நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, February 21, 2012

இதயம் ஒரு கோவில்

காதலின் சின்னம் இதயம். என் இதயமே என்றுதான் காதலுக்குரியவர்களை அழைக்கின்றோம். ஆனால் அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை பெரும்பாலோனோர் கவனிப்பதே இல்லை. கண்டதையும் சாப்பிட்டால் இதயமானது பலவீனமாகிவிடும். இதயத்திற்கு ஏற்ற இதமான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.



குறைந்த கொழுப்பு

இதயத்திற்கு முக்கிய எதிரியே கொழுப்பு சத்துதான். கெட்ட கொழுப்புகள் இதய நாளங்களில் படிவதினாலே உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகின்றன.

இதயத்தை பாதுகாக்க மாமிசங்கள், பால் பொருட்கள், சீஸ், வெண்ணெய் போன்றவைகளை அதிகம் உண்ணுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

உப்பு கம்மி பண்ணுங்க

இதயத்திற்கு மற்றொரு முக்கிய எதிரி உப்பு. அதிக உப்பு சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே உணவுப் பொருட்களில் உப்பு, சோடியம் போன்றவைகளை குறைத்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும்.

அதிக கலோரி உணவுகள்

அதிக கலோரி தரக்கூடிய உணவுகளை உட்கொள்வது உடம்பை குண்டாக்கும். இதனால் உடல் பருமனுக்கு ஆளாவதோடு இதயநோய்களுக்கு வழி வகுக்கும். எனவே குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

அதிக நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியவகைகளை உண்பது இதயத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.



வறுத்தவை வேண்டாம்

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உட்கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக வேகவைத்த, உணவாகவோ, மைக்ரோவே அவனில் செய்த உணவுகளையோ உட்கொள்ளலாம்.

சமையல் எண்ணெய்

சமைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் எண்ணெய் முக்கியமானது. மக்காச்சோளம், தவிட்டு எண்ணெய், சூரியகாந்திவிதை எண்ணெய், சோயாபீன்ஸ், பருத்திவிதை, ஆலிவ் ஆயில் எண்ணெய்களை உபயோகிக்கலாம். காய்கறிகளையும், சீசனில் கிடைக்கும் பழங்களையும் உணவில் பயன்படுத்தவேண்டும். உணவியல் வல்லுநர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் இதயத்தின் ஆரோக்கியம் என்றைக்கும் பாதிக்கப்படாது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இதயம் யாருக்...கோ??.
காதல் நட்புகிட்ட கேட்டுச்சாம்:
நான் இருக்கும் போது இந்த உலகத்துல நீ எதுக்காகா?

நட்பு சொல்லுச்சாம்: நீ எங்கு எல்லாம் கண்ணீரை விட்டு வருகிறாயோ அங்கெல்லாம் நான் புன்னகையை பரப்பி வருகிறேன். 

(அஞ்சலி போட்டாவுக்கும் - காதல் நட்பு டைலாக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்.)