மை பிரபலபடுத்தும் அந்த நல்லவர்களை மனதார வாழ்த்துவேனுங்க
 
 
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

 
எமது நண்பர்......ம்.,    நண்பருக்கு நண்பர் எமது சொல் மாறுபடும்
 

 
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
 
சமையல் செய்வேன்

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும் யாமே